சனி, 16 ஜூன், 2012

தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!


கொல்கத்தா: ஆசிய கோப்பை தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான பிங்கி பிரமனிக் என்ற வீராங்கனையை போலீஸார் கற்பழிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர். 
அவர் உண்மையில் ஆண் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பிங்கியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம் பெற்றிருந்தவர் பிங்கி. அதேபோல அதே ஆண்டு மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றார். 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் பிங்கி மீது மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பகுய்ஹாத்தி காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்தார். அதில், தன்னை பிங்கி கற்பழித்து விட்டதாகவும், அவர் ஆண் என்றும், தானும், பிங்கியும் சில மாதங்களாக பழகி வருவதாகவும், தன்னை கல்யாணம் செய்து கொள்ள பிங்கி மறுப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து பிங்கியைப் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஆண் என்பது தெரிய வந்ததாக போலீஸார் கூறுகிறார்கள். இதையடுத்து அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு பரிசோதனையை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அது முடிந்ததும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
வீராங்கனை பிங்கி ஆண் என்றும், அவர் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார் என்றும் வெளியாகியுள்ள தகவலால் மேற்கு வங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: