வியாழன், 11 மார்ச், 2021

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் அறிவிப்பு - முழு விவரம்

tamil.news18.com : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அடையாளம் காணும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதுதொடர்பாக நடைபெற்ற மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து தொகுதியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி உடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய திமுக தற்போது இறுதி பட்டியலை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்.
1. காரைக்குடி
2.கோவை தெற்கு
3.ஈரோடு கிழக்கு
4.பொன்னேரிதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் அறிவிப்பு - முழு விவரம்
5.வேளச்சேரி
6.தென்காசி
7.விளவங்கோடு
8.ஶ்ரீபெரும்புதூர்
9.சோளிங்கர்.
10.ஶ்ரீவைகுண்டம்
11.வேலூர்
12.ஓமலூர்
13.உதகமண்டலம்
14.விருத்தாசலம்
15.அறந்தாங்கி
16.உடுமலைப்பேட்டை
17.கள்ளக்குறிச்சி
18.திருவாடனை
19.கிள்ளியூர்
20.நாங்குநேரி
21.குளச்சல்
22.சேலம்
23.ஊத்தங்கரை
24.மேலூர்
25.மயிலாடுதுறை

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகள் முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன.

பொன்னேரி, திருபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, திருவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாசலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி,திருவில்லிபுத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த உடன்பாட்டில் திமுக தலைவர் மு.க,ஸ்டாலினும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதன் மூலம் திமுக கூட்டணிக்குள் இருந்த தொகுதிப் பங்கீடு சிக்கல் பெருமளவு தீர்க்கப்பட்டுள்ளது. நாளை திமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவது இதன்மூலம் உறுதியாகிவிட்டது.

திருவாடானை, நாங்குநேரி, தென்காசி, வேளச்சேரி, அறந்தாங்கி போன்ற தொகுதிகளை காங்கிரஸ் போராடி வென்றிருக்கிறது. அறந்தாங்கியில் திருநாவுக்கரசர் மகன் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்க இருப்பதாக தகவல் அறிந்து நேற்றே திமுகவினர் அங்கே போராட்டம் நடத்தினார்கள். ஆனாலும் அறந்தாங்கி காங்கிரஸுக்கே போயிருக்கிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: