புதன், 13 ஜூன், 2012

ஆந்திராவில் ஜெகனுக்கு 15 சீட் கிடைக்கும்: கருத்துக்கணிப்பு ஒட்டு மொத்த ரெட்டி சமூகமும் ஜெகனுக்கே ஓட்டு


 Ysr Congress May Get 15 Seats Andhra By Poll Exit Poll
ஹைதராபாத்: ஆந்திராவில் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 15 இடங்களை வெல்லும்.அதேபோல நெல்லூர் எம்.பிதொகுதி இடைத் தேர்தலிலும் ஜெகனுக்கே ஜெயம் கிடைக்கும் என்றும் எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும் ஒட்டுமொத்த ரெட்டி சமூகமும் ஜெகன் கட்சிக்கே வாக்களித்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
ஆந்திராவில் நேற்று 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும், நெல்லூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடந்தது. இதில் ஒரு சட்டசபைத் தொகுதி தெலுங்கானா பகுதியில் உள்ளது. மற்ற தொகுதிகள் ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ளன.ஜெகனுக்கு
ஆந்திராவில்நடந்த இடைத் தேர்தல்தான் அனைவரது எதிர்பார்ப்புகளையும் கவர்ந்துள்ளது. காரணம், ஜெகன் மோகன் ரெட்டியால் இங்கு காங்கிரஸ் பெரும் அடியை வாங்கப் போகிறது என்ற தகவலால்.
ஆந்திராவில் தேர்தலுக்குப் பின்னர் நடந்த எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர அழிவுக்கு கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே சேனல் நடத்திய எக்சிட் போலில், கடப்பா எம்.பி. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 13 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெறும்.நெல்லூர் எம்.பி. தொகுதியிலும் அக்கட்சிக்கே ஜெயம் கிடைக்கும்.
காங்கிரஸ், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெறும். தெலுங்கானாவில் உள்ள ஒரே தொகுதியை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே கைப்பற்றும்.
இந்தஇடைத் தேர்தலில் ஜெகன் மோகன் சார்ந்த ரெட்டி சமுதாயத்தினரின் வாக்குகள் முழுமையாக அவரது கட்சிக்கே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரஸில் இணைந்தது பலன் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: