செவ்வாய், 19 ஜனவரி, 2016

கழிவுநீர் தொட்டியின் உள்ளே இறங்கிய நான்கு பேர் பலி...சென்னை


தமிழகத்தின் தலைநகர் சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியின் உள்ளே இறங்கிய நான்கு பேர் இன்று செவ்வாய்கிழமை பலியாயினர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் துரைப்பாக்கம் அருகில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் துப்புரவு தொழிலில் ஈடுபட்ட ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவரும், தனியார் உணவு விடுதியின் ஊழியர் ஒருவரும் என மொத்தமாக நான்கு பேர் இந்த சம்பவத்தில் இறந்துள்ளதாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த குமார் என்பவர் முதலில் விஷவாயு தாக்கி முதலில் பலியானதாகவும், தொடர்ந்து அவரை காப்பாற்ற உள்ளிறங்கிய சரவணன், வேல்முருகன் மற்றும் ராஜேஷ் ஆகியோரும் பலியானதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வல்லரசு கனவு காணும் மேட்டுக்குடி நடுத்தரவர்க்கமே முதலில் இதை கொஞ்சம் பார்....peta கூட இதுக்காக வழக்கு போடலாமே?  
இதில் துப்புரவு தொழிலாளிகளான சரவணன் மற்றும் வேல்முருகன் ஆகியோர், கழிவுநீர் தொட்டிக்குள் உள்ளிறங்கி சுத்தம் செய்ய முயன்ற குமார் என்பவரின் உறவினர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர ராஜேஷ் என்பவர் உணவு விடுதியின் ஊழியர் என்றும், இந்த மூவரின் நிலை என்ன ஆனது என்பதை அறிய சென்ற அவரும் விஷவாயு தாக்கி பலியானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். bbc.tamil.com

கருத்துகள் இல்லை: