செவ்வாய், 9 மார்ச், 2021

ஒடுக்கப்பட்ட மக்களின் வாயில் இருந்து ஆங்கிலம் வருகிறதே என்று இவர்கள் துடிப்பதுதான் பெரியாரின் வெற்றி


பெரியார் இருந்த காலத்தில் ஆங்கிலம் ஒரு மேட்டுக்குடி சொத்தாகவே இருந்தது .அதிலும் பார்ப்பன வீடுகளில் மிகவும் சாதாரணமாக புழக்கத்தில் இருந்தது . அறிவியல் நூல்கள் பெரிதும் ஆங்கிலத்தில்தான் இருந்தது
தமிழ் மட்டுமே வாசிக்க எழுத தெரிந்தவர்கள் இன்றைய வாட்சப் மேதாவிகள் ரகத்தில்தான் இருந்தனர்.
விஞ்ஞானம் மருத்துவம் போன்ற துறைகள் எல்லாம் தமிழ் மட்டுமே தெரிந்த சமூகத்தால் எட்டிவிட முடியாத உயரத்தில் இருந்தது.
இன்றும் உலகம் முழுவதும் பார்ப்பனர்கள்  பரவி இருப்பதற்கு அவர்களின் ஒரு நூற்றாண்டு ஆங்கில கல்வியே பெரிய காரணமாக இருந்தது.
உதாரணமாக கமலா ஹாரிஸின் பாட்டன் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக உலகம் முழுவதும் சுற்றினார் அவரின் மகள் சியாமளா அமெரிக்காவில் டாக்டராக செட்டில் ஆனார்.
சியாமளாவின் மகள் கமலா அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பதவிக்கு உயர்ந்தார்
இந்த பார்ப்பனர்கள் மண்ணின் மைந்தர்களை காலனி அடிமைகள் போலவே ஆண்டார்கள்.
அவர்களின் ஆதிக்கத்திற்கு அவர்களின் ஆங்கில மேலாண்மை மிகப்பெரிய காரணம்  அதை அடித்து நொறுக்கியது திராவிட இயக்கம்   
குப்பனும் சுப்பனும் ஆங்கிலம் பேசினால் அது ஒரு உலக மகா அதிசயமாக பார்க்கப்பட்டது.

ஆங்கிலம் தெரியாதவர்கள் படிக்காதவர்கள் என்ற கருத்து இருந்தது
அன்றைய காலக்கட்டத்தில் நவீன அறிவியல் மொழியாக ஆங்கிலமே இருந்தது.
மருத்துவம் படிப்பதற்கு சமாக்ஸ்க்ருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அளவில் பார்ப்பன ஆதிக்கம் இருந்த காலம் அது..
பெரியாரின் மொழி பற்றிய கருத்து ஒரு போர்முனையில் எதிரி மீது ஏவப்பட்ட ஆயுதமாக கருதவேண்டும்.
அந்த போரில் பெரியார் வென்றுவிட்டார்  திராவிட இயக்கம் ஆங்கில கல்விக்கு கொடுத்த முக்கியதத்துவம் போற்றத்தகுந்தது
அது மட்டுமல்லாம்ல தமிழ் ஒரு நீச மொழி என்ற கூற்றையும் தவிடு பொடியாக்கி தமிழ செம்மொழி என்றாக்கியதும் திராவிட இயக்கத்தின் போர் வெற்றிகள்தான்.
பெரியார் சறுக்கினார் என்ற சொற்தொடர் புறமுதுகு கண்ட பார்ப்பனீயத்தின் ஆற்றாமையால் கட்டமைக்கப்படட சொற்தொடராகும்   அதை பற்றிய வரலாற்று புரிதல் அற்று நம்மவர்களும் அதை கூறுவது வேதனைக்கு உரியது
ஒரு முறை பாஜக மதுவந்தி ஒரு காணொளியில் : உங்களுக்கெல்லாம் இப்போது இங்கிலிஷ் தெரியும் அதை ஒத்துகிறேன் என்று ஏகத்தாளமாக குறிப்பிட்டார் .
ஒடுக்கப்பட்ட மக்களின் வாயில் இருந்து ஆங்கிலம் வருகிறதே என்று இவர்கள் துடிப்பதுதான் பெரியாரின் வெற்றி     .   

Chinniah Rajeshkumar : மொழியும் அறிவும் என்ற பெரியாரின் கட்டுரைத்தொகுப்பில் தமிழ் மொழி மதமும், பழமைவாதமும் கொண்டதெனவும் , தமிழில் மருத்துவம், விஞ்ஞானம் போன்ற மக்களை முன்னேற்றும் வகையிலான நூலெதுவும் இல்லை, வெறும் புராணங்களும் இதிகாச இலக்கியங்களும் கொண்ட பிற்போக்கு பாத்திரமே தமிழ் மொழிக்கு உண்டு என்கிறார். இந்தி எதிர்ப்பில் தான் கலந்து கொண்டது தமிழ் மொழி மேலுள்ள பற்றால் அல்ல மாறாக இந்தித்திணிப்பை எதிர்ப்பது வட நாட்டானின் ஆதிக்கத்தால் தொடர்ந்து அடிமைப்படும் நிலை ஏற்படும் என்பதற்காக தான் என்கிறார். அத்துடன் இந்தி அப்படியொன்றும் முன்னேற்றகரமான மொழி கிடையாது எனவே அதனை கற்றலால் ஒரு பயனுமில்லை என்கிறார். ஆங்கிலக்கல்வியே முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்; ஆங்கிலத்தை சிறு வயதிலிருந்து போதிக்க வேண்டும் என்கிறார். மொழி அபிமானம் , தாய் மொழி என்ற விடயங்கள் அர்த்தமற்ற வார்த்தைகள் எனவும் இது முன்னேற்றத்துக்கு வழியல்ல எனவும் கூறுகிறார். மொழியை வெறும் ஊடகமாகவே அவர் கருதுகிறார். பார்ப்பன்ர்களுக்கு மொழிப்பற்று இல்லை எனவே அவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலத்தை படித்ததால் ஆங்கிலப்புலமை கொண்டவர்களாக இருப்பது அவர்களுக்கு வாய்ப்புகளை நல்கிறது. தமிழரும் மொழிப்பற்று , தாய் மொழி என்ற கதைகளை விட்டு விட்டு ஆங்கிலத்தை படிக்கவேண்டும் என்கிறார்.இது பற்றி எனக்கு முழு உடன்பாடு கிடையாது. மொழிப்பற்று அவசியம் இல்லை. ஆனால் மொழி வெறும் ஊடகம் அல்ல என்றே நான் நினைக்கிறேன். மக்களின் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்டது மொழி.

கருத்துகள் இல்லை: