tamil.oneindia.com- Hemavandhana : சென்னை: திமுக தலைவரின் கூட்டணி கணக்கு சரியான திசையிலேயே போய் கொண்டிருக்கிறது என்றும், விரைவில் திமுகவே ஆட்சிக்கட்டிலில் ஏறும் என்றும் உடன்பிறப்புகள் புளகாங்கிதம் அடைந்து சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
கூடிய சீக்கிரம் தேர்தல் நடக்க போகிறது என்பதால் அரசியல் களமே பரபரத்து காணப்படுகிறது.. ஆனால் கூட்டணிதான் இன்னும் எந்த பக்கமும் முடிவாகவில்லை.. எதிலும் அவசரப்பட்டு விடக்கூடாது என்பதால், பொறுமையாகவும், நிதானமாகவும் கூட்டணி தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுகவின் வியூகம் சற்று தூக்கலாகவே இருக்கிறது.. உண்மையிலேயே எந்த கட்சிகள்தான் அதன் கூட்டணிக்குள் இருக்கின்றன? பாமக உள்ளே வருமா? கமலுக்கு சான்ஸ் இருக்கிறதா? காங்கிரசுக்கு எத்தனை சீட்தான் தரப்படும்? வைகோ நிலைமை என்ன? என்பன போன்ற பல கேள்விகளும் வட்டமடித்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த கேள்விகளை தீவிரமான திமுகவினர் சிலரிடம் நாமே முன்வைத்தோம்.. அவர்கள் சொன்னதாவது: முன்னாடி மாதிரி இல்லை தலைவர்.. எதையும் பார்த்து பார்த்து முடிவுகளை எடுக்கிறார். . இப்பகூட பார்த்தீங்கன்னா எந்த கூட்டணி கட்சியையும் அவர் கழட்டி விடணும்னு நினைக்கவே இல்லை.. காங்கிரசுக்கு ஒரு சீரியஸ்தன்மை வரணும்னு தான் புதுச்சேரி விஷயத்தை அப்படி டீல் செய்தாரே தவிர, காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி வைக்க யோசிக்கவே இல்லை.
ராமதாஸ் அதேமாதிரி பாமகவுடன் மறைமுக பேச்சுவார்த்தைன்னு சொல்றாங்க... அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை.. துரைமுருகன் வேண்டுமானால் ஆசைப்பட்டிருக்கலாமே தவிர, தலைவர் அப்படி நினைக்கவே இல்லை.. சென்ற முறையே எம்பி தேர்தலில், பாமகவை தோற்கடிக்கவே வியூகம் அமைக்கப்பட்டது.. அதன்படியே பாமக தோல்வியை சந்தித்தது.. இந்த முறையும் அவங்களை உள்ளே கூப்பிட்டால், எப்படியும் வடமாநிலத்தைதான் கேட்பார்கள்.. ஆனால் வடமாநிலத்திலேயே திமுக பலமாகத்தான் இருக்கிறது.. அதனால் பாமக தேவையே இல்லை. அதனால்தான் ஆரம்பத்தில் இருந்தே பாமகவை பேச்சுவார்த்தை என்ற விஷயத்திற்குள் சேர்க்காமல் வெளியில் வைத்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக