மேலே சொன்ன கிரேக்கம், எகிப்து, துருக்கி, அரேபிய, இந்தியா உட்பட எல்லா பகுதிகளிலும் சேர்த்து அலெக்ஸ்சாண்ட்ரியா என்ற பெயரில் அவர் உருவாக்கிய நகரங்களின் எண்ணிக்கை 23
அதிலும் குறிப்பாக அன்று இந்தியாவின் ஒரு பகுதியாக கிரேக்க வரலாற்று ஆசிரியர்களால் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானில் மட்டும் அவர் அலெக்ஸ்சாண்ட்ரியா என்ற பெயரில் உருவாக்கிய நகரங்கள் 4, அவை
அலெக்ஸாண்ட்ரியா அரியானா, இப்போதைய ஹெராத்,
அலெக்ஸாண்ட்ரியா புரோப்தாசியா, இப்போதைய ஃபரா,
அலெக்ஸாண்ட்ரியா அரகோசியா, இப்போதைய காந்தஹார்,
அலெக்ஸாண்ட்ரியா காகசஸ், இப்போதைய பக்ராம்
இவற்றில் அலெக்ஸாண்ட்ரியா அரகோசியா என்ற நகரம் சந்திரகுப்த மவுரியன் காலத்தில், செலுக்கஸ் நிகேடார் என்ற அலெக்ஸ்சாண்டரின் கவர்னர் ஆட்சியில் தலைநகரமாக இருந்தது,
மவுரிய வம்சம் கிமு 322 - 185 காலத்தில் முடிவுக்கு வந்த பிறகு, இதே செலுக்கஸ் நிகேடாரின் வம்சத்தின் தலைவர்கள் கிபி 30–375 காலகட்டத்தில் குஷான வம்சம் என்ற பெயரில் ஒரு புதிய சாம்ராஜ்யத்தை ஆப்கானிஸ்தான் உட்பட்ட இந்தியாவில் உருவாக்குகிறார்கள்
இந்த கிரேக்க வம்சாவழியினர் உருவாக்கிய அரசின் மதமும் பவுத்தம் தான், அசோகர் காலத்தில் புத்தருக்கு எந்த உருவ சின்னங்களும் கிடையாது, இவர்கள் தான் முதல்முதலில் புத்தருக்கு மிக பெரிய பெரிய சிலைகள் உருவாக்கி, கிரேக்க நாட்டில் கடவுள்களுக்கு பெரிய சிலைகள் வைத்து வழிபடும் முறையை, புத்தருக்கு சிலைகள் மூலம், இந்தியாவில் ஒரு புதிய வழிபாட்டு முறையை கொண்டு வருகிறார்கள்,
அலெக்ஸாண்ட்ரியா அரகோசியா-வை தலைநகரமாக கொண்டு, இன்றைய வடஇந்தியாவின் பல பகுதிகள் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்டு தான் இருந்தன
அந்த வம்சத்தில் ஒரு முக்கியமான மன்னன் கனிஷ்கன், இவர் புத்த மதம் சார்ந்தவர், தனது நாணயங்களில் புட்டோ என்று கிரேக்க எழுத்துக்களை, மற்றும் புத்தரின் உருவத்தையும் பொறித்தவர்
இவர் காலத்தில் தான் அலெக்ஸாண்ட்ரியா அரகோசியா, என்ற நகரம் காந்தாகர் அல்லது காந்தாரம் என்று பெயர் மாற்றப்படுகிறது,
இன்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரம் அதே காந்தாகர் தான்,
சரி அண்ணா, எதோ இன்று சங்கீகளுக்கு நாம் ஒரு பர்னிச்சரை உடைக்க போகிறோம், என்று தொடங்கினீங்க, ஆனா அலெக்ஸ்சாண்டர், சந்திரகுப்த மவுரியன், செலுக்கஸ் நிகேடார், அசோகன், அப்புறம் கடைசியா கனிஷ்கர் என்று ஏதேதோ சொல்றீங்க, மேட்டருக்கு வாங்க என்று நீங்க யோசிக்கும் உங்க மையின்ட் வாய்ஸ் எனக்கும் கேக்குது
மகாபாரதம், 5000 வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட நூல், அது 10,000 வருஷத்துக்கு முன்னால், நம்நாட்டில் நடந்த உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு, என்று கதை விடும் சங்கீஸ், என் கேள்வி என்னவென்றால்,
இன்றைய தேதிக்கு, சுமார் 2300 வருடங்களுக்கு முன் கிரேக்க நாட்டில் இருந்த வந்த அலெக்ஸ்சாண்டர், உருவாக்கிய நகரமான அலெக்ஸாண்ட்ரியா அரகோசியா, என்ற நகரத்தை, இன்றைய தேதிக்கு, சுமார் 1900 வருடங்களுக்கு முன் கனிஷ்கர் என்ற கிரேக்க வம்சாவழி மன்னன் காந்தாகர் என்று பெயர் மாற்றியது வரலாற்று பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை எனும் போது
10,000 வருடத்துக்கு முன்னால நடந்த நிகழ்வு என்று நீங்க கதை விடும் மகாபாரதத்தில், எப்படி கண் தெரியாத திருதிராஷ்டிரனுக்கு, காந்தார நகரத்தில் இருந்து காந்தாரியை, மனைவியாக கொண்டுவந்தார்கள்
அப்போ மகாபாரதம் என்ற நாவலை நீங்க எழுதிய காலம் கிபி 400க்கு பிறகு தான் என்று ஒத்துக்கொள்ளவும், உங்க உளறல் கதைகளுக்கு எந்த சான்றும் கிடையாது, நாங்கள் கதை புத்தகம் என்று சொல்கிறோம் நீங்க அதை வரலாறு என்று சொல்லி ஏமாற்ற முயல்கிறீர்கள்
இந்த பதிவு உங்களுக்கு ரொம்ப எரிச்சல் கொடுக்குதுன்னா
ரொம்ப எரியுது தாங்க முடியவில்லை என்றால், எப்படியும் பேன் ஏசி இரண்டும் இருக்கும் உங்களவா வீட்டில் இருக்கும், இரண்டையும் ஹையில் வைத்து கொண்டு தூங்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக