சனி, 16 ஜூன், 2012

நித்தியின் சீடர்களிடம் மாட்டிக்கொண்ட மதுரை ஆதீனகர்த்தர்


suji dsouza - melbourn,ஆஸ்திரேலியா

எதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டிருக்கு அவருக்கு. உதவிட எல்லோரும் தயார்.இப்போது நித்தியும் ஜெயிலில் இருக்க்கிறான்.இது தான் சரியான தருணம்.உண்மையை உலகுக்குக் கூறவும்.தமிழ் நாட்டை காப்பாற்றவும்.

சென்னை: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது கணீர் பேச்சால் மக்களைக் கவர்ந்த மதுரை ஆதீனகர்த்தர், தற்போது நித்தியின் சீடர்களிடம் சிக்கி சிறைக் கைதியாக, மிகவும் கவலையுடன் உடல் தளர்ந்தவராக, யாரையுமே தன் விருப்பப்படி தொடர்பு கொள்ள முடியாதவராக இருக்கிறார் என, அவரின் நெருங்கிய நண்பர்களும், சீடர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
கம்பீரமான நடை, தெளிவான பேச்சு, கணீரென்ற குரல்... இது, மதுரை ஆதீனகர்த்தரின் அடையாளம். மேடையில் யாருக்கும் அஞ்சாமல் பேசும் துணிவு, மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவிக்கும் தைரியம், இவையெல்லாம் அவரது தனிச் சிறப்பான அடையாளங்கள். ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அவரது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. அவரால் தன் விருப்பப்படி யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சிறைக் கைதியாக உள்ளார். அவரது தனிப்பட்ட அலைபேசியும் கூட, இப்போது அவர் வசம் இல்லை. அதையும், நித்தியின் சீடர்கள் தங்கள் வசப்படுத்தியுள்ளதாக, ஆதீனகர்த்தரின் நெருங்கிய நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகின்றனர்.


இதுகுறித்து, ஆதீனகர்த்தருடன் நீண்ட காலம் நண்பராக இருந்தவரும், தற்போது, மதுரை ஆதீன மீட்புக்குழுத் தலைவருமான நெல்லை கண்ணன் கூறியதாவது: ஆதீனகர்த்தர், இப்போது தன் வசம் இல்லை. பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்த சொரூபானந்தாவின் அடிமையாக சிறைப்பட்டுள்ளார். கர்நாடகத்தில் நித்யானந்தா மீண்டும் வழக்கில் சிக்கி, ஜெயிலுக்கு சென்று மீண்டும் ஜாமின் வாங்கியநிலையிலும் கூட, சொரூபானந்தாவுடன் சேர்ந்து அவர் வெடிவெடிப்பதும், மீண்டும் நித்யானந்தா திரும்பிவிடுவார் என, பத்திரிகைகளுக்கு பேட்டியளிப்பதும், அவர் நித்தி கும்பலிடம் சிக்கி, அவர்களின் கைப்பாவையாக இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. நான், கடந்த மே 13ம் தேதியன்று, ஆதீனகர்த்தரிடம் அலைபேசியில் பேசினேன். அதன்பின், அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் தற்போது அச்சத்திலும், பீதியிலும் உள்ளார். மிகவும் தளர்ந்து, கவலையுடன் காணப்படுகிறார். அவரது உயிரைக் காக்க வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு இருக்கிறது. இவ்வாறு நெல்லை கண்ணன் தெரிவித்தார்.

ஆதீனகர்த்தரின் நெருங்கிய நண்பரும், சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவருமான ராமராஜன் கூறுகையில், "அவரை ஏதோ ஒரு சிக்கலுக்கு ஆட்படுத்தி விட்டனர். ஒன்றரை மாதத்திற்கு முன், அவருடன் அலைபேசியில் பேசி, அவர் தவறான வழிக்குச் செல்வதாகக் கூறினேன். அதன்பின், அவரைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. கடந்த 8ம் தேதி, அவர் பிடதியில் சிக்கியிருந்தபோது, அவரது அலைபேசிக்கு கூப்பிட்டேன். அவர் எடுக்கவில்லை,' என தெரிவித்தார்.

ஆதீனகர்த்தரின் மிக நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: நான் அவரை, கடந்தாண்டு இறுதியில் நேரில் சந்தித்தேன். அதன்பின், கடந்த 8ம் தேதி, அவர் பிடதியில் இருந்த போது, அவரது அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அவர் என்னிடம், மதுரைக்கு, தான் புறப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார். ஆனால், அதன்பின் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை

கருத்துகள் இல்லை: