Oneindia Tamil
வழக்கம்போல, இந்த முறையும் விசிகவுக்கு சின்னம் பிரச்சனை பெரிதாக
வெடித்துள்ளது.. விசிகவுக்கு என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்..
அந்த கட்சிக்கென்று அடிப்படை உள்ளது.. கொள்கை உள்ளது.. கால் நூற்றாண்டாக
தமிழகத்தில் களம் கண்ட கட்சி..!
அந்த வகையில், தனித்தன்மை என்ற ஒன்று விசிகவுக்கு தேவையானதாக இருக்கிறது..
அப்படி கேட்பதில் எந்தவித தவறும் கிடையாது.. அது அவர்களின் தார்மீக
உரிமையும், விருப்பமும்..!
திருமா
இதே காரணங்களுக்காகத்தான், தனிச்சின்னத்தில் போட்டியிட போவதாக, முதலில்
வைகோ சொன்னார்.. பிறகு திருமாவும் அறிவித்தார்.. ஆனால், திமுக எதையுமே
கண்டுகொள்ளவில்லை.. அதற்கு காரணம், திமுகவை பொறுத்தவரை , இந்த முறை வெற்றி
பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. கூட்டணிகளுக்கு தொகுதிகளை அள்ளி
தந்துவிட்டு, பெரும்பான்மையை இழக்கவும் அக்கட்சி விரும்பவில்லை. அதற்கு காரணம், 2009, 2014 தேர்தல்களில் திமுக கூட்டணியில்
தனிச்சின்னத்தில்தான் விசிக போட்டியிட்டது.. ஆனால், விசிக தோல்வியையே
தழுவினர்... அதனால்தான், 2019ல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்
போட்டியிட்டு, ரவிக்குமார் எம்பி ஆகியுள்ளார்... அதாவது,
தனிச்சின்னத்தைவிட, உதயசூரியன் சின்னத்தில் வெற்றி வாய்ப்பு எளிதாக
கிடைக்கிறது.. உதயசூரியன் சின்னத்தில் ரவிக்குமார் பல லட்சம் வாக்குகள்
வித்தியாசத்தில் வென்றார்.. தனி சின்னத்தில் நின்ற திருமா ஆயிரம்
வாக்குகளில் தான் வெற்றி பெற்றார். இதே காரணத்தைதான் திமுகவும்
கூட்டணிகளிடம் வலியுறுத்தியது.
அதுமட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் விசிகவுக்குதான் புது சின்னம் அதிகமாக
கிடைக்கிறது.. இதுவரை இந்த கட்சிக்கு என்று நிலையான சின்னம் கிடையாது..
புது சின்னம்கூட கடைசி நேரத்தில் தான் தரப்படுகிறது. அதனால், அதை மக்களிடம்
கொண்டு போய் சேர்ப்பதில் பெரிய சிக்கல் இருக்கிறது.. (இதில் டிடிவி
தினரகன் மட்டுமே விதிவிலக்கு)
அதுமட்டுமல்ல, சின்னத்தை பிரபலப்படுத்தவே நேரம் சரியாக இருக்கும்போது, மற்ற தேர்தல் வேலைகள், பிரச்சாரங்கள், அப்படி அப்படியே தேங்கி போய்விடும் வாய்ப்பும் உள்ளது.. அதனாலேயே உதயசூரியனை விசிக தேர்ந்தெடுக்கும் என தெரிகிறது.. அப்படி உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெறும்போது, கணிசமான தொகுதிகளில், தொங்கு சட்டசபை அமைந்தால் ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும் என்று விசிக கருதுகிறதாம்... இனி தனிச்சின்னமா? உதயசூரியனா? பார்ப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக