வியாழன், 11 மார்ச், 2021

மம்தா பானர்ஜி நந்திகிராமில் தாக்கப்பட்டார்! தலையிலும் காலிலும் காயம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்

Vishnupriya R -  tamil.oneindia.com : கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் காலில் காயம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்திற்கு மார்ச் இறுதியில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
கொல்கத்தாவிலிருந்து 130 கிலோமீட்டர் தூரம் உள்ள நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய மம்தா சென்றிருந்தார்.
அப்போது அவர் காரில் ஏற முயன்ற போது 4 அல்லது 5 பேர் அவரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. மாபெரும் பேரணி.. நந்திகிராமில் கெத்தாக வேட்புமனு தாக்கல் செய்த மம்தா.. சமாளிப்பாரா சுவேந்து அதிகாரி?
இதில் கீழே விழுந்த மம்தாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கி காரின் பின்சீட்டில் உட்காரவைத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜியிடம் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆமாம், அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். என்னை சுற்றி போலீஸாரே இல்லை.
பாருங்கள் கால் எவ்வளவு வீக்கமாக இருக்கிறது என்றார்.
இதையடுத்து கொல்கத்தாவில் மம்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மம்தா தாக்கப்பட்டது குறித்து தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
இதனிடையே மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதை கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.கருத்துகள் இல்லை: