வியாழன், 14 ஜூன், 2012

இன்டர்நெட் புக்கிங் :விமானத்தில் வந்து விபச்சாரம்

மும்பையில் இருந்து கோவைக்கு அழகிகளை வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இன்டர்நெட் மூலம் புக்கிங் செய்து அழகிகளை வரவழைத்து கோவையில் தொழில் அதிபர்களுக்கு சப்ளை செய்யப்படுவதும் தெரிய வந்தது. 
 இதைத் தொடர்ந்து போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விமான நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் மும்பை அழகி இருப்பதாகவும் அங்கிருந்து அந்த அழகி தொழில் அதிபர்களுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் லாட்ஜில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது லாட்ஜில் ஒரு அறையில் இருந்த மும்பை அழகி ரேஸ்மா (22), கேரளாவை சேர்ந்த புரோக்கர் சதீர் ஆகியோர் போலீசிடம் சிக்கினர்.
சதீரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சதீர் போலீசாரிடம் ,
’’கோவையில் உள்ள தொழில் அதிபர்கள் இன்டர்நெட் மூலமாக அழகிகளை புக் செய்வார்கள். அதன்படி நான் மும்பையில் இருந்து அழகிகளை விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வந்து சப்ளை செய்வேன்.

இப்படி வரும் அழகிகளிடம் உல்லாசம் அனுபவிக்க வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒரு மணி நேரத்திற்கு ரூ. 4 ஆயிரம் வரை வசூலித்தேன்’’ என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: