திங்கள், 8 மார்ச், 2021

பெண்களுக்கான அவசியமான 10 நிதி ஆலோசனைகள் ... Karthikeyan Fastura

May be an image of 1 person, baby, sitting, indoor and text

Karthikeyan Fastura  : பெண்களுக்கான அவசியமான 10 நிதி ஆலோசனைகள்
1. தங்கம் வாங்கி வைத்துக்கொள்வது ஓரளவிற்கு வைத்துவிட்டு, மற்ற நிதி முதலீடுகளில் பெண்கள் கவனம் செலுத்த தொடங்க வேண்டும். DEMAT கணக்கு துவங்கி வைத்துக்கொள்ளுங்கள். Soverign Gold Bond, IPO, Shares என்று எது வாங்க வேண்டுமென்றாலும் இந்த கணக்கு அவசியம்.
2. பணியில் இருப்பவர் என்றால் குறைந்தது 50லட்ச ரூபாய் மதிப்பிற்கு Term Insurance எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் Term இன்சுரன்ஸ் எடுக்க வேண்டுமென்றால் உங்கள் கணவரும் கட்டாயம் எடுத்திருக்கவேண்டும். அது உங்கள் பாதுகாப்பே. ஆகவே கணவருக்கும் Term Insurance பாலிசியை எடுக்க உதவுங்கள்.  
3. அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய Comprehensive Health Insurance எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. பணியில் இருக்கும், திருமணம் செய்யும் திட்டத்தில் உள்ள இளம்பெண் என்றால் பெற்றோர் குடும்பத்தோடு அல்லாமல் தனித்து உங்கள் ஒருவருக்கு மட்டும் இந்த பாலிசியை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பாலிசி எடுத்து இரண்டு வருடத்தில் திருமணமாகி குழந்தைபேறு கொண்டால் பிரசவ செலவு முழுக்க Cover ஆகிவிடும். பிரசவத்திற்கு முன்பும், பின்பும் ஆகும் செலவுகளும் 60 நாள் வரை Claim செய்துகொள்ளலாம்.


4. பெற்றோருக்கு மாதாந்திரம் வருவது போல ஒரு திட்டம் கொண்ட, வேலைக்கு செல்லும் பெண்பிள்ளைகள் வருடத்திற்கு 3.5லட்சம் Par Product இன்சுரன்ஸ் பாலிசியில் சேமிக்கமுடிந்தால் மாதாமாதம் 10,000 ரூபாய் உங்களது பெற்றோருக்கு செல்வது போல் செய்துவிடலாம். மறுபக்கம் உங்கள் சேமிப்பும் சேர்ந்துகொண்டே இருக்கும். இந்த பாலிசியில் நீங்கள் 12 வருடங்கள் மட்டும் கட்டினால் போதும். ஒரு 20 வருடங்கள் கழித்து எடுக்கும்போது 40 லட்சத்தை தாண்டும். அப்போது எடுக்காமல் பிறகு எடுத்தாலும் அதற்கு ஏற்றார்போல் வளர்ந்துகொண்டேவும் இருக்கும்.  
5. உங்கள் திருமண சீதனத்தில் உங்களுக்கு Laptop கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.  திருமணத்திற்கு பின்பு குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் வீட்டில் இருக்கும் சூழலில் இணையவழியில் பணி செய்து சம்பாதிக்க பல வழிகள் இன்று வந்துள்ளது. அதில் உங்களது ஓய்வு நேரத்தை சரியாக பயன்படுத்தி நிதி ஆதாரங்களில் முதலீடு செய்து பழகலாம்.
6. நீண்டகால முதலீட்டிற்கு பங்குச்சந்தை முதலீடுகளை கற்றுக்கொள்ளுங்கள். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது நம் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. பங்குகளை வாங்கி உங்களுக்கென்று ஒரு Portfolio வைத்துக்கொண்டு பழகுங்கள். நன்றாக இருக்கும்.
7. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குறுகியகால முதலீடாக Stock Market F&O, Commodity Market Futures கற்றுக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுத்துவிட்டு இறங்கும்போது நல்ல வெற்றியை கொடுக்கும். ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் மாதம் 40ஆயிரம் வரை எளிதாக எடுக்கலாம். கற்றலும், நிதானமான மனநிலையும் தான் இதற்கு தேவை என்பதால் பெண்களுக்கு இது எளிதாக வரும்.
8. உங்கள் வங்கிக்கணக்கில் Net Banking, Mobile Banking தவறாமல் வைத்துக்கொள்ளுங்கள். Google Pay, PhonePe, PayTM போன்ற UPI ஆப்புகளை உங்களது மொபைலில் வைத்துக்கொண்டு பயன்படுத்த பழகுங்கள். அதிலும் நிறைய சேமிக்க வழி இருக்கிறது.
9. ஒவ்வொரு ஆண்டும் பெண் தொழில்முனைவோர்களுக்காக எண்ணற்ற தொழில் திட்டங்களும், மானியங்களும் ஒதுக்கப்படுகிறது. அவற்றில் பல போதிய அளவிற்கு செலவிடப்படாமல் மாநில அரசால் திருப்பி அனுப்பப்படுகிறது. அல்லது வேறுசில திட்டங்களுக்கு திருப்பிவிடப்படுகிறது. ஆகவே தொழில்தொடங்க ஆர்வம் கொள்ளுங்கள். அதுகுறித்து தொடர்ந்து விசாரியுங்கள்.
10. நீங்கள் பணிக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் உங்கள் ஓய்வூதியத்திற்கு இன்றே திட்டமிடுங்கள். அது உங்கள் பெயரிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதில் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். உங்கள் தன்மானத்தை என்றென்றும் காக்கும்.
மேலே சொன்ன அனைத்து விசயங்களிலும் தகப்பன்மார்களும், கணவன்மார்களும், உடன்பிறந்த சகோதரர்களும், மகன்களும் அவர்களுக்கு உதவவேண்டும். அது அவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது.
ஒரு சகோதரராக, தோழராக நானும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன். Facebook Messengerல் உங்கள் சந்தேகங்களை கேளுங்கள். அல்லது 8123130035 என்ற எண்ணிற்கு Whatsapp செய்யுங்கள். உதவுகிறேன்.
பெண்கள் தின வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை: