சனி, 13 மார்ச், 2021

திமுக கூட்டணி பற்றி புலம் பெயர் தமிழர்களின் பார்வை (ஒரு சமூக வலைத்தள அலசல்)


வி. சபேசன்  : ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் பற்றிய நல்ல அபிப்பிராயம் என்றைக்கும் இருந்தது இல்லை.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் படிப்பறிவு அற்றவர்கள், சினிமா மாயையில் உழல்பவர்கள் என்கின்ற கருத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது.
ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் மெத்தப் படித்தவர்களாக இருந்தார்கள். வக்கீல்களாகவும், பட்டங்கள் பெற்றவர்களாகவும், மகாராணியுடன் கைகுலுக்குபவர்களாக தமது அரசியல் தலைவர்கள் இருப்பது பற்றி ஈழத்தமிழ் உயர்குடியினர் பெரும் இறுமாப்பு அடைந்திருந்தார்கள்.
மறுபுறும் தமிழ்நாட்டில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் கருணாநிதி என்று பெரும்பாலான தலைவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்கின்ற இளக்காரமும் அவர்களிடமும் இருந்தது.
80களின் தொடக்கத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 30 விழுக்காடுதான். அப்பொழுதே இலங்கையில் 90 விழுக்காடு மக்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.
ஈழத் தமிழ் உயர்குடிகள் தம்மை தமிழ்நாட்டுத் தமிழர்களை விட உயர்வாக கருதுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பார்ப்பனர்கள் நடத்தும் ஊடகங்கள் மூலமே அவர்கள் தமிழ்நாட்டை அறிகின்றார்கள். 70, 80 களில் பாலச்சந்தரின் படங்களில் இருந்தும், 90களில் சங்கரின் படங்களில் இருந்தும் அவர்கள் தமிழ்நாடு பற்றி மேலும் அறிந்து கொண்டார்கள்.


இப்படி பல்வேறு காரணங்களோடு 'தமிழ்நாட்டை வல்லரசாக மாற்றக் கூடிய "மாபெரும் திட்டங்களை" கொண்டிருக்கின்ற சீமானை தமது முதல்வராக தேர்ந்தெடுக்கத் தெரியாத அளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்' என்கின்ற ஒரு காரணமும் புதிதாக இதில் சேர்ந்து கொண்டது.
அதே வேளை ஒரு காலத்தில் இருந்தது போன்று ஈழத் தமிழர்கள் தற்பொழுது கல்வியில் மேன்மை நிலையில் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.
பேரினவாத அரசாங்கத்தின் அடக்குமுறையும், போரும் தமிழர்களின் கல்வியை சீரழித்து விட்டது. யாழ்ப்பணம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலைக்கு போய் விட்டது.
ஆயினும் பல ஈழத் தமிழர்கள் உயர்வுச் சிக்கலில் இருந்து விடுபடவில்லை. இதற்கான காரணிகளை பிறிதொரு முறை தனியாகப் பார்க்க வேண்டும்.
ஈழத்தின் நிலை இப்படி இருக்க, மறுபுறம் தமிழ்நாட்டு மக்கள் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள்.
பல்வேறு துறைகளில் நல்ல வளர்ச்சி கண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உலக அளவில் மதிக்கப்படுகின்றன.
இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வேட்பாளர்கள் பட்டியலை வாசித்தார். வாசிக்கின்ற போது வேட்பாளர்களின் கல்வித்தகமையையும் இணைத்தே வாசித்தார்.
தனித் தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்களை அவர்களின் பட்டங்களுடன் வாசித்த பொழுது பெருமையாக இருந்தது.
குறிப்பிட்ட பிரதேசமோ, சமூகமோ மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டின் வளர்ச்சி சமூகநீதிக்கு உட்பட்ட பரவலாக இருப்பதன் ஆதாரம் அது.
உண்மையான வளர்ச்சியும் அதுதான்.
நீட் போன்ற சதிகள் மூலம் இந்த வளர்ச்சியை இல்லாமல் ஆக்குவதற்கு சனாதன சக்திகள் காத்திருக்கின்றன.
அதற்கு துணையாக பல்வேறு பரிவாரங்கள் அணிவகுத்திருக்கின்றன. எல்லாவற்றையும் முறியடித்து திமுக கூட்டணி பெறப் போகின்ற மாபெரும் வெற்றி தமிழ்நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்.

Chinniah Rajeshkumar  : இன்னொரு முக்கிய காரணம் மலையகத்தமிழர்களை இழிவாக கருதிய மன நிலை. இது வர்க்கம் சாதி இரண்டும் சேர்ந்த மன நிலை. வடக்கத்தையான், தோட்டக்காட்டான் என்ற வார்த்தை பிரயோகங்கள். இதன் தொடர்ச்சி இந்திய தமிழரை தரக்குறைவாக கருதும் மன நிலைக்கு ஒரு காரணமென நினைக்கிறேன்
Ranjakumar Somapala S  : அப்படியே தமிழகத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தாரை ,மட்டக்களப்பாரை, கொழும்பாரை, மலையகத்தாரை எப்படிக் கருதுகிறார்கள் எனவும் ஆராய்க.

 Ravin Thiru : 30 வருட யுத்தத்தில் நாம் இழந்தவற்றை மீட்டெடுக்க, வரும் தலைமுறை கல்வியில் மீண்டுவந்தால்த்தான் முடியும். இதில் ஆச்சரியமும் ஒன்று உள்ளது. இழக்கூடாததை இழக்கச்செய்த யுத்தம் , இழக்கவேண்டிய சாதி மத ஏற்றத்தாழ்வுகளை அப்படியே வைத்துக்கொண்டிருப்பதுதான். அருமையான
கருத்து.
Tholar Velan  : யாழ்ப்பாணத்தில் சுமார் 200000 மக்கள் வாழ்கின்ற போது எத்தனை விகிதம் அளவில் தமிழக மக்களை கீழாக எண்ணியிருந்தார்கள். குறைந்தது எந்தனை விகிதம் இருக்கின்ற போது யாழ்ப்பாணத்தவர்கள் என்று பொதுமைப்படுத்துவீர்கள், பொதுமைப்படுத்த மாட்டீர்கள்.
நீங்கள் எவ்வாறு கணக்கெடுப்பு நடத்தினீர்கள். இதற்கான தரவுகளை தரமுடியுமா??

வி. சபேசன்  Tholar Velan  : இந்தப் பதிவை எழுதுவதற்கு முதல் 100 யாழ்ப்பாணத் தமிழர்களிடம் 'இந்த தமிழ்நாட்டு விசர்ச்சனம் இந்த முறையும் சீமானுக்கு போடாது போல கிடக்கு, காசை வாங்கிக் கொண்டு ஸ்டாலினுக்குதான் போடும் போல கிடக்கு, லூசுச் சனங்கள்' என்று சொல்லிப் பார்த்தேன்.99 பேர் நான் சொன்னதை ஆமோதித்தார்கள். ஒருவர் மட்டும் கடுமையாக மறுத்தார். சீமானுக்கு போடக் கூடாது. சகாயத்திற்குத்தான் போட வேண்டும் என்றார். நீங்கள் இதை நம்பவில்லை என்றால் இந்த பரிசோதனையை நீங்களும் ஒரு முறை செய்து பார்க்கலாம்.

Tholar Velan  : இங்கு நான் கேட்ட கேள்விக்கு பதில் தரவில்லை. நீங்கள் வரலாற்றுக் காலத்தில் இருந்து எழுதுகின்றீர்கள். இதனை வைத்தே என்கேள்வி.
இங்கு எனக்கு சீமான்- ஸ்ராலின்- சகாயம் எனக்கு அவசியமற்றது.

Ravin Thiru - Tholar Velan  : உங்கள் கேள்விக்கு, தமிழக நண்பர்கள் இதைப்படித்துவிட்டு என்ன நினைப்பார்கள் என்ற கவலை காரணமாக இருந்தால், நீங்கள் சமாதானப்பட்டுக்கொள்ள அவர்களிடத்தில் ஈழத்தமிழர்கள் பற்றி பொது கருத்தொண்று உள்ளது. யாழ்ப்பாணத்தார் முரடர்கள் சுத்துமாத்து பேர்வழிகள் என்று.

Ravin Thiru  : ஆக அதுக்கு இது சமனாகிவிடும் என்று எடுத்துக்கொள்ளலாம்.😜 இதை ஆவணங்களுடன் நிறுவமுடியாது. பொது அறிவுதான்

Tholar Velan :நான் கேட்ட கேள்வியை விளங்கிப் பதில் கொடுங்கள். ஒரு சமூகத்தைப் பற்றி பொதுப்படையாக எழுதிவிட்டுச் செல்ல முடியுமா??

Ravin Thiru - Tholar Velan  : பொதுவாக எழுதுவது நியாயம் இல்லைதான். அரசியலில் இது சகஜம். எதிர்த்து வாக்களித்தவனுக்கும் சேர்த்து ஆட்சி செய்வதுபோல்த்தான். ஒட்டுமொத்தமாக முத்திரை குத்தமுடியாது. ஆனால் இப்படியும் இருக்கு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

Ravin Thiru  - Tholar Velan : மேலும் நீங்கள் சபேசனிடம் கேட்டகேள்விக்கு நான் பதில் சொல்லவரவில்லை. இது எனது கருத்துமட்டுமே.

Tholar Velan  : Ravin Thiru
ஒரு சமூகத்தைப் பற்றி எழுதும் போது அதற்காக பொறுப்பான பதிலையும் கொடுக்க வேண்டும். திமுக தேர்தல் பிரச்சாரம் செய்வது, முதுகு சொறிவது அவர் தெரிவு.
‘‘ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் பற்றிய நல்ல அபிப்பிராயம் என்றைக்கும் இருந்தது இல்லை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் படிப்பறிவு அற்றவர்கள், சினிமா மாயையில் உழல்பவர்கள் என்கின்ற கருத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது.‘‘ இதற்கு அவர் ஆதாரம் வைக்க வேண்டும். குபாக்கூறு எழுத்தாளர்களை நாம் எமது காலங்களில் கண்டுதான் வருகின்றறோம். தமது சந்தைக்காக அவிழ்த்துவிடும் எழுத்தாளர்கள் நமக்கு புதிது இல்லை.

Theva Thasan : நல்ல பதிவு சமூக நீதி மீதும் திமுக மீதும் வெறுப்புணர்வு உள்ளவர்கள் இதற்கான எதிர் விமர்சனத்தை வைப்பார்கள்.மத்தியில் பாஜக வை ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் மாநிலத்தில் சீமானை ஆதரிப்பார் ..இதன் அரசியல் ஆபத்தை புரியாதவரை ஈழத்தமிழர்களுக்கு மீட்சி இல்லை.

Mano Ganesan:  இந்த பதிவு அறிவுப்பூர்வமானது.
நான் சில நாட்களுக்கு முன் சொன்னேன். இந்தியாவில் உள்ளக சமச்சீராக (மாநிலம் தழுவிய) முன்னேறிய மாநிலம், தமிழ்நாடு....
அரசியல் கட்சிகளும், சினிமா காட்சிகளும் அதன் ஒரு சிறு பிம்பங்கள்தான். அவற்றையும் மீறிய வளர்ச்சி தமிழ்நாட்டில் இருக்கின்றது.
இதன் காரணம் சினிமா, அரசியல், இரண்டையும் ரசித்து விட்டு ஆனால் பொருட்படுத்தாத மூளை, உடல், மன உழைப்பாளிகள் அங்கு இருக்கிறார்கள். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் செயற்படுகிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் "சிஸ்டம்".
இந்த "சிஸ்டம்" என்பதை உருவாக்கியோர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர். இவர்களுடன் சேர்த்து திராவிட அரசியல் அடையாளம் இல்லாத, ஆனால் தமிழக பாமர அடையாளம் கொண்ட காமராஜர்.
இந்த "சிஸ்டம்" என்பதற்குள்ளே பின்னி பிணைந்து செயற்பட்டார் எம்ஜியார் என்ற நடிகர். ஆகவே அவர் தலைவர் ஆனார்.
இந்த "சிஸ்டம்" என்பதை மாற்ற நினைத்து, பிறகு முடியாது என தெரிந்து சமீபத்தில் பின்வாங்கினார், ரஜினிகாந்த் என்ற நடிகர்.
இந்த "சிஸ்டம்" என்பதன் பிரதான உயிர்நாடி, "சமூகநீதி" கொள்கை. அதாவது வளர்ச்சி குன்றிய பிரிவினருக்கும் எழுந்து வர வழி சமைக்கும் ஒதுக்கீடுகள். ஆதலால் மாநிலம் தழுவி அனைவரும் தத்தம் உரிமைகளை வேண்டி பெற்று முன்னேறுகிறார்கள். ஆகவே நாடும் முன்னேறுகிறது.
இதற்கு காரணம், திராவிட கட்சிகள். அது திமுக ஆகவும் இருக்கலாம். அதிமுக ஆகவும் இருக்கலாம். அது நம் பிரச்சினை அல்ல.
இது புரியாதவர்கள் ஒருமுறை வட இந்திய மாநில சுற்றுலா போய் வர வேண்டும். மும்பாய், கொல்கத்தா, டெல்லி ... என்ற நகரங்கள் அல்ல நாட்டுக்கு உள்ளே வட இந்திய கிராமங்களுக்கு போய் வர வேண்டும். வித்தியாசம் தெரியும்.
ஆகவே தமிழ்நாட்டு சினிமாவையும், தமிழ்நாட்டு அரசியல் உரைகளையும் பார்த்து, கேட்டு தமிழ்நாட்டை தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம்.

செல்லபுரம் வள்ளியம்மை :தோழர் சபேசன் இங்கு கூறும் கருத்துக்களின் மீது பாய்ந்து பிராண்டுபவர்கள் எல்லோரும் ஒரே  இஸ்கூல் மாணவர்கள் என்பது புரிகிறது
தமிழகத்திலும் சரி இலங்கையிலும் சரி ஜாதி அடையாளங்களை காப்போர் எல்லோருமே திமுகவையும் திராவிட கோட்பாட்டையும் அடியோடு வெறுக்கிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்
எங்கே தங்கள் ஜாதி அடையாளம் அழிந்து போய்விடுமோ என்ற  பதற்றம் தெரிகிறது.
இவர்கள் எதிர்பார்க்காத ஒரு விடயம் தற்போது கண்ணெதிரே நடக்கிறது  
அதை தாங்கி கொள்ள முடியமால் துடிப்பது துலாம்பரமாக தெரிகிறது
உங்களுக்கு சமூக நீதியும் தெரியவில்லை சுயமரியாதை என்றால் என்னவென்றும் புரியவில்லை
அசல் அடிமைகளுக்கே உரிய போலி கூச்சல் மட்டுமே உங்களிடம் இருந்து வருகிறது
உங்கள் அறியாமையால் அல்லது உங்கள் ஜாதிய மனோ நிலையால் தவறான பாதையில் நெடுந்தூரம் பயணித்து விட்டீர்கள்.
அந்த தவறான பாதையில் சென்று  நீங்கள் பெற்றது என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.  
அதிலிருந்து மீள்வதற்கு நீங்கள்  அசல் சங்கிகளாக / சீமான்கிகளாக மாறிவிட்டீர்கள்!
மீண்டும் மீண்டும் தவறுகளே செய்கிறீர்கள் என்று மட்டும்தான் தற்போது கூற முடியும்.
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் உங்களின் பொய்களை இனி உங்கள் வீட்டிலேயே உள்ளவராகில் நம்ப மாட்டார்கள்  .
உங்களின் அத்தனை வேடங்களும் உங்கள் கோட்டைகளுக்கு உள்ளேயே  சரிந்து விட்டது.
சுய சிந்தனை உள்ள மனிதர்களாக இருங்கள் . சிந்திக்க தொடங்குங்கள்!
எல்லா மனிதர்களையும் சக மனிதர்களாக ஏற்றுக்கொள்வதுதான் திராவிடம்.
நீங்களும் திராவிட மண்ணின் மைந்தர்கள்தான்!
திராவிடத்தின் பெருமை மிகு மானிடர்களாக இருங்கள் என்று வேண்டி கொள்கிறேன்     
 

 Vadivel Puththirasigamoney : Happy I studied in india as well. Comparing that time in late seventies and now. India has developed so much and now Sri Lanka is with begging bowl towards india . Our children including Our brothers from Jaffna look for scholarships in Tamil Nadu. Tamil Nadu Government recently donated 20 million to Jaffna University

கருத்துகள் இல்லை: