இந்தியாவின் சர்வதேச நோய் எதிர்ப்பு சக்தி திட்டம், உலகின் மிகப்பெரியது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 மில்லியன் குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து நிர்வகிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு தடுப்பூசிக்காக செலவழிக்கும் ஒவ்வொரு டாலரும், இந்தியப் பொருளாதாரத்திற்கு $ 44 ஆக சேர்க்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் எப்படி கோவிட் -19 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன?
ஒரு தடுப்பூசியை உருவாக்க உண்மையில் பல ஆண்டுகள் ஆகலாம். ஆராய்ச்சி ஆய்வகங்களில் கருத்துருக்கான ஆதாரம் நிறுவப்பட்ட பின்னர், கட்டுப்படுத்தப்பட்ட உற்பத்தி செயல்முறைகள் உருவாக்கப்படுகின்றன. தடுப்பு மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக , மனிதப் பரிசோதனைகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.
கட்டம் 1: 20-100 தன்னார்வலர்களிடம் தடுப்பு மருந்து நிர்வகிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத் தரவுகள் உருவாக்கப்படுகின்றன.
கட்டம் 2: மிகவும் பொதுவான குறுகிய கால பக்க விளைவுகளைத் தீர்மானிக்க பல நூறு தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து நிர்வகிக்கப்படுகிறது. மேலும் தடுப்பூசிக்கு நோயெதிர்ப்பு அமைப்பு எவ்வளவு சிறப்பாக பதிலளிக்கிறது என்பதும் ஆராயப்படுகிறது. இது ‘இம்யூனோஜெனசிட்டி’ என அழைக்கப்படுகிறது.
கட்டம் 3: தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டவர்களின் (placebo or dummy) பாதுகாப்பை மீண்டும் உறுதிப்படுத்தவும், தீவிர பக்க விளைவுகள் மற்றும் நோய்த் தொற்றை தடுப்பதில் தடுப்பு மருந்தின் செயல்திறனும் இதில் பரிசீலனை செய்யப்படுகிறது.
தற்போது, கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பு மருந்து ஒரு வருடத்திற்குள் தயாரகியுள்ளது. உலகளவில் 68 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றில், 20 மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையை எட்டியுள்ளன. எட்டு தடுப்பு மருந்து வரையறுக்கப்பட்ட அல்லது அவசரகால பயன்பாட்டு ஒப்புதலைப் பெற்றுள்ளன. 2 தடுப்பூசிகள் வெகுஜனப் பயன்பாட்டிற்குத் ஒப்புதல் பெற்றுள்ளன.
கோவிட் -19 தடுப்பூசிகள் இவ்வளவு விரைவாக உருவாக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
பெருன்தொற்று என்பதால் உலகம் முழுவதும் நோய்த் தொற்று தொடர்பான தகவல் பரிமாற்றமும், ஒத்துழைப்பும் சீராக இருந்தது.
மேலும், கொரோனா வைரஸ், 2003ல் ஏற்பட்ட சார்ஸ், 2014ல் ஏற்பட்ட மெர்ஸ் போல மக்களிடம் பரவக் கூடியதாக இருந்தது. சார்ஸ், மெர்ஸ் வகை வைரஸ் பாதிப்புகளுக்கு ஏற்கனவே கணிசமான வேலைகள் செய்யப்பட்டுள்ளன.
உதாரணமாக, மாடர்னா நிறுவனம் கொரோனா வைரஸின் மரபணு வரிசை கிடைத்த 63 நாட்களில் தனது MRNA-1273 தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் இறங்கியது.
அரசாங்கங்களின் முதலீடுகள், புதுமையான நிதி மாதிரிகள் அனைத்தும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிதி அபாயங்களையும் உள்வாங்காமல் தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட அனுமதித்தன.
கோவிட் -19 தடுப்பூசியை தயாரிக்க கிடைக்கக்கூடிய ஒவ்வொரு தடுப்பூசி தளத்தையும் பயன்படுத்துவது மற்றொரு முக்கியமான காரணமாக அமைந்தது.
உதாரணமாக, தடுப்பூசி போல் எதிர்ப்பு சக்தியை உருவாக்கமால், உடலில் வைரஸ் புரதத்தை உற்பத்தி செய்யும் மூலக்கூறுகளை கொண்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசியை ஃபைசர் / பயோஎன்டெக் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் தயாரித்தது.
வைரஸ் புரதம் மூலம் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்படும். இந்த தொழில்நுட்பம் புற்றுநோய் சிகிச்சையில் சுமார் ஒரு தசாப்த காலமாக வளர்ச்சியில் இருந்தது.
இதேபோல், நான் ரெப்ளிகேட்ங் வைரஸ் திசையன்கள் பல ஆண்டுகளாக வளர்ச்சியில் இருந்தன. 2014-16 எபோலா தொற்று காலத்தில் மேற்கு ஆபிரிக்காவில் சுமார் 60,000 பேருக்கு அடினோவைரஸை அடிப்படையிலான எபோலா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டது.
இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது முந்தைய கட்டங்களில் சிம்பன்சி அடினோவைரஸ் அடிப்படையிலான பல தடுப்பூசிகளை முயற்சித்து வந்தனர். AZD1222 என்ற கோவிட்- 19 தடுப்பூசியை உருவாக்க இந்த தளம் மறுபயன்பாடு செய்யப்பட்டது.
வைரஸை செயலற்றதாக்கும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி செயல்முறையும் மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
ஒவ்வொரு தளத்தின் வரம்புகளையும் புரிந்துகொள்வது முக்கியம். எம்.ஆர்.என்.ஏ என்பது உடையக்கூடிய மூலக்கூறு ஆகும். குளிர்ப் பதனக் கிடங்குகளில் இதனை சேமிப்பது மிகவும் அவசியமாகும். இது, தடுப்பூசி விநியோகத்தை மேலும் சிக்கலாக்குகிறது.
வைரஸ் திசையன் தடுப்பூசிகள் மிகவும் நிலையானவை (2 முதல் 8 டிகிரி சி சேமிப்பு), என்றாலும் அதே திசையன் அதே நபருக்கு மற்றொரு நோய்க்கு பயன்படுத்த முடியாது. ஏனெனில் திசையன் எதிர்ப்பு நோய் எதிர்ப்பு சக்தி அதை பயனற்றதாக ஆக்கும்.
வைரஸை செயலற்றதாக்கும் தடுப்பூசிகள் பொதுவாக பாதுகாப்பானவை என்றாலும், சுவாச ஒத்திசைவு வைரஸ் மற்றும் அம்மை நோய்களுக்கு எதிராக அறிமுகப்படுத்தியதில் பல சிக்கல்கள் எழுந்தன. இதன், காரணமாக தடுப்பூசி உடனடியாக திரும்ப பெறப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக