ஞாயிறு, 24 ஜனவரி, 2021

இப்பவெல்லாம் தினம் தினம் பூஜைதான்...அய்யர் காட்டில் அடைமழை தான்.

பாலகணேசன் அருணாசலம் : · கடவுள் வியாபாரிகள் எந்த ஒரு

கொறைச்சலும் இல்லாமல் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கிட்டிருக்கானுக... நான் ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் சிவன் கோவிலுக்கு தவறாமல் சென்றுவிடுவேன்...25 வருடத்துக்கு முன்பெல்லாம் எங்க ஊரு சிவன் கோவிலில் விஷேசம் நடப்பதெல்லாம் வருடத்துக்கு ஒருமுறைகூட இருக்காது. . அப்படியே இருந்தாலும் கூட்டம் அவ்வளவாக இருக்காது, மேலும் பிரதோஷத்துக்கு உற்சவர் பிரகாரத்தில் வலம் வர பல்லாக்கை தூக்குவதற்கு ஆள் கிடைக்காது... ரோட்டுல போகிறவர் வருபவரை கெஞ்சி அழைத்து தூக்கவைத்ததாக ஊர்ப் பெரியவர்கள் இப்பொழுது ஆன்மீகம் என்னும் பெயரில் கோவில்ளில் மக்கள் பொழுதுபோக்கு கூத்தடிப்பதைப் பார்த்து வேதனையுடன் சொல்லக் கேட்டிருக்கிறேன்
இதுபோல ஏகப்பட்டது .. இப்பவெல்லாம் தினம் தினம் பூஜைதான்...அய்யர் காட்டில் அடைமழை தான். ..முன்பு கோவிலுக்கு செல்லும் கூட்டம் குறைந்திருந்தது இப்போது அதிகரித்திருப்பதன் காரணம் கடவுளுக்கு வந்த திடீர் சக்தியினால் அல்ல... மக்கள் கையில் சில்லரை புரளுகிறது அதுதான் காரணம்...இதுமூடநம்பிக்கையா என்றால் கிடையாது
கையில் ஏத்தம் குறைந்தால் பொழப்பத் தேடித் தானாக போவான்....
நிற்க..
மனு தர்மம் இந்துக்களை குலவாரியாக பிரித்து வைத்துள்ளது...30- 35 வருடங்களுக்கு முன்பு பார்ப்பனர் அல்லாத மற்ற தொழிலை குலத்தொழிலாக செய்தவர்கள்(உதாரணம்; நெசவு) தற்போது எத்தனை பேர் அந்த தொழிலை செய்கிறார்கள் என்று பார்த்தோமானால், அன்றிருந்ததிலிருந்து 1 சதவிகிதம் கூட இருக்காது ....ஆனால் , அந்த காலக்கட்டத்தில் நம் தமிழ்நாட்டில் இருந்த கோயில்களைவிட தற்போது பல மடங்கு அதிகமாக ஆகியுள்ளது...
குலத்தொழிலாக நெசவு செய்தவர்களுக்கு தற்போது அந்த தொழில் கைகொடுக்கவில்லை...காரணம் தொழில்கள் இயந்திரமயமானதால்...
நெசவாளிகள் வீட்டுப் பிள்ளைகள் வேறு வேலையை நாடிச் சென்றுவிட்டனர்...
மீறி நெசவுதான் செய்வேன் குலத்தொழிலை காப்பாற்றுவேன் இந்து மத மனுதர்மத்தை போற்றுவேன் என அடம் பிடித்தால் கோயிலில் கிடைக்கும் இலவச சாப்பாடுக்கு ஆகும் செலவு போன்ற வருமானம் கூட கிடைக்காது...
அதே நேரம் , அந்த காலக்கட்டத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்த 300 கோயில்களின் எண்ணிக்கை தற்போது 350 கோயில்களாக அதிகரித்திருப்பதன் காரணமாக மேலும் பல பார்ப்பனர்களுக்கு வேலை கிடைத்துள்ளது...அதுவும் என்ஜினியர் டாக்ட்டர்களுக்கு கிடைக்கும் வருமானத்தைவிட அதிகமாக...
அவர்களுக்கு நிரந்தரமாக குறைவில்லா வருமானம் கிடைக்கும் கட்டமைப்பை மனு தர்மம் உருவாக்கி வைத்துள்ளது
அவனுக்கு கிடைப்பதை குறை சொல்வது என்னுடைய நோக்கம் கிடையாது...ஆனால் அது கடவுள் பெயரால் கட்டமைக்கப்பட்டது என்பதை நாம் உணர மறுப்பது தான் இங்கு பிரச்சினை....அதன் காரணமாகத்தான் அவனின் சூழ்ச்சியை சுட்டிக்காட்டும் அரசியல் தலைவர்கள் மீது அவர்களால் சுலபமாக அவதூறு பரப்ப முடிகிறது...
கடவுள் வேண்டாம் என்று சொல்லி புரியவைப்பது சுலபமான காரியம் அல்ல..தூணிலும் துரும்பிலும் உள்ள கடவுளை ஏன் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும்...அவரவர் வீட்டு பூஜையறை போதுமே...

கருத்துகள் இல்லை: