Chinniah Kasi :
தீக்கதிர் :
மும்பை:
அர்னாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டிவி-க்கு, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளி எனப்படும்- டிஆர்பி (Television Rating Point) மதிப்பை அதிகரிக்க, லஞ்ச முறைகேட்டில் ஈடுபட்டு, கடந்த அக்டோபர் மாதம் கையும்களவுமாக சிக்கினார்.
‘ரிபப்ளிக் டிவி’ சேனலை அதிகமானவர்கள் பார்க்கும் பட்சத்தில், விளம்பர வருவாய் அதிகரிக்கும் என்பதால், அர்னாப் கோஸ்வாமியே மும்பையிலுள்ள வீடுகளுக்கு மாதந்தோறும் ரூ. 400 முதல் ரூ. 500 வரை லஞ்சம் கொடுத்து தனது சேனல்களை மட்டுமேபார்க்க வைத்தது ஆதாரங்களுடன் அம்பலமானது.இந்நிலையில், டிஆர்பி முறைகேட்டு வழக்கில், 2-ஆவது குற்றப்பத்திரிகையை மும்பை போலீசார் தற்போது தாக்கல் செய்துள்ளனர். அதில், டிஆர்பி மதிப்பீட்டு அமைப்பான ‘ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வுக் கவுன்சிலின்’ (Broadcast Audience Research Council - BARC) முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்த்தோதாஸ் குப்தா, கைப்பட எழுதிக் கொடுத்த வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது.
‘ரிபப்ளிக் டிவி’ ஆசிரியர் அர்னாப்கோஸ்வாமியிடமிருந்து இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக பார்த்தோதாஸ் குப்தா தானாகவே ஒப்புக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த வாக்குமூலத்தில், அவர் மேலும் கூறியிருப்பதாவது:எனக்கு அர்னாப் கோஸ்வாமியை 2004 முதல் தெரியும். நாங்கள் ‘டைம்ஸ்நவ்’ பத்திரிகையில் ஒன்றாக வேலைசெய்தோம். நான் 2013-இல் பார்க் நிறுவனத்தில் சிஇஓ-வாக சேர்ந்தேன். அர்னாப் கோஸ்வாமி 2017 இல் ரிபப்ளிக்சேனலை தொடங்கினார். அப்போது, ரிபப்ளிக் தொலைக்காட்சி டிஆர்பி மதிப்பீட்டில் முதலிடத்தைப் பிடிப்பதற்கு நான் வேலை செய்தேன். இது2017 முதல் 2019 வரை தொடர்ந்தது. 2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமிஎன்னை லோயர் பரேலில் உள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.எனது குடும்பத்தினருடன் நான் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு உல்லாச சுற்றுலா செல்ல 6000 டாலர்பணம் கொடுத்தார். 2019-ஆம் ஆண்டிலும், அதே ஹோட்டலில் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்த அர்னாப், இந்தமுறை சுவீடன் மற்றும் டென்மார்க் குடும்ப சுற்றுலாவுக்கு 6000 டாலர்களை கொடுத்தார். 2017-ஆம்ஆண்டில், அர்னாப் என்னை ஐடிசி பரேல் ஹோட்டலில் சந்தித்து ரூ. 20 லட்சம் ரொக்கப் பணத்தை கொடுத்தார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் ஐடிசி ஹோட்டல் பரேலில் சந்தித்து தலா ரூ .10 லட்சம் கொடுத் தார். இவ்வாறு பார்த்தோதாஸ் குப்தாதெரிவித்துள்ளார். ஆனால், இந்த வாக்குமூலம் பொய்யானது. மிரட்டிப் பெறப்பட்டது என்று குப்தாவின் வழக்கறிஞர் அர் ஜூன் சிங் மறுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக