போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் மணிபால் சிங், ரமேஷ், மணிஷ் ஆகிய 3 பேரும் சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில் பிடிபட்டனர். இதில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற மணிபால் சிங்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர். மற்ற இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஒருவர் இருப்பதாக விசாரணை தெரிவித்தனர்.
அதன்பேரில் தனிப்படை போலீசார் கும்பகோணத்தில் பதுங்கியிருந்த திருவாரூர் பிரபல கொள்ளையன் முருகனின் கூட்டாளியான கும்பகோணத்தைச் சேர்ந்த கருணாராம் என்பவனை கைது செய்து போலீஸார் விசாரணைக்கு அழைத்து வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மணிஷ் என்பவர் தன்ராஜ் வீட்டிற்கு கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு நகைகளை விற்பனை செய்வதற்காக ஒருமுறை வந்துள்ளதாகவும் அதன் பெயரிலேயே இந்த கொள்ளை திட்டத்தை அரங்கேற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் கும்பகோணத்தைச் சேர்ந்த கருணாராம் நேற்று காலையில் மூன்று பேரையும் காரில் அழைத்து வந்து தன்ராஜ் வீட்டு வாசலில் விட்டு சென்றதாகவும், கொள்ளை சம்பவத்தை முடித்துவிட்டு புறவழிச்சாலையில் காரில் காத்திருப்பதாகவும் கொள்ளை சம்பவம் முடிந்து தப்பித்து கும்பகோணம் செல்ல திட்டம் போட்டுள்ளனர். அதன் பின்னர் கொலையாளி சம்பவத்தை முடித்துவிட்டு கருணாராமை தொடர்பு கொண்டு பேசிய ரமேஷ் இருவரை படுகொலை செய்ததாக தகவல் தெரிவித்ததையடுத்து, பயந்துபோன கருணாராம் காரில் தப்பித்து கும்பகோணம் சென்று வீட்டில் பதுங்கியுள்ளான்.
அதன்பின்னர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரும் என்ன செய்வது என தெரியாமல் தன்ராஜ் காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். வழிதெரியாமல் சீர்காழியை சுற்றியுள்ள கிராமத்தினை சுற்றிச்சுற்றி வந்துள்ளனர். காரில் ஜிபிஎஸ் இருப்பதை அறிந்து காரை நடுவழியில் நிறுத்தி விட்டு,வயல் வரப்பு வழியாக நடந்து எருக்கூர் கிராமத்திற்கு சென்று உள்ளனர். அங்கு கிராம மக்களால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று பேரும் வலைத்து பிடிக்கப்பட்டனர்.
அங்கு போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்ற மணிபால்சிங்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர் மேலும் தன்ராஜ் வீட்டில் படுகொலை செய்யப்பட்ட மகன், மனைவி ஆகிய இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்ட மணிபால்சிங் உடல் அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக கைது செய்யப்பட்ட மூன்று நபரிடம் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே, கொலையாளிகள் மிரட்டுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி பொம்மை துப்பாக்கி எனவும், அவை அமேசானில் விலைக்கு வாங்கியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக