செவ்வாய், 12 ஜூன், 2012

விஸ்வரூபம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது.


 கமல்ஹாஸன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. விஸ்வரூபம் படத்தின் டிரெய்லருக்காக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது வெளியான டிரெய்லர். 
பல கோடி செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை அதிக அளவில் எதிர்பார்த்த ரசிகர்கள் கமல்ஹாஸன் ’கதக்’ நடமாடுவது போன்ற காட்சிகளை பார்த்ததும் குழம்பிப் போனார்கள்.
கதக் நடனத்தில் புகழ்பெற்ற ’பண்டிட் பிர்ஜூ மஹாராஜ்’ இந்த நடனக் காட்சிகளுக்கு கொரியோகிராஃபி செய்திருக்கிறார். 

ஆக்‌ஷன் பிளாக் காட்சிகள் நிறைந்த படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, பணத்தை செலவு செய்தது ஆக்‌ஷன் காட்சிகளுக்கா? அல்லது நடனக் காட்சிகளை தத்ரூபமாக படம்பிடிப்பதற்கா? என்ற குழப்பமான கேள்வி எழுந்திருந்த நிலையில் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கமல்ஹாஸன் பேட்டியளித்துள்ளார். 

படத்தை பற்றி பேசிய கமல் “ கடந்த 7 வருடங்களாக என் மனதிற்குள் உறைந்திருந்த கதை இது. ’விஸ்வரூபம்’ படத்தின் கதையில் நிரு (எ) நிருபமா என்ற ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண் மேல்படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறாள். அமெரிக்காவில் விஸ்வனாதன் என்கிற நடனக் கலைஞனை சந்திக்க நேர்கிறது. அவர்களுக்குள் காதலும், ஈர்ப்பும் இல்லையென்றாலும் திருமணம் செய்துகொள்கிறார்கள். 

சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் நடந்தாலும் அவர்கள் அமைதியாக வாழ்கிறார்கள். நிருபமா தனது பி.எச்டி படிப்பை முடித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் தனது கனவுகளை வளர்த்துக்கொள்கிறாள். அவள் சொந்தமாக எடுக்கும் முடிவுகளை செயல்படுத்த திருமணம் ஒரு தடையாக இருப்பதாக உணர்ந்து, எவ்வித அடிப்படை காரணமுமில்லாமல் கணவனிடமிருந்து விவாகரத்து கோருகிறாள். 

ஆனால் தனது கணவனிடம் எந்த தவறுகளையும் கண்டுபிடிக்க முடியாததால் ஒரு துப்பறிவாளாரை அணுகி தன் கணவனை கண்கானிக்கும்படி சொல்வது தான் படத்தின் திருப்புமுனை. அதன்பிறகு அவள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தான் படத்தின் மீதிக்கதை” என்று கூறினார். 

கருத்துகள் இல்லை: