வெள்ளி, 15 ஜூன், 2012

அதிமுக வெற்றி BUT அமைச்சர்கள் பீதி...! வாக்குகள் குறைந்து இருந்தால்


 Admk Ll Secure Pudukkottai But
 பல அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் தோல்வி அடைந்து இருப்பார்கள். அவர்கள் யார் என அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்று சின்ன பையனைக் கேட்டால் கூட அதிமுக தான் என்று சொல்வான். தொகுதியின் உள்ள 1,94,680 வாக்காளர்களில் 1,43,277 பேர் தங்களது வாக்குகளைப் வெற்றிகரமாக பதிவு செய்தனர்.
புதுக்கோட்டையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை நடந்தது. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்கு வித்தியாத்தில் தான் வென்றுள்ளார். அதிமுக கணக்குப் போட்டபடி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தை தாண்டவில்லை.

இந்த இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் கூட கவலைப்படாத போது வெற்றிக் களிப்பில் உள்ள அதிமுக அமைச்சர்கள் தான் தங்களது அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறார்களாம்.
சிலருக்கு இப்போதே லேசாக ஜுரம் அடிக்கின்றதாம். சிலருக்கு லைட்டாக தலை வலிக்கின்றதாம். ஒரு சிலர் பேதி வரை சென்றுள்ளார்களாம். ஆனால் எல்லாம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டார்களாம்.
காரணம், புதுக்கோட்டையில் குறைந்தது 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும், தேமுதிக டெபாசிட் இழக்க வேண்டும் என்றும், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தேமுதிகவை விட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்றும், குறிப்பாக அந்த பகுதியில் இத்தனை வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே மேலிட உத்தரவு உள்ளதாம். இதில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட அளவு வாக்குகள் குறைந்து இருந்தால், அமைச்சர் பதவி அம்பேல் ஆகிவிடும் என பயந்து நடுங்கிப் போய் உள்ளார்களாம்.
விரைவில் கார்த்திக் தொண்டைமான் வெற்றிக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்று விடுவார். ஆனால் பல அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் தோல்வி அடைந்து இருப்பார்கள். அவர்கள் யார் என அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார். அப்போது தெரிந்துவிடும் அந்த லிஸ்ட்

கருத்துகள் இல்லை: