ஞாயிறு, 10 ஜூன், 2012

சமந்தா நீக்கம்! உண்மைக் காரணம் மணிரத்னம் படத்திலிருந்து

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் கடல் படத்தின் ஷூட்டிங் கடலோர கிராமங்களில் ஒரு நாளும் தடைபடாமல் நடைபெற்றுக்கொண்டிருந்தது.  
ஆனால் திடீரென கடல் படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்ட நடிகை சமந்தா படத்திலிருந்து நீக்கப்பட்டார்.  தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா மணிரதனம் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் மகன் கௌதம் நடிக்கும் கடல் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் துள்ளி குதித்தை அனைவரும் அறிவர். கடல் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்ட போது, சமந்தாவிடமிருந்து கால்ஷீட்டை மொத்தமாக தருவதாக வாய் 
வார்த்தையாய் கேட்டுக்கொண்டது தான் கடல் படக்குழுவின் தவறு என்கின்றனர் படக்குழுவில் உள்ளவர்கள்.>அனைத்து நிபந்தனைகளுக்கும் சிரித்தவாறே ஒப்புக்கொண்ட சமந்தா இப்படி கால்ஷீட் குளறுபடி செய்வார் என்று மணிரத்னமே எதிர்பார்த்திருக்கமாட்டார் போல. மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது சமந்தா வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். ஆனால் கடல் படம் ஓகே ஆனதும் தான் பல படங்கள் வந்து குவிந்தன. அதன் விளைவு இன்று 8 படங்களுக்கு மேல் சமந்தாவின் பர்ஸில். 

அதிகமான படங்களை ஒப்புக்கொண்டதால் முன்னர் கூறியது போல கால்ஷீட்டை மொத்தமாக தரமுடியாது. கொஞ்சம் கொஞ்சமாக நடித்துக்கொடுக்கிறாராம் என்று சமந்தா தரப்பிலிருந்து கடல் பட யூனிட்டிற்கு செய்தி போக, பரவாயில்லை மொத்தமாகவே வேறு படத்திற்கு கொடுக்கச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறது கடல் படக்குழு. 

’கடல் படத்திலிருந்து சமந்தா விலக்கப்பட்டார்’ என்ற செய்தி வருவதற்கு முன்னரே டுவிட்டரில் சமந்தா “ கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டதால் கடல் படத்திலிருந்து விலகிவிட்டேன். அது எனக்கு ஒரு இழப்பு தான் இருந்தாலும் ஈடு கட்ட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.கடல் படத்திலிருந்து சமந்தா விலகினார்’ என்ற செய்தி மட்டும் ரசிகர்களுக்கு போதாது என்பதால், கடல் பட யூனிட்டில் உள்ளவர்களிடம் இது பற்றி கேட்ட போது ”நடிகை சமந்தாவுடன் கால்ஷீட் பிரச்சினை இருக்கிறது என்றாலும், அவர் விலகியதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. கடல் படத்தின் ஹீரோ கௌதமிற்கு ஜோடியாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு கதைப்படி 14 வயது தான் ஆகிறது. கௌதம் கதாபாத்திரத்திற்கு 17 வயது.;19 வயதே ஆன கௌதம் இளவயது கதாநாயகனாக பொருந்திவிட்டார். ஆனால் 27 வயது ஆகும் சமந்தா 14 வயது பெண்ணின் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அவர் முகத்தில் முதிர்ச்சி தெரிந்திருக்கிறது. சமந்தாவைவிட கௌதம் 8 வயது சிறியவராக இருப்பதால் கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை. அவர்கள் இருவரையும் கேமராவில் பார்த்த இயக்குனர் மணிரதனத்திற்க்கும், கேமராமேன் ராஜீவ் மேனனுக்கும் திருப்தி ஏற்படவில்லை. எனவே தான் கால்ஷீட் பிரச்சினையின் மூலம் சமந்தாவை நீக்கிவிட்டனர்” என்று கூறுகின்றனர்.மணிரதனம் படத்தில் நடித்த பல ஹீரோயின்கள் திரையுலகின் டாப் ஹீரோயின்களாக வலம் வந்திருக்கின்றனர். இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினையால் சமந்தா விலகியிருப்பதை பற்றி கோடம்பாக்கத்தில் வசிக்கும் நடிகைகளிடம் கேட்ட போது “நாங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் மணிரதனம் சார் படத்தைத் தான் வலது கையில் வைத்திருப்போம்” என்று கூறுகின்றனர். 

கடல் படத்திலிருந்து விலகினாலும் சமந்தாவிடம் இருக்கும் இரு முக்கிய படங்கள் ராஜமௌளி இயக்கத்தில் ரிலீஸாகவிருக்கும் ’நான் ஈ’ படமும், கௌதம் மேனனின் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படமும் தான். சமந்தாவை நீக்கியபின் பொருத்தமான நடிகையை தேர்வு செய்வதில் கவனமாக இருந்த மணிரத்னம் தேர்ந்தெடுத்தது நடிகை ராதாவின் இளைய மகள் துளசி.ராதாவின் மூத்த மகள் கார்த்திகா ஏற்கனவே சினிமாவில் கால் பதித்துவிட்டார். இப்போது ராதாவின் இளையமகளும் சினிமாவில் நுழைகிறார். மணிரத்னம் இயக்கத்தில் ராதா நடித்த ’இதயகோயில்’ படம் மெகா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.<

கருத்துகள் இல்லை: