திங்கள், 11 ஜூன், 2012

பஞ்சாலை! தொழிலாளர்களை ஆதரிக்கிறபடமா?


இது தொழிலாளர்களை ஆதரிக்கிறபடமா? முதலாளிகளை ஆதரிக்கிற படமா? என்பதைத் தெளிவாகச் சொல்லாமல் ரொம்ப நல்லாவே குழப்பி இருக்கிறார் இயக்குனர். பஞ்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்வதால் ஆஸ்துமா போன்ற பல வியாதிகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை அனுபவ ரீதியாக நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட எந்த செய்தியும் இதில் சொல்லப்படவில்லை.  
படத்த பார்க்கிறாங்களோ பார்க்கலியோ...  தலைப்பு நல்லா இருக்கேன்னு மனசுக்குள்ளயாச்சும் ரசிக்கிற மாதிரி இருக்கு இந்த டைட்டில்.. கிருஷ்ணவேணி பஞ்சாலை.. படம் ஆரம்பிக்கும் போது..  ஆஹா... பீரியட் ஃபிலிமா இருக்கும் போலன்னு எதிர்பார்ப்பை எகிற வைக்குது.
ஆனா..   

விமர்சனத்தின் தொடக்கத்திலேயே இப்படி ஆனா போட்டுட்டீங்கள்ல.. அப்ப   வெளங்கின மாதிரிதான்னு.. உடனே ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க.. நாங்க முழுப் படமும் பார்த்தோம்ல. அத மாதிரி நீங்களும் முழு விமர்சனத்தயும் பொறுமையா படிச்சாகணும்.
கதை நல்லாயிருந்தா போதும். நடிக்கிறவங்க புதுமுகா இருந்தாலும்.. அது லோ பட்ஜெட் படமா இருந்தாலும்..  பிச்சிக்கிட்டு ஓடும்னு, பாசிட்டிவா நெனச்சுத்தான் படத்த எடுத்திருக்காங்க..
ஒரு நல்ல கதைன்னா -
மொதல்ல கதைக் களம் நல்லாயிருக்கணும். அதான் டைட்டில்லயே களம் இருக்குல்ல. ஆமா, பஞ்சாலைதான் கதைக் களம். அதுல கண்டிப்பா காதல் இருக்கணும். பீரியட் பிலிமாச்சே, அப்ப ஜாதி வெறிய கொஞ்சம் தூக்கலா காட்டணும். கிருஷ்ணவேணி பஞ்சாலைன்னு பேர வச்சிட்டு. மில்லு ஓடுறத காட்டாம இருக்க முடியுமா? சரி, படம் முழுக்க மில்லு ஓடிக்கிட்டேயிருந்தா எப்படி திருப்பம் வேணாமா? அப்ப ஓடுற மில்லு நிக்கணும். ஆமா, ஸ்டிரைக் பெரிசா நடக்கணும்.. தொழிலாளர்கள் வறுமைல துடிக்கணும்.. அதே நேரத்துல, மத்த படங்கள்ல வர்ற மாதிரி முதலாளின்னா கெட்டவன்னு நாம காட்டிடக் கூடாதுங்கிறது ரொம்பவே உறுதியா இருக்காங்க..
அப்ப முதலாளிய நல்லவனா காட்டணும். நல்லவனா இருந்தா அவன் நல்லா வாழ்ந்திருவானா? அந்த முதலாளி கெட்டுச் சீரழியணும். வேதனையில துடிக்கணும். அப்புறம், ஒரு காதல்ன்னா சரிப்படாது.. ரெண்டு ஜோடிய காட்டணும். ஒரு ஜோடியோட வாழ்க்கைய பார்க்கிறவங்க பரிதவிக்கிற மாதிரி பாதியிலயே அவங்கள க்ளோஸ் பண்ணிடணும்.. இன்னொரு ஜோடிய வாழ வைக்கணும். அதான் அதேதான்... விடாத பிடிச்சிக்கோன்னு  கதை பண்ணி.. படமா எடுத்திருக்காங்க..
 யாரைக் கொன்னாலும். எதிர்பாராத திருப்பமா எதைக் காட்டினாலும். நம்ம மனசு கொஞ்சமாச்சும் சஞ்சலப்படணுமே..? ஆமா... அப்படி ஒரு கல்லுமனசுக்காரனா தமிழ் ரசிகர்களை ஆக்கி புண்ணியம் தேடிக்கிருச்சு இந்தப் படம்
ஒவ்வொரு சீன் முடியும் போதும்., அடுத்து எதக் காமிச்சு தொலைக்கப் போறீங்கன்னு சலிப்புத்தான் வருது. படத்துல ஒரு கேரக்டர் மில்லு முதலாளிகிட்ட பேசுற வசனம் இது -
சார்.. உங்க கிட்டே இருக்கிற தாராள குணத்தையும், தொழிலையும் போட்டுக்குழப்பிக்காதீங்க
  இதன் மூலம் இந்தச் சினிமா சொல்ல வருகின்ற நீதி.?  தப்பித் தவறியும் கூட தொழிலாளர்கள் விஷயத்தில் முதலாளிகள் கருணை காட்டி விடக் கூடாதென்பதா?
 இன்னொரு டயலாக்
 சிக்கலான நேரங்களில் எடுக்கப்படும் நேர்மையான முடிவுகளிலும் கூட சில சமயங்களில் தவறுகள் நேர்ந்து விடுகின்றன..” 
 என்னே ஒரு சத்தியமான வார்த்தை!
 கிருஷ்ணவேணி பஞ்சாலை தயாரிப்பாளர்கள் மார்தட்டிக் கொள்ளலாம், துளியும் ஆபாசமின்றி துணிச்சலாக ஒரு தமிழ்ப் படம் எடுத்திருக்கிறோம் என்று.


1979-ல வெளியாச்சு  புதிய வார்ப்புகள்னு ஒரு படம். அதுல பாக்கியராஜை ஹீரோவா காட்டுறப்ப..’ன்னு எதிர்ப்புக் குரல் ஆடியன்ஸிடமிருந்து கேட்கும். போகப் போக, பாக்கியராஜ் எப்படி இருந்தா என்ன? படம் நல்லாயிருக்கேன்னு உச் கொட்டுவாங்க. அதே மாதிரிதான், கிழக்கே போகும் ரயில்ன்னு ஒரு படம். ராதிகாவ கதாநாயகியா காட்டுறப்ப.. அய்ய இதெல்லாம் ஹீரோயினாக்கும்னு எரிச்சல் வரும்.
ஆனா,அடுத்தடுத்து காட்சிகள் ஏற்படுத்துகிற பாதிப்பில் ராதிகாவயே ரசிக்க வைக்கும். அதெல்லாம் பாரதிராஜா படம். அப்ப இது?  தனபால் பத்மனாபன் படமாச்சே..! இதுலயும் ஹீரோ ஹேமச்சந்திரன் வர்றாரு.. ஹீரோயின் நந்தனா வர்றாங்கஆமாம், ஒப்பனை கலையாத முகங்களாக வந்து வந்து போறாங்க. அப்ப ஒரு எதிர்ப்புக் குரலோ.. ஆரவார ஆர்ப்பரிப்போ.. ஆடியன்ஸ் சைடுல இருந்து ரெஸ்பான்ஸோ எதுவும்  இல்லை.. இல்லவே இல்லை, ஆமா... பாடம் பார்க்கிறவன் சீட்டுலயே செத்துச் சுண்ணாம்பால்ல கிடக்கிறான்.?
அட, போங்கப்பா... ஒரு புதிய முயற்சியை இப்படியா நக்கலடிக்கிறதுன்னு விமர்சனத்த படிக்கிற யாராச்சும் எடுத்துக்கிட்டீங்கன்னா... நீங்க இந்தப் படத்த பார்த்தே ஆகணும், ஆமா.. உங்கள மாதிரி ரசிகர்களை நம்பித்தானே படமே எடுத்திருக்காங்க..? 
52 வருடங்களுக்கு முன் வெளி வந்த அந்தக் கருப்பு-வெள்ளை சினிமாவின் கதைக் களம் மில் மற்றும் அதன் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டதுதான். அதிலும் காதல் உண்டு. வேலை நிறுத்தம் உண்டு. தொழிலாளர்களின் போராட்டம் உண்டு. அட, ஆமாங்க தனபால் பத்மனாபன் அப்பவே வாசன்னு ஒரு ஜாம்பவான் இரும்புத்திரைங்கிற ஒரு படத்தைக் கொடுத்துட்டாரு.. நீங்க என்னடான்னா.. இந்தக் காலத்துல.. அதுவும் டாகுமெண்டரி மாதிரி இப்படி ஒரு சினிமாவ தந்திருக்கீங்க...!
ஒரு ஆறுதலான விஷயம்.. படம் 113 நிமிஷம் தான் ஓடுது.. ஆமா.. ரசிகர்களைக் கொடுமைப் படுத்துற நேரத்த ரொம்பவே சுருக்கிட்டாங்க..
இந்தப் படத்துல ஈவு இரக்கமில்லாம   வர்ற அம்மா கேரக்டர் சாதி வெறி பிடிச்சு பெத்த மகளையே விஷத்த வச்சு கொல்லுது.. தானும் விஷத்த சோத்துல பிசைஞ்சு சாப்பிட்டு செத்துப் போகுது.. அந்த பாதிப்போ என்னவோ.. விமர்சிக்கும் போது நமக்கும் அது தொத்திக்கிருச்சு..  
டைரக்டர் சார்...  பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!
 -சி.என்.இராமகிருஷ்ணன்



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :


Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :

கருத்துகள் இல்லை: