வியாழன், 11 மார்ச், 2021

ஆளூர் ஷா நவாஸ் : தமிழ்நாட்டின் அடையாளங்கள் அத்தனை மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

ஆளூர் ஷா நவாஸ் : எதெல்லாம் தமிழ்நாட்டின் அடையாளம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமோ அதன் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் முன்னேப்பதையும் விட வெகுண்டெழுந்து எதிர்வினை ஆற்றவேண்டிய தமிழ்நாடு
தமிழ்நாட்டு அரசு அமைதியாக இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருப்பது
பெரியாருக்கு உண்மையாக இருப்பது
திராவிட இயக்கத்திற்கு உண்மையாக இருப்பது எல்லாம் நாங்கள் உங்களடம் எதிர்பார்க்கவில்லை
அதெல்லாம் உங்களால முடியாது  அது எங்களுக்கு தெரியும்
குறைந்த பட்சம் உங்கள் தலைவி என்று அம்மா என்று சொல்கிறீர்களே அந்த அம்மையாருக்காவது உண்மையாக இருந்தீர்களா?
அந்த அம்மையார் இருந்தவரைக்கும் ஜி எஸ் டில கையெழுத்து போடவில்லை
தமிழ்நாட்டுக்கு ஒரு வரலாறு உண்டு .
பிரதமர் வேட்பாளர்களை தமிழ்நாடு அறிவிக்கும்
கலைஞர் பல பிரதமர்களை அறிவித்தவர்.
அதற்கு ஒரு படி மேலே போயி வி வி கிரி உள்ளிட்ட  பிரதிபா பாட்டீல் என்று குடியரசு தலைவர்களையே  அறிவித்தவர் அவர்     
அப்படி தமிழ்நாட்டுக்கு ஒரு பெரிய மரபு உண்டு! பெரிய வரலாற்று உண்டு!
குடியரசு தலைவர்களை பிரதமர்களை இங்கிருந்து நாம் அறிவிப்போம்
பிரதமராக இருந்த வி பி சிங்கிற்கு ஒரு பிரச்சனை என்றபோது பக்கத்துணையாக நின்று அவரை கட்டிக்காத்தது தமிழ்நாடு.
அவருக்கொரு ஆபத்து என்று பதறிப்போன போது அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து சென்னை  முதல் கன்னியாகுமரி வரை அவரை கொண்டுபோய் சேர்த்து இவர் எங்கள் தலைவர் என்று சொன்ன மண் தமிழ்நாடு.
அந்த அளவுக்கு நம் வரலாறு பின்புலம் உண்டு.
பிரதமரை தேர்ந்தெடுத்த மண்ணுக்கு வந்த சோகத்தை பாருங்க
பிரதமர் வேட்பாளரை அறிவித்த மண்ணுக்கு நேர்ந்த இழுக்கு பாருங்க   
ஒரு முதலமைச்சர் வேட்பாளரை . ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் என்று சொல்கிற கட்சி இவர்தான் எங்கள் முதலமைச்சார் வேட்பாளர் என்று அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன
ஒரு நோட்டாவுக்கு கீழே போன .. ஒரு சாரணர் தேர்தலில் கூட வெற்றி பெறமுடியாத ..... ஒருவர் சொல்கிறார் நாங்கதான் முதலவர் வேட்பாளரை அறிவிப்போம் .
எந்த இடத்துக்கு கொண்டுவந்து விட்டிருக்காங்க பாருங்க..

கருத்துகள் இல்லை: