செவ்வாய், 12 ஜூன், 2012

சுடிதார் உடையில் உலாவும் நித்தியானந்தா!



மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2.55 மணிக்கு ஆதின மடத்தில் இருந்து ஆதினம் அருணகிரிநாதரின் மெய்க்காப்பாளர் தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு மதுரை சமயநல்லூர் புறவழிச் சாலைக்கு சென்றார்.

அங்கிருந்து சேலம் பதிவு எண் கொண்ட ஒரு காரில் இருந்த சுடிதார் அணிந்திருந்த பெண்ணை தனது காரில் ஏற்றிக்கொண்டு மதுரை ஆதின மடத்துக்கு 3.55 மணிக்கு பின்புறம் கேட் வழியாக வந்து இறக்கிவிட்டார்.அந்த பெண் அவசர அவசரமாக காரை விட்டு இறங்கி, ஆதினத்தின் படுக்கை அறைக்கு சென்று, ஆலோசனையில் ஈடுபட்டார். அதிகாலையான அந்த நேரத்தில் சைவ உணவும், வாட்டர் பாட்டில்களும் அவசர அவசரமாக தனது படுக்கையறைக்கு வாங்கி வருமாறு ஆதினம் அருணகிரிநாதர் அங்கிருந்த ஒருவரிடம் உத்தரவிட்டுள்ளார்.
சுடிதார் அணிந்து வந்தது பெண் அல்ல. நித்தியானந்தாதான் என்று ஆதின மடத்தின் காவலாளி ஒருவர் உளவு போலீசாரிடம் ரகசிய தகவல் கொடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு போலீசார் கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளாததால், கர்நாடக போலீஸ் கைது நடவடிக்கையில் தப்பி வருகிறார் நித்தியானந்தா என்று மதுரை ஆதினம் மீட்பு குழுவினர் சிலர் கூறுகின்றனர்

கருத்துகள் இல்லை: