செவ்வாய், 9 மார்ச், 2021

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்தில் போட்டி!

maalaimalar :திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மேலும் சிறிய கட்சிகள் இடம் பிடித்துள்ளன... ஏறக்குறைய அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்த நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மட்டும் தொகுதிகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்..மூன்று தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: