புதன், 13 ஜூன், 2012

முகத்திரையை நீக்க மறுத்த சவுதி பெண்களை ஏர்போர்ட்டோடு திருப்பியனுப்பிய பிரான்ஸ்

பாரீஸ்: முகத்திரையை நீக்க மறுத்த 3 சவுதி பெண்களை பிரான்ஸுக்குள் நுழைய அனுமதி மறுத்து அவர்களை திருப்பியனுப்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கத்தார், தோஹாவில் இருந்து பர்தா அணிந்து முகத்திரையுடன் 3 சவுதி பெண்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள சார்லஸ் டீ கால் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அங்குள்ள அதிகாரிகள் அந்த பெண்களை முகத்திரையை நீக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண்கள் தங்கள் முகத்திரை நீக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அப்பெண்கள் பிரான்ஸுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் உடனே தோஹாவுக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் பிரான்சிஸ் தான் முதன்முதலாக முகத்திரை அணிய தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸை தொடர்ந்து பெல்ஜியம் மற்றும் ஹாலந்திலும் முகத்திரை அணிய தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2011ம் ஆண்டு நிக்கோலஸ் சார்கோஸி அரசு இஸ்லாமிய பெண்கள் பர்தா மற்றும் தலையை மறைக்கும் ஸ்கார்ப் அணிய தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் தடை உத்தரவு அமலில் உள்ளது.

கருத்துகள் இல்லை: