
makkal nala kootu iyakkam hunger strike மதுரை, ஓபுலா படித்துறை அருகில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். இதில், மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்களும், தொண்டர்களும் பங்கேற்றனர். அப்போது பேசிய வைகோ, ‘ஜல்லிக்கட்டு தடையை நீக்க தமிழக எம்.பிக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளே ஜல்லிக்கட்டு மீதான தடைக்கு காரணம். ஜல்லிக்கட்டுக்கு தடை நீடித்தால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்' என்றார். இதேபோல், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தராத மத்திய, மாநில அரசை கண்டிப்பதாக தெரிவித்த திருமாவளவன் மத்திய, மாநில அரசுகளின் செயல் மக்களை ஏமாற்றுவதாக உள்ளதாகவும் புகார் கூறினார். இது தொடர்பாக மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்களில் ஒருவரான முத்தரசன் கூறுகையில், ‘ஆந்திராவில் போட்டி நடைபெறும் நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இல்லை என்பதா? காளைகளை அவிழ்த்துவிட்டால் 144 தடை உத்தரவை போல் போலீஸ் செயல்படுகிறது' என்றார்.
://tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக