சனி, 23 ஜனவரி, 2016

உங்கள் முதல் புத்தகத்தை எழுதுதல்பற்றி, சில ஆலோசனைகள்: என். சொக்கன்


nchokkan.wordpress.com :பல நண்பர்கள் என்னிடம் புத்தகம் எழுதுவதுபற்றிக் கேட்டுள்ளார்கள். அவரவர் தங்களுடைய துறையில் நிபுணர்கள், அல்லது அதற்கான நியாயமான முயற்சியில் இருப்பவர்கள், அதனை நூலாக எழுத என்ன வழி, நான் எதை எழுதலாம், நல்ல தலைப்பை எப்படித் தேர்வு செய்வது, பதிப்பகங்களை எப்படி அணுகுவது, அவர்கள் எப்போது நமக்குப் பதில் அனுப்புவார்கள், அதற்கு ஏதேனும் செலவு ஆகுமா, அல்லது அவர்கள் நமக்கு ராயல்டி தருவார்களா என்றெல்லாம் அவர்களுடைய கேள்விகள் இருக்கும்.
இந்நண்பர்களிடம் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன். ஏற்றுக்கொண்டு முயன்று நூல் எழுதி வெளியிட்டவர்களும் உண்டு, எழுதாதவர்களும் உண்டு. அவரவர் வசதி, அவரவர் முயற்சி.
முதல் நூல் எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்காக, என்றைக்காவது இதுபற்றிப் பொதுவில் எழுதவேண்டும் என்று நினைப்பேன், அதற்கான நேரம் இதுவரை அமையவில்லை.

சமீபத்தில் நண்பர் மதன் நூல் எழுதுகிற ஆர்வத்துடன் இதே கேள்விகளைக் கேட்டபோது, ’நேரில் வாருங்கள் காஃபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என்று சொன்னேன். அந்த உரையாடலை (அவரது அனுமதியுடன்தான்) பதிவு செய்து இங்கே வெளியிடுகிறேன். ஆர்வமிருக்கிறவர்கள் கேட்கலாம்.
முன்குறிப்புகள்:
1. இது முற்றிலும் Nonfiction எனப்படும் அபுனைவு நூல்களைப்பற்றிய உரையாடல், கதை, கவிதை, நாவல் போன்ற நூல்கள் எழுதுவோருக்கு இது பெரிதாகப் பயன்படாது
2. இது தமிழ்ப் பதிப்பகச்சூழல்பற்றிய ஓர் எழுதுபவனின் பார்வை, முழுமையாக இல்லாமலிருக்கலாம்
3. ஆங்கில நூல்கள் எழுதுவோருக்கு இது பொருந்தாமலிருக்கலாம்
4. எப்படி எழுதுவது என்பதுபற்றி இங்கே எதுவும் பேசப்படவில்லை
5. எழுதுதல்பற்றிய என் பார்வைகள் சில உங்களுக்கு உவப்பின்றி இருக்கலாம், என்னைப்பொறுத்தவரை அது ஒரு தொழில்நுட்பம்தான், அதில் கலை அமைந்தால் இறைவனருள்!
6. இதனைக் கேட்டபின் உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருப்பின் இங்கேயே எழுதலாம், அல்லது nchokkan@gmail.comக்கு
7. உங்கள் முதல் நூலுக்கு என் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை: