வெள்ளி, 15 ஜூன், 2012

Andhra ஜெகன் அபாரவெற்றி 19 இல் 16 தொகுதிகளை ஜெகன் கட்சி கைபற்றியது

 Ap By Polls Results Live Ysr Cong Ahead In 14 Seats

ஆந்திரா இடைத்தேர்தல்: 19ல் 16 இடங்களில் ஜெகன் கட்சி அபார வெற்றி- காங்கிரஸ் படுதோல்வி

ஹைதராபாத்: ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 1 லோக்சபா தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 லோக்சபா தொகுதியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 1 லோக்சபா தொகுதிக்கும் கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 13 மையங்களில் எண்ணப்பட்டன. இதில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 லோக்சபா தொகுதியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. இது தவிர காங்கிரஸ் 2 இடங்களிலும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தலில் பதிவான 79.69 சதவீத வாக்குகள் ஜெகன் மீது உள்ள அனுதாபத்தால் பதிவானது என்று கூறப்படுகிறது. கடந்த 2009ம் ஆண்டு 18 சட்டசபை தொகுதிகளுக்கும், நெல்லூர் லோக்சபா தொகுதிக்கும் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 16 சட்டசபை தொகுதிகளிலும், பிரஜா ராஜ்ஜியம் கட்சி 2 சட்டசபை தொகுதிகளிலும் வென்றன. மேலும் நெல்லூர் லோக்சபா தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது.
காங்கிரஸ் 4 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால் தான் ஆட்சிக்கு ஆபத்தில்லை என்ற நிலையில் அக்கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: