கம்யூனிஸ்ட் கட்டுப்பாட்டில் உள்ள வட கொரியாவில் டைம் பாஸ் ஆவது மிகவும் கடினம். அங்கு சுதந்திரமாக உலா வரவோ அல்லது வாழ்க்கையை இன்பமாகக் கழிக்கவோ முடியாது.
ஆனாலும் சீனாவின் மறைமுகக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நாட்டில் இந்தியத் தூதரகத்துக்கு மிக மிக முக்கியமான பணிகள் உள்ளன. சீனக் கடல் பகுதியை கட்டுப்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்களில் வட கொரியாவின் உறவு இந்தியாவுக்கு மிக மிக முக்கியம்.
ஆனாலும், அங்கு பணிக்குச் சென்றால் வாழ்க்கையை என்ஜாய் செய்ய முடியாது என்பதால் முக்கியமான ஐஎப்எஸ் அதிகாரிகள் யாரும் அங்கு தூதராகச் செல்ல விரும்புவதில்லை.
இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் மிக முக்கியமான அந்த தேசத்துக்கு டம்மியாக யாரையாவது தூதராக நியமித்துவிட்டு மூத்த அதிகாரிகள் எஸ்கேப் ஆகி வருகின்றனர். great
அந்த வகையில் தான் பிஜீ தீவுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சுருக்கெழுத்தாளராக இருந்த அஜய் கே. ஷர்மாவை, வட கொரியாவுக்கு தூதராக நியமித்தனர் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு இது தொடர்பாக அனுப்பிய பைலில், ஷர்மா பிஜீ தீவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கவுன்சிலர் பதவியில் இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவரை வட கொரியாவுக்கான தூதராக நியமித்துக்கு கையெழுத்தும் போட்டுவிட்டார் கிருஷ்ணா. பின்னர் அது பிரதமர் அலுவலம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுவிட்டது.
ஆனால், ஷர்மா ஒரு சாதாரண சுருக்கெழுத்தாளர் என்ற விவரம் வெளியானதையடுத்து அவரது நியமனத்தை கிருஷ்ணா ரத்து செய்துள்ளார்.
முன்பு முக்கியத்துவம் இல்லாத நாடுகளுக்கு சுருக்கெழுத்தாளர்களை தூதர்களாக நியமிக்கும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், அதற்கு முன் அவர்களுக்கு ஐஎப்எஸ்- பி என்ற கிரேட் வழங்கப்படும். ஆனால், அஜய் ஷர்மாவுக்கு எந்த கிரேடும் தராமல் நேரடியாக தூதராக நியமிக்க முயற்சி நடந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தனக்கு தவறாக தகவலைத் தந்த மூத்த அதிகாரிகளை கிருஷ்ணா வறுத்தெடுத்ததாகத் தெரிகிறது. வெளியுறவுத்துறையின் நிர்வாகப் பிரிவின் சிறப்புச் செயலாளர் அசோக் தோமர் தான் அஜய் ஷர்மாவை தூதராக நியமிக்குமாறு வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய்க்கு பரிந்துரை செய்ததாகவும் தெரிகிறது.
31 ஆண்டுகளுக்கு முன் பி.ஏவாக வெளியுறவுத்துறையில் பணிக்குச் சேர்ந்த அஜய் ஷர்மா சர்வதேச பொருளாதார, அரசியல், கலாச்சார விவகாரங்கள் பிரிவில் பணியாற்றியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தான் தூதராக நியமிக்க முயற்சி நடந்துள்ளது.
மூத்த அதிகாரிகள் அது எவ்வளவு முக்கியமான நாடாக இருந்தாலும், அங்கு என்ஜாய் செய்ய முடியாது என்றால், பணிக்குச் செல்லத் தயாராக இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது.
இந்திய வெளியுறவுத்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கு இதைவிட நல்ல உதாரணம் இருக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக