வியாழன், 11 மார்ச், 2021

நடிகர் மம்முட்டி : யாரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப்போவதில்லை (பினராயி பாத்திரத்தில் நடிக்கிறார் - டீசர்)

கேரளா சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் சார்பாக பிரசாரம் செய்வதில்லை என்று நடிகர் மம்மூட்டி அறிவித்துள்ளார் .
இதில் என்ன பெரிய செய்தி இருக்கிறது என்று யோசிக்கட்டதீங்க மக்களே,
இவர் கேரளா முதல்வர் கடைக்கால் சந்திரன் என்ற பாத்திரத்தில் சென்ற ஆண்டு நடித்திருக்கிறார்               அது முதல்வர் பினாராய் விஜயனின் பாத்திரம் என்று கூறுகிறார்கள்
இந்த டீசரை பார்க்கும் போது அசப்பில் பினராயி விஜயன் போல்தான் இருக்கிறார்
இதில் வரும் ஒரு வசனம் : கள்ள அம்பட்டன்ற மோனு ஒரு ஒக்க முக்கிய மந்திரி ஆனால் என்று வருகிறது .
முதல்வர் பினராயி விஜயன் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதி பின்புலத்தில் இருந்து வந்தவராகும்  nakkeeran :தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலத்திற்கு சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கட்சிகள், கூட்டணிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் நடிகர்களை தேர்தல் பிரச்சாரங்களில் களம் இறக்கத் தயாராகி வருகின்றன. 

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் 'மம்முட்டி', கேரள முதல்வர் பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றுப் படமொன்றில் நடித்து வருகிறார். இதையொட்டி, சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.,,,அப்போது அவர், "தேர்தல் அரசியலில் எனக்கு எவ்வித ஆர்வம் இல்லை. சினிமா அரசியல் உலகில்தான் எனக்கு ஆர்வம். அதைத் தவிர்த்து வேறு அரசியலில் ஈடுபடப்போவதில்லை. எந்தவொரு கட்சியும் என்னிடம் தேர்தலில் போட்டியிடச் சொல்லவில்லை. அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை. நானும் யாரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதில்லை" இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை: