ஞாயிறு, 24 ஜனவரி, 2021

ஆசீவகம் ! சமணத்திற்கும் பௌத்தத்திற்கும் வேதத்திற்கும் முன்பிருந்த சிந்தனை மரபு

ஆசீவகம்  வேதங்கள் தொகுக்கப்படுவதற்க்கு முன்பே உருவான மரபு ஆகும். இது பெளத்தம் சமணம் தமிழகத்தில் கால் பதிப்பதற்க்கு முன்பே தமிழகத்தில் தோன்றி வட இந்தியா முழுமைக்கும், இலங்கையிலும் பரவி இருந்த ஒரு சிந்தனை மரபு. இதற்கான சான்றுகள் தமிழகத்தில் அதிகம் கிடைகின்றன. இம்மரபுக்கு பின்னரே பெளத்தமும் சமணமும் தோன்றின. புத்தர் தனக்கு முன்பிருந்த ஒரு மதத்தினை சீர் செய்யவே விரும்பியதாக கூறியுள்ளார். புத்தருக்கு முன்பிருந்த மதங்கள் ஆசீவகமும், ஜைனமுமே. அன்று வேதமதம் வளர்ச்சியின் தொடக்கதில் இருந்தது. ஆசீவக மதத்தை பற்றி ஆய்வு செய்தோரெல்லாம் வட இந்தியாவை அடிப்படையாக கொண்டே ஆய்வு செய்தனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாசியம் ஒருவரே தமிழக இலக்கியங்களையும் சேர்த்து ஆய்வு செய்தார்.

ayyanar123 ஆசீவகம் ஒரு பார்வை ! முன்னுரை . ஆரியர்கள் சிந்து சமவெளியில் குடியேறியபோது அங்கு வாழ்ந்த மக்கள் அறிவு பூர்வ நாகரீக மக்களாக இருந்தனர். 

ஈரானியனிய மக்கள் தான் சிந்து சமவெளி மக்களுக்கு நாகரீகத்தையும் விவசாயத்தையும் கற்றுக்கொடுத்தனர் என்ற கருத்து வட நாட்டவர்களாலும், வெளிநாட்டவர்களாலும், திட்டமிட்டு பரபப்பட்டு வருகின்றது. ஆரியர்கள் இந்தியாவினுள் நுழைந்த போது அவர்களுக்கென தனி மதம் இல்லை. அவர்கள் காக்கேசிய நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்த நாடோடி சமூகத்தினர். அவர்களுக்கென தனிமதமும் இல்லை எழுத்து மொழியும் இல்லை. அவர்கள் இயற்கையை தெய்வமாக வணங்கினர். பின்னர்... இன்றைய இந்திய நிலத்திலிருந்த வழிபாடுகளை தாங்களும் பின்பற்ற தொடங்கினர். ஆரியர்களின் மதம் வேத மதம். இயற்கையின் முதல்வனான இந்திரனையே அவர்கள் முதல் தெய்வமாக வணங்கினர் சிவனை அல்ல. நான்கு வேதங்கள், மனு தர்மம் இவற்றைக்கொண்டு வேள்வியிடல், ஆடு, மாடுகளை உயிரினங்களைப் பலியிடல், சாதியத்தை பேணுதல் போன்ற செயல்கள் நடத்தப்பெற்றன. உபநிடதங்கள் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாய் கொண்டது.

ஆரியரின் வேள்விகள் பொருளற்ற சடங்குகள், வழிமுறைகள், சம்பிரதாயங்கள் ஓரளவிற்க்கு வட புலத்தில் வரவேற்பை பெரும் பொழுது பொய்யான வேள்வி, சடங்கு, சாதிகளிலிருந்து வேதியருக்கு எதிராகவும், வைதீக கொள்கைகளுக்கு எதிர்ப்பாக சில மக்கள் பிரிவுகளும் கொள்கைகளும் உருவாயின அப்பிரிவுகள், தத்துவ சிந்தனை மரபாகவும், மதங்களாகவும் உருமாறின. பின்னர் ஆரியரது கொள்கைகள் தென் புலத்தில் திணிக்கப்படவே அதன் எதிர்ப்பாய் தென் புலத்தில் உதித்த சிந்தனை மரபே ஆசீவகம் ஆகும். அதுவரை வேத மரபு ஒரு மதமாக உருப்பெரவில்லை. 

ஆரியர்களை கொள்கை ரீதியில் எதிர்க்கத் தொடங்கிய உடன் அவர்கள் தங்கள் இனங்களை எச்சரிக்கையோடு ஒருங்கிணைத்து மதமாய்ச் சமைத்தனர். அன்று வரை வேதங்கள் தொகுக்கப்படவில்லை. வாய்வழியாகவே கதைகளாக கடத்தப்பட்டு வந்தது ஏனெனில் அவர்களுக்கென்று எழுத்து முறை கிடையாது. ஆனால் சமஸ்கிருத எழுத்துக்கள் உருவாதற்க்கு முன்பு பிராகிருத எழுத்து முறையே பின்பற்றினர். பிராகிருத எழுத்து என்பது தமிழியை அவர்களின் உச்சரிப்புக்கு ஏற்றார் போல் எழுதிக்கொள்ளுதல் ஆகும். கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வாக்கிலே தான் வேதங்கள் முறையாக உருவாக்கப்பட்டு தொகுக்கப்பட்டு அனைத்து கதைகளும் நூல்களாக மாற்றம் பெற்றன. 

இதில் பல புனைக்கதைகள், சிந்தனைக்கு ஒவ்வாத இயற்கைக்கு முரணான கதைகளும் அடங்கும், அதே நேரம் அதில் பல வரலாற்றுத் தகவல்களும் மாற்றி கதைகளாக பிணைக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் கர்மா என்ற கொள்கையை புகுத்தியதே வைதீக மதம் தான். வைதீக மரபு புராணங்களை அடிப்படையாய் கொண்டது. தமிழர் மரபு இயற்கைகொள்கையை அடிப்படையாய் கொண்ட அறிவு மரபு ஆகும். தன்னை உயர்ந்தவர்கள், நல்லவர்கள் என்ற பொருளில் அழைத்துக்கொண்டவர்களே ஆரியர்கள். ...... 

இவ்வாறு வேத மரபுக்கு சார்பாக (வைதீகம்சில மதங்களும் வேத மரபுக்கு எதிராக சில சிந்தனை மரபுகளும்(அவைதீகம்தோன்றின.


2.வைதீகம்: (ஆறு தரிசனங்கள்)                    
1.சாங்கியம் 2.யோகம் 3.நியாயம் 4.வைசேடிகம் 5.மீமாம்சம் 6.வேதாந்தம்
  1.   சாங்கியம்: கபிலரால் தோற்றுவிக்கப்பட்டதுஇருபொருள் வாதம் (இயற்கைஅறிவுள்ள பொருட்களைப் பற்றி பேசும்உடையதுசாங்கியம் 28 தத்துவங்களைக் கூறுகின்றது.
  2.    யோகம்:      பதஞ்சலியால் உருவாக்கப்பட்டதுதியானம்இயமம் முதல் சமாதி வரை அஷ்டாங்க யோகத்தை பற்றி பேசக்கூடியது.
  3.    நியாயம்: அட்சபாதரால் தோற்றுவிக்கப்பட்டது.  அளவையியலையும் அல்லது தருக்கவியலையும் (logic) அறிவாராய்ச்சியியலையும் (epistemology) அடிப்படையாகக் கொண்டதுநான்கு பிரமாணங்கள் பற்றி கூறுகின்றது.
  4.   வைசேடிகம்: கணாதரால் உருவாக்கப்பட்டதுஇந்நூல் ஆசீவக நவகதிர் நூலின் பொருத்தமற்ற மொழிபெயர்ப்பே என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்இந்நூல் அணுவியத்தைப்பற்றி பேசுகின்றது.
  5.    மீமாம்சம்: ஜைமினியால் உருவாக்கப்பட்டதுபூர்வ மீமாம்சம்உத்திர மீமாம்சம் என இரு பிரிவுகளை உடையதுஅறம்பொருள் இன்பம் வீடு என்னும் பொருட்கள் பற்றி பேசக்கூடியது.
  6.  .வேதாந்தம்: நான்கு வேதங்களின் இறுதியில் உள்ள மந்திரம்பிரமாணம்ஆரண்யம்உபநிடதம் இந்நான்கின் கூட்டே வேதாந்தம் ஆகும்.   

3.அவைதீகம்
          இவைகள் நாத்தீக மதங்கள்அல்லது மெய்யியல் மரபுகள்அல்லது சிந்தனை மரபுகள் என அழைக்கப்படும்.
                1.உலகாயதம் 2.ஆசீவகம் 3.பெளத்தம் 4.ஜைனம்
  1.    உலகாயதம்: இம்மரபு சாவகம் எனவும் அழைக்கப்படும்பொருள் முதல் வாதம் (materialistic) பொருள் முதல் அனுபவ வாதம் எனவும் அழைக்கப்படும்கடவுள் மாயயைபிறவிகள்ஆன்மா இவற்றை மறுக்கும் சிந்தனை மரபு ஆகும்இது காலம் காலமாக பலரால் உருவாக்கப்பட்டதுஇதன் முன்னோடி புத்த கோசர் ஆவார்.
  2.  ஆசீவகம்நந்தாசிரியன்பூரண காசியபரால்உருவாக்கப்பட்டு மற்கலியால் மதமாக நிறுவனமயப்படுத்தப்பட்டதுபல விதமான கொள்கைகள் பேணப்படுகின்றனஅவற்றுள் ஊழ்கம் என்னும் நியதிக் கொள்கை முக்கியம் வாய்ந்தது.
  3.  பெளத்தம்சித்தார்த்தரால் உருவாகப்பட்டு வளர்க்கப்பட்டதுமகாயானம் ஹீனாயானம் இருபிரிவுகளைக் கொண்டதுஇம்மதம் உலக அளவில் பரப்பப்பட்டு இன்று ஆசிய நாடுகளில் அதிகம் பின்பற்றப்படும் மதம் ஆகும்இம்மதம் சாக்கிய மதம் எனவும் அழைக்கப்படும்தமிழ்நாட்டிற்க்கு இம்மதம் அசோகரின் சமயம் பரப்பும் தூதுவர்களால் கொண்டுவரப்பட்டது.
  4.    ஜைனம்:ஆதிநாதரால் உருவாக்கப்பட்டு மகாவீரால் நிறுவனமயப்படுத்தப்பட்டதுஇம்மதம் கொல்லாமை புலால் உண்ணாமையை வலியுறுத்தியதுஇன்றளவும் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகின்றதுதிகம்பரம் சுவேதாம்பரம் என்னும் இரு பிரிவுகளை உடையது.

இங்கு நிறுவனமயம் என குறிக்கப்பெறும் சொல் ஒரு மதத்திற்கான கொள்கைகளை முறைப்படுத்தி  அம்மத்திற்கான புனித நூல்களை இயற்றியோ அல்லது தொகுத்தோ ஒரு கட்டமைப்புடன் விளங்குதலையே நிறுவனமயம் என குறிக்கப்பெகின்றது இச்சொல் பொருளீட்டும் தொழில் முறையை சுட்டாது நின்றது.  

4.ஆசீவகம்
வைதீக மதத்திற்க்கும் வேதியருக்கும் எதிர்ப்பாய் எழுந்த ஒரு சிந்தனை மரபே ஆசீவகம் ஆகும்இது வேதங்கள் தொகுக்கப்படுவதற்க்கு முன்பே உருவான மரபு ஆகும்.  இது பெளத்தம் சமணம் தமிழகத்தில் கால் பதிப்பதற்க்கு முன்பே தமிழகத்தில் தோன்றி வட இந்தியா முழுமைக்கும்இலங்கையிலும் பரவி இருந்த ஒரு சிந்தனை மரபுஇதற்கான சான்றுகள் தமிழகத்தில் அதிகம் கிடைகின்றனஇம்மரபுக்கு பின்னரே பெளத்தமும் சமணமும் தோன்றினபுத்தர் தனக்கு முன்பிருந்த ஒரு மதத்தினை சீர் செய்யவே விரும்பியதாக கூறியுள்ளார்புத்தருக்கு முன்பிருந்த மதங்கள் ஆசீவகமும்ஜைனமுமேஅன்று வேதமதம் வளர்ச்சியின் தொடக்கதில் இருந்ததுஆசீவக மதத்தை பற்றி ஆய்வு செய்தோரெல்லாம் வட இந்தியாவை அடிப்படையாக கொண்டே ஆய்வு செய்தனர்ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாசியம் ஒருவரே தமிழக இலக்கியங்களையும் சேர்த்து ஆய்வு செய்தார்
பல ஆண்டுகாலம் ஆசீவகம் தமிழகத்தில் வேரூன்றியிருந்தது என்பதனை தெளிவாக எடுத்துக்கூறினார்பின்னர் வந்த ஆய்வாளர்களில் ஆதி.சங்கரன்முனைவர்..நெடுஞ்செழியன்முனைவர்..விஜயலக்ஷ்மிபோன்ற ஆய்வாளர்களில் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் ஆசீவகம் தமிழகத்தில் பிறந்து வட இந்தியாஇலங்கைக்கும் பரவிய விதத்தை தக்க சான்றுகளுடன் நிரூபித்துள்ளார்அக்கோட்பாட்டினை ஆக்கியோரும் தமிழர்களே என்பதனை மிகத்தெளிவாக எடுத்து தனது நூலில் இயம்பியுள்ளார்ஆசீவகம் பற்றிய அறிவு தமிழர்களிடையே கடந்த 20 அல்லது 30 வருடங்களுக்கு உள்ளாகவே தான் வந்தது அதற்க்கு காரணம் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் செய்த பிழைகளும் நூல் எழுதியோர் செய்த பிழைகளுமே ஆகும்.
ஆசீவகம் ஜைன மதத்தின் ஒரு பிரிவாகவே காட்டப்பட்டு வந்ததுஇந்த பிழை கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து தோன்றியதுஅதற்க்கு முன்னர் ஜைனம் வேறுஆசீவகம் வேறு என்று தெளிவாகவே பல நூல்கள் வரையறை செய்திருந்தனஅசோக வதனம்திவாகர நிகண்டு பிங்கல நிகண்டுபெரியபுராணம்சிலப்பதிகாரம்மணிமேகலைநீலகேசி போன்ற நூல்கள் மிகத் தெளிவாகவே ஆசீவகத்தை வரையறை செய்தன.
ஆசீவகர்களை அம்மணர் என அழைக்கும் பழக்கம் உண்டுஅம்மணர் என்ற சொல்லே மருவி சிரமணர்சமணர் என்றானதுஆசீவகர்களின் குகைகள் மலைகள்பின்னர் வந்த ஜைன,  துறவிகளால் ஆட்கொள்ளப்பட்டதால் அவ்விடங்களில் முக்குடை அருகரை சிலையாக வடித்து வைத்தனர்இவ்வாறு ஆசீவகர்களின் இடங்களை கைப்பற்றியோர் போதி சத்துவர்கள் எனப்பட்டனர்ஜைனர்கள் ஆசீவகர்களின் கற்படுகைகளில் தங்கி வாழ்ந்ததால் அவர்களும் சமணர்கள் என்றே அழைக்கப்பெற்றனர்ஜைன மதத்தினரை தமிழர்கள் ஆரூகதர்அருகர்என்றும் அழைத்தனர்பின்னர் வந்த சில நூல்கள் புரிதலின்மையினால் செய்யப்பட்டதால் ஜைனர்களும் சமணர்கள் என்றே நூல்களில் அழைக்கப்பட்டதுஆசீவகர்கள் ஜைனர்களிடமிருந்து வேறுபாடு கொண்டவர்கள்ஆனால் பின்னால் வந்த சிவஞான சித்தியார்தக்கயாக பரணியுரை ஆகிய நூல்கள் ஆசீவகர்களை சமணர்கள் என்றே குறித்தன.
ஆசீவகர்கள் தங்கியிருந்த ஆசீவக கற்படுகைகள் தமிழி எழுத்து கொண்டு பொறிக்கப்பட்டிருக்கும்எடுத்துக்காட்டாக மதுரை மாங்குளம் கல்வெட்டினைக் கூறலாம்தமிழி கல் வெட்டுக்கள் காலத்தால் முந்தியவைஏனெனில் விகுதியை பிரித்து எழுதும் பழக்கம் கி.முமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழர்களின் பழக்கமாகும்.
 முதன் முதலில் ஆசீவகர் வேறுசமணர் என்று இன்று அழைக்கபடும் ஜைனர்கள் வேறுசமணர் மலைகளாக சொல்லப்படுபவை ஆசீவகர்களுக்கு உரியதே என்று தக்க சான்றுகளுடன் விளக்கியவர் பேரா.மகாலிங்கம் ஆவார்ஆனால் அவரின் ஆய்வு ஏனோ இருட்டடிப்பு செய்யப்பட்டது.
          ஆசீவகர்களுக்கும் சமணர்களுக்கும் பல பெரிய வேறுபாடுகள் உண்டு என்பதனை பின்வரும் கட்டுரைகளில் காணலாம்ஆசீவகம் நிலைபெறுவதற்க்கு முக்கிய காரணங்கள்வேதியரின் நெறிமுறைகளே ஆகும்.
வேள்விகளில் ஆடு மாடுகளைப் பலியிடல்வேற்றுமை பாராட்டுதல்சாதீய உணர்வுகளை விதைத்தல்தாங்களே கல்வி கற்க உகந்தோர் எனக் கூறி பிறரை அவமதித்தல்வேள்வி செய்தல்போன்ற செயல்களாகும்.
 மேலும் அன்னதானம்கோதானம்சுவர்ண தானம்அசுவ தானம்நில தானம் போன்ற தானங்களைப் பெற்று பொருளீட்டுவதிலேயே குறியாக இருந்தனர்அரசர்களிடமிருந்து பிரம்மதேயம் என்ற பெயரில் குடியானவர்களின் நிலங்களை அரசர்கள் மூலமாக பெற்றனர் அந்நிலங்கள் சதுர்வேதி மங்களங்கள் எனவும் அழைக்கப்பட்டதுஅக்காலத்தில் சைவமோவைணவமோ வழக்கில் இல்லைமேற்கூறிய வைதீக அவைதீக மதங்கள் மட்டுமே இருந்தன.
 கொல்லாமைபுலால் உண்ணாமைபோன்ற நற்கருத்துக்களை வளர்த்ததால் பெளத்தமும்ஜைனம்ஆசீவகமும்மக்களிடையே மேலோங்கி நின்றனஎப்பொழுதும்ஜைனம்பெளத்தம்ஆசீவகம் இம்மதங்களுக்குள் சமய காழ்ப்புணர்ச்சி அதிகம் இருந்தனஎப்பொழுதும் வாதிடும்சொற்சமய போர் நிகழும்வாதில் தோற்போர் வெற்றி பெற்றவரின் மதத்திற்க்கு மாறிவிட வேண்டும்இவாறாக ஒவ்வொரு மதத்தின் நிறை குறைகள் சுட்டிக்காட்டப்பட்டனஇம்மூன்று மதங்களும் துறவு மதங்கள் எனப்பட்டன.
பெளத்தர்கள் ஜைனர்களின் பொய்யான பரப்புரைகளால் ஆசீவகம் அழிவினைச் சந்தித்ததுஇல்வாழ்வு மேற்கொள்வோரும் வீடுபேறு அடைய முடியும் என்ற கொள்கையினை திரித்து ஆசீவகத்தின் மதிப்பை குறைத்தனர்இல்வாழ்க்கை அணுகாது இருந்தால் மட்டுமே வீடு பேறு அடையமுடியும் என்று ஜைனம் பெளத்தம் கற்பித்ததாலும்ஆசீவகர்களைப்பற்றி பல கட்டுக்கதைகளை கட்டிவிட்டதாலும் ஆசீவகம் தன் செல்வாக்கை மெல்ல இழந்தது.
கி.பி. 7ஆம் நூற்றண்டில் ஆசீவகம் வழக்கொழிக்கப்பட்டதுஆனால் அதன் வேர்கள் கி.பி. 14 நூற்றாண்டு வரை தமிழகத்தில் உயிர்ப்பொடு செயல்பட்டனஇன்றளவும் சில கொள்கைகள் செயல்பட்டு வருகின்றனமேலும் ஆசீவகம் வழக்கொழிக்கப்பட்டதால் பெளத்தம்சமணம்வேதம் போன்ற மதங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதுஇப்போட்டியில் வேத மதம் அழிவின் விழிம்பில் நின்றது.
 அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற எண்ணிய வைதீகர்கள் சொற்போரினை கலகமாகவும்உயிர்ப்பலியாகவும் மாற்றியமைத்தனர்ஜைனம்பெளத்தம் இவ்விரு மதங்கள் பற்றி அவதூறும் பரப்பினர்பின்னர் அழியும் நிலையில் இருந்த வைதீக மதத்தை தென்னாட்டில் ஆறு பிரிவு  வழிபாடாக  இருந்த சிவனை வேத மதமாக மாற்றி அவருக்கு ஒரு கதையை புனைந்து கொண்டனர்அவ்வாறே விஷ்ணுவையும் சேர்த்துக்கொண்டனர்சிவனும் விஷ்ணுவும் ஒரு கால் வழியினரே  அதற்கும் பல தொடர்புக் கதைகளை புனைந்துகொண்டர் இவ்வாறாக தென்நாட்டில் வழங்கப்பெற்ற வழிபாடுகளை தனதாக்கி  அதற்க்கு பல கதைகளையும் புனைந்தனர்.
மேலும் அன்று பரவலாக இருந்த ஆசீவக கடவுளர்களான பூரணர்மற்கலிகணிநந்தாசிரியன் இம்மூவருக்கும் கதைகளை கற்பித்து எல்லைப்புர தெய்வங்களாக மாற்றினர்ஆசீவகத்தின் கோட்பாடுகள் தமிழர்களிடையே மிக ஆழமாக வேரூன்றி இருந்ததால் அக்கோட்பாடுகளை அழிப்பதற்காக எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லைமாறாக வேத மதம் தன்னை காப்பாற்றிக்கொள்ள சில ஆசீவக கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டதுஎடுத்துக்காட்டாக தொடக்கத்தில் வேள்வியில் உயிர்ப்பலியை ஆதரித்த வைதீகம் இறுதியில் கொல்லாமையை ஏற்று நின்றது.         
 ஆசீவத்தின் கொள்கைகள் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் பிற மதங்கள் எடுத்துக்கொண்டதாலும்செய்த பாவத்தை போக்க எளிய நிவர்த்திகள் செய்தால் போதும்வீடுபேறு அடைய எளியவழிகளை கையாளலாம் போன்ற மதப்பிரச்சாரங்களினாலும் மக்கள் ஈர்க்கப்பட்டு அன்று அதிகமானோரால் பின்பற்றப்படாத வழிபாடுகள் (இன்றைய பெருஞ்சமய வழிபாடுகள் சைவம் வைணவம்எல்லாம் பெரிய மதங்களாய் உருவெடுத்தனஆசீவகம் நாட்டார்கள் ஊர் எல்கைப் புற தெய்வமாகவும் குல தெய்வங்களாகவும் மாற்றியமைக்கப்பட்டன
இதற்கிடையில் கி.பிஏழாம் நூற்றாண்டு வாக்கில் நின்ற சீர் நெடுமாற பாண்டியனால் சம்பந்தரிடம் வாதிட்டு தோற்றதால் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றம் செய்யப்பட்டனர்இவ்விடயத்தை பல தமிழக வேதாந்த வாதிகள் ஒரு சமய சார்புடையோர் மறுத்தாலும்இந்நிகழ்வு உண்மையே என பல்வேறு ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றனஎடுத்துக்காட்டாகமதுரை சித்திரைத் திருவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக கழுவேற்றம் நிகழ்வும் இன்றும் நடைபெறுதல்புதுக்கோட்டையிலும் மதுரையிலும் சில கோவில்களில் கழுவேற்றம் சிற்பமாக எழுதப்பட்டிருப்பது இதற்கு ஆதாரமாகும்..
ஆசீவகம் கி.பிஇரண்டாம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டதுஆனால் தமிழகத்தில் கி.பி 7 நூற்றாண்டில் இந்து மத எழுச்சிக்கு பின் 14ஆம் நூற்றாண்டுவரை தனித்துவமாகவே செயல்பட்டுவந்ததுகி.பிஏழாம் நூற்றாண்டு முதலே ஆசீவத்தின் தொடர்ச்சியாய் சித்த மரபுகள் தோன்றத்தொடங்கின.
 நூறுக்கும் மேற்பட்ட சமணர்கள் கோவில்கள் பெளத்த விகாரங்கள் இடிக்கப்பட்டு இந்து கோவில்களாக கட்டி எழுப்பபட்டதாலும்பல மன்னர்கள் இந்து மதத்தை தழுவியதாலும்சமண ஆசீவக பெளத்த மதங்களினை ஏற்றோர் பலர் கொடுந்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டதாலும் ஆசீவகம் சிறிது சிறிதாக செல்வாக்கை மக்களிடம் இழந்ததுஇதனை ந.மு வேங்கடசாமி நாட்டார் நூல்மூலம் அறியலாம்ஆயினும் பல தமிழ் தொல்குடிகள் ஆசீவகம் என அறியாது அதன் கொள்கைகளை இன்றளவும் இந்து சமயத்தில் பின்பற்றி வருகின்றனர்.              

5.ஆசீவக தோற்றுநர்கள்
ஆசீவகம் மற்கலி கோசாலரால் உருவாக்கப்பட்டதென்றும் அவர் உத்தரப்பிரதேச பகுதியை சார்ந்தவரென்றும் பலரால் விளக்கம் தரப்பட்டதுஆய்வுகள் செய்தோரும் இத்தகவல்களை அடிப்படையாய்க் கொண்டே ஆய்வுகளைச் செய்தனர் ஆனால் இக்கருத்திற்க்கு தகுந்த ஆதாரங்களை தேடி மெய்பிக்கயிலவில்லை.
ஆசீவக முன்னோடிகள் பற்றி பெளத்த மத புனித நூல்களான திரிபீடகம் (சுத்தம்,தம்மம்,வினயபீடகங்கள்மஹாயான சூத்திரங்கள்ஜைனர்களின் அகமம் நூல் தொகுப்பு போன்றவை எடுத்துரைக்கின்றனதமிழில் நீலகேசிசிவஞானசித்தியார்போன்ற நூல்களும்பத்துப்பாட்டுஎட்டுத்தொகை போன்ற நூல்களும்ஆசீவகத்தின் கொள்கைகளைப் பேசுகின்றன.
ஜைனமும்புத்தமதமும் ஆசீவகத்தோடு போட்டியிட்டு வென்றிட வேண்டும் என்ற முனைப்பிலும்  காழ்ப்புணர்ச்சி காரணமாயும் பல அறிவுக்கு பொருந்தாத கதைகள் ஆசீவகர்கள் மேல் திணிக்கப்பட்டதுபுத்த ஜைனர்களின் வாதங்களை வைத்து பார்க்கும் பொழுது இவ்விரு மதங்களுக்கு முதன்மையானதும்  மாற்றானதுமாக மிக உயர்ந்த அளவில் இருந்த ஒரே மரபு ஆசீவகம் ஆகும்.
ஆசீவகம் கோட்பாடுகளைக் கொண்டு முன்னெழுந்த ஒரு மரபு ஆகும்அதில் மூவர்கள் முதன்மையானவர்கள்இம் மூவர்களைப்பற்றி புத்தர்களின் புனித நூலான மஜ்ஜிமா நிகாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      1.  நந்தவச்சா          - மாங்குளம் கணிநந்தாசிரியன்
2.  கிசா சங்கிச்சா     - மருகால்தலை வெண்காசியபர் (பூரணர்)
3.  மற்கலி கோசாலர்திருப்பிடவூர் மாசாத்தன் (கலி ஐயனார்)

இம்மூவரும் கழிவெண்பிறப்பை அடைந்தவர்கள்இம்மூவரில் ஆசீவகத்தை பெருங்கடவுட் சமயமாய் மாற்றியவர் கோசாலரேஇம்மூன்று ஆசிரியர்கள் பற்றிய கல்வெட்டும் தமிழகத்தில் காணக்கிடைகின்றனமேலும் இம்மூவருடன் நால்வர் சேர்ந்தே ஆசீவக மதம் தமிழகத்தில் தொடங்கப்பெற்றதாய் முனைவர்.நெடுஞ்செழியன் கூறுவார்மேலும் அந்த எழுவரில் ஐவர் தமிழர்இருவர் வடநாட்டவர் அவ்விருவரில் ஒருவர் மகாவீரர்.
நந்தாசிரியர் பற்றி மதுரை மாங்குளம் கல்வெட்டும்திருநெல்வேலி மருகால்தலை கல்வெட்டு வெண்காசியபர் பற்றியும்திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் உள்ள திருப்பட்டூர் கல்வெட்டு ஐயனார் பற்றியும் எடுத்துரைக்கின்றன.
நந்தாசிரியர் பற்றியும்வெண்காசியபர் பற்றியும் புத்த ஜாதக கதைகள் சிறுகுறிப்புக்களைக் கொண்டுள்ளனஅவற்றில் இவ்விருவரும் பெரிய அம்மணர்கள் என்று குறிக்கப்படுள்ளதுமேலும் அவைதீக எதிர்ப்பால் உதயமான கோட்பாடுகள் ஆசீவகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனமேலும் ஆசீவம் வான் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியது
சமண்ண பால சூத்திரத்தில்திக நிகாயம் ஆசீவக கோட்பாடுகள் பற்றியும் அதனை உருவாக்கிய ஆசிரியர்கள் பற்றியும் கூறுகின்றதுஆசீவக கோட்பட்டை உருவாக்கியவர்கள்அந்நூல் ஆசீவக கோட்பாடுகளை உருவாகியோர் ஆறுபேர் என கூறுகின்றதுமகத நாட்டின் மன்னரான அஜாதசத்ருக்கு எழுந்த ஆன்மீக சந்தேகங்களை தீர்ப்பதற்கு மகத அமைச்சர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களே இந்த அறுவர் எனவும் அந்நூல் கூறுகின்றது .
1.பூரண காசியபர்,       
2.மற்கலிகோசாலர்,
3.அஜிதகேசாம்பளி (நரிவெரூஉதலையார்)
4.பகுத கச்சாயனர் (பக்குடுகைநன்கணியார்)
5.நிகந்த நாத புத்திரன் (ஜைன மகாவீரர்)
6.சஞ்சய பேலட்ட புத்திரன்
புத்த நூல்கள் இவர்களை மூத்த ஆசிரியர்களாக குறிப்பதால் பெளத்த மதம் உருவாதற்கு முன்பே இவர்கள் ஆசிரியர்களாய் இருந்தது உறுதி செய்யப்படுகின்றதுஇதில் சஞ்சய பேலட்ட புத்திரன் கோட்பாடு ஆசீவகத்திற்க்கு முரணாய் காணப்படுகின்றதுஇந்த அறுவருடன் கணிநந்தாசிரியனையும் சேர்த்து எழுவர் ஆவார்.
திபெத்தில் வழங்கப்பெற்றுவரும் சமண்ண பால சூத்திரத்தில் இந்த அறுவரின் பெயர்களும் வெவ்வேறு விதமாக உள்ளது.
1.பூர்ண காசியப்பா 2. கோசாலி மகன் மஸ்கரின் 3. அஜித கேசகம்பளா 4.   ஜனதிரி மகன் நிர்கிரந்தர் 5.கக்குட காச்சாயனா 6. வைரத்தி மகன் சஞ்சயன் என்பனவாம்.
இவர்கள் மலைக்குன்றுகளில் இருந்து வந்தவர்கள் என அந்நூல் கூறுகின்றது.
தீர்த்த விடங்கர் என்றொரு பிரிவையும் இவர்கள் உருவாக்கியுள்ளனர்வீடற்று இவர்கள் நாடுமுழுதும் துறவிகளாய் உலவியதால் மக்களிடம் மிகுந்த நன்மதிப்பை பெற்றனர்இவர்களுக்கு பரதேசிகள் என பெயரும் உண்டு.
பரதேசிகள் என்றால் வெளிநாட்டவர்தேசம் விட்டு தேசம் சென்றவர்கள்இதற்கு பிற நாட்டவர் என்றே பொருள் கூறலாம்ஏனெனில் இவர்கள் தமிழ்நாடில் பிறந்து மகதம் சென்றவர்கள் தானேபரதேசிகள் என்ற சொல் இன்று திசையற்றவர் என்ற பொருளிலே ஆளப்படுகின்றதுமுனைவர்.பருவா இவர்களை புத்தருக்கு முந்தைய இந்திய தத்துவவியலாளர்கள் என குறிப்பிடுகின்றார்.         
மற்கலி கோசாலர் எனப்பட்டவர் ஜைன மகாவீரருடன் இணைந்து 6 வருடங்கள் துறவாற்றி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து,  கோசாலர் ஆசீவகத்தினை துவக்குகின்றார்பின்னர் ஆசீவகத்தை பெருங்கடவுட்சமயமாய் மாற்றுகின்றார்ஜைன மகாவீரர் ஜைனத்திலேயே தொடர்கின்றார்பார்சுவநாதருக்கு அடுத்து வந்த 24ஆவது தீர்த்தங்கரர்கள் மற்கலியும் மகாவீரரும் ஆவார்பின் வரும் மரபு வழிகள் மூலம் இதை அறியலாம்.
ஆசீவக மரபு: ஆதிநாதர்-பார்சுவநாதர்-மற்கலி(24ஆம் தீர்த்தங்கர்)
ஜைன மரபு: ஆதிநாதர்-பார்சுவநாதர்-மகாவீரர்(24ஆம் தீர்த்தங்கர்)
பெரிய அம்மணர்கள்பேரமணர்கள்என்று இன்று குறிக்கப்பெறுவது ஆசீவகர்களையேஇவ்விருவரில் முதலில் நிர்வாண நிலையை அடைந்தவர் கோசாலாரேஅதன் பின்பே மகாவீரர்  நிர்வாண நிலையை அடைந்தார்.          

6.நந்தாசிரியரும்காசியபரும் பற்றி
ஆசீவக ஏழு நிலைகளில் பரமசுக்க அல்லது நல்வெள்ளை நிலையை  அடைந்த மூவரில் கோசாலார் தவிர்த்த இருவர் கணிந்நதாசிரியரும் வெண்காசியபரும்கோசலரின் சம காலத்தில் இவர்கள் வாழவில்லைஅங்குத்தாரா நூலில் பிக்கு ஆனந்தர் அவர்களால் நல்வெள்ளைநிலை அடைந்தவர்களாக நந்தாசிரியர்காசியபர்கோசாலர் இம்மூவரும் குறிப்பிடப்படுகின்றனர்ஆசீவகர்களில் அனைத்து நிலைகளையும் கடந்து தூய்மை அடைந்தவர்கள் என சமண்ணபால சூத்திரம் இம்மூவரையும் சுட்டுகின்றதுஇதே கருத்துக்களைத்தான் மஜ்ஜிமா நிகாயத்தில் உள்ள சந்தக சூத்திரமும் கூறுகின்றது.       

பூரண காசியபர் அல்லது மஹாகாசியபர்
இவரின் பெயர் கோசாலாரின் பெயருடன் சேர்த்தே கூறப்பட்டுள்ளதுஇவரை பற்றிய தகவல்கள் நீலகேசியிலும் குணரத்தினரின் தாரக ரகசிய தீபிகை நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளனரகசிய தீபிகையில் கி.பி.1400ல் பூரணர் வாழ்ந்ததாக குறிபிடப்பட்டுள்ளது ஆனால் இது தவறான குறிப்புநீலகேசி நூலில் நீலகேசி ஆசீவக ஆசிரியர் பூரணரை தமிழக குக்குட நகரில் வாதத்தில் வெற்றி கொள்வதாக அமைந்துள்ளதுமணிமேகலை நூலில் பூரணர் மூத்தவர் என்றே அழைக்கப்பட்டுள்ளார்பல பாளி நூல்களும் பூரணரை மூத்தவர் என்றே கூறுகின்றது.  பல பூரணர்கள் இருந்ததாக ஜைன இலக்கியம் கூறுகின்றது பெளத்த பூரணர் தலைமை சீடராகவும் விளங்கியவர்பரிநிர்வாணத்தை கோசாலாரிடமிருந்தே கற்றார்இவருக்கு மகா நந்த தேரர் என்ற பெயரும் உண்டுபுத்தர் இறந்த பிறகு முதல் புத்த பிக்குகள் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.  ஆசீவகர்கள் ஆடை அணிவதில்லை மரப்பட்டைகள் இலைகள் கூட அணிவதில்லைஎனவே ஜைன பகவதி சூத்திரம் காசியபரை முட்டாள் துறவி என்றே கூறுகின்றது.
இவர் தான் ஏற்கும் பிச்சையை நான்காக பிரித்து ஒரு பகுதி வழிப்போக்கர்களுக்கும்ஒரு பகுதி நாய்களுக்கும் காக்கைகளுக்கும்ஒருபகுதி மீன்களுக்கும்ஆமைகளுக்கும் ஒருபகுதியை தானும் உணவாக உட்கொள்வாராம்பல்லுயிர் ஓம்புதல் என வள்ளுவர் இதைத்தான் கூறினார் போலும். 12 வருட துறவு வாழ்க்கைக்கு பின் வடக்கிருந்து உயிர் துறந்தார்பூரணரின் கோட்பாடுகளும் செயல்முறைகளும் மற்கலியை அடிப்படையாய்க் கொண்டதேபூரணரே அபிசாதி என்னும் வண்ணக்கோட்பாட்டை கோசாலர் துணைகொண்டு நிறுவியவர்இது ஒருபோதும் இன்றைய சமூக ஜாதிபேதங்களையோ திருடன்முரடன் நல்லவன் போன்ற தகுதிகளையோ குறிக்காதுஇது வண்ணங்களை மட்டும் குறிக்கும்இது ஆசீவகம் பயிலும் சீடர்களுக்கானதுபூரணர் புத்தருடன் போட்டியிட்டே தற்கொலை செய்துகொண்டதாக தம்மபதம்திவ்யவதனம் போன்ற நூல்கள் கூறுகின்றதுதிபெத்திய நூல்களிலும் இது பற்றிய குறிப்புக்கள் உண்டு
நந்தாசிரியரும்பூரணரும் ஏழு மாணக்கர்கள் உடைய சோதிபால பள்ளியில் பயின்றதாகவும் அப்பள்ளி கோதாவரி நதிக்கரையில் உள்ள கவித்தை காடுகளில் அமைந்திருந்ததாகவும்அங்கு மேலும் மாணவர்கள் தங்குவதற்க்கு இடமில்லாத்தால் மற்ற இடங்களுக்கு அம்மாணவர்களை அனுப்பியதாகவும்மேலும் பூரணர் கும்பவதி நகருக்கு இடம்பெயர்ந்த்தாகவும்அந்நேரம் அந்நகரை ஆட்சி செய்தவர் தந்தகி என குறிப்பிடப்பட்டுள்ளதுஅந்நகருக்கு சென்றதால் அவருக்கு பெரும் துன்பமே விளைந்ததுஅவர் காலம் என்ற கன்னி வலைக்குள் சிக்கிக்கொண்டதாகவும் .அந்நகரமும் அழிந்து பூரணர் இறந்ததாகவும் அவரை எரியூட்டும் போது மழை கொட்டியதாகவும்  புத்த ஜாதககதைக் குறிப்பு கூறுகின்றது         
காசியபர் வெண்காசியபர் மகாகாசியபர் பூரண காசியபர் எனவும் அழைக்கப்படுவார்வெண்காசியபரை கிசா வாச்சா என்றே புத்த ஜாதகக்கதை அழைக்கின்றதுவாச்சா என்றால் ஆசிரியர் என்றே பொருள்படும்எடுத்துக்காட்டாக பெரிய வாச்சான் பிள்ளை என்பது பெரிய ஆசிரியரின் மகன் என்றே பொருள்படும்.
 இவர்களில் மூன்றாமவரே  கோசாலர்புத்த ஜாதக கதைகளில் கோசாலர் பற்றி குறிப்பிடப்படவில்லைபூரணரின் கற்பித்தல் என்பது சுருங்கச்சொல்லி விளங்கவைப்பதைப் போன்றதுஎடுத்துகாட்டாக ஒரு அரசர் பூரணரிடம் ‘எது இந்த உலகத்தை ஆள்கிறதுஎன் கேட்டபோது நிலம் தான் இந்த உலகத்தை ஆள்கிறது என பதிலளித்தார்இந்த பதிலுரை பல பொருள் செறிந்தது.   
  தகுதி என்ற ஒன்று இல்லைதகுதியற்றவர் என யாரும் இல்லைநேர்மைசுயகட்டுப்பாடு இவற்றால் தகுதி வருவதில்லைஇவை தகுதிக்கான கூறுகளும் இல்லைஎன்று கூறுகின்றார்புத்த ஜைன மதங்களுக்கு முன்பே  தோன்றி சரியான கட்டமைப்புடன் விளங்கிய மதமாக ஆசீவகம் விளங்குகிறது.   
கணியர் நந்தாசியர் வானவியலிலும் சோதிடத்திலும் சிறந்துவிளங்கியவர் ஆவார்அதை அவர்பெயர் முன் உள்ள கணியர் என்ற சொல்லே விரித்துரைக்கும்ஆசீவகம் வான் ஆராய்ச்சியிலும்சோதிடத்திலும் சிறந்து விளங்க இவரும் ஒரு காரணம் ஆவார்.      

7. மற்கலி கோசாலர் பற்றி  
கோசாலர்மற்கலி என தமிழிலும்பெளத்த நூல்களில் மஸ்கரின் கோசாலா என்றும்மகாவாஸ்து நூலில் கோசாலிகபுத்திரர் என்றும் அழைக்கப்படுகின்றார்சமஸ்கிருத நூல்களில் இவரைபற்றிய குறிப்புகள் அதிகமாக இல்லைஜைன நூல்கள் இவரை கோசால மன்கலிபுத்திரா என்றே கூறுகின்றதுபகவதி சூத்திரத்தில் மற்கலியின் 24 வருட வாழ்க்கை பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
கோசாலர் 6 வருடங்கள் புண்ணிய பூமி என்ற இடத்தில் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளதுமற்கலி மகாவீரரை முதன் முதலாக நாளந்தா அருகே உள்ள ஒரு இடத்தில் சந்திக்கின்றார். 6 வருடம் இருவரும் ஒன்றாக துறவாற்றி கருத்து வேறுபாடு காரணமாய் பிரிகின்றனர்ஆனால் (கல்ப சூத்திரம் நூல் ஒரேயொரு பருவம் மட்டும் மகாவீரர் புண்ணிய பூமியில் இருந்ததாக கூறுகிறது.)  அதன் பின் 16 ஆண்டுகள் கழித்து மகாவீரர் நிர்வாண நிலையை அடைகின்றார்.
ஜைனர்களின் புனித நூல் அங்கம்அகமம் அல்லது பகவதி சூத்திரம் என அழைக்கப்படுகின்றதுஅங்க சூத்திரத்தின் 15 ஆவது பிரிவு மற்கலி கோசாலார் பற்றி கூறுகின்றதுமற்கலி தன் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி உயர்ந்த அறிவை பெற்றதாக கூறுகின்றதுஏழுவகையான மாற்றங்கள் பற்றிய அறிவினை ஏழு இடங்களில் பெற்றதாயும் அந்நூல் கூறுகின்றதுஅவ்வேழு இடங்களில் தனது பள்ளிகளை நிறுவியதாகவும் கூறுகின்றது.
அவ்வேழு இடங்களாவன 1.இராக்கிகாரி, 2.உத்தாண்டபுரம், 3.செம்பை அல்லது சம்பை 4.வாணாரசி 5.ஆலபியம் 6.வேசாலி 7.சாவத்தி.ஆலபியம் என்ற ஊர் ஆலவி என்றே பாளி மொழிகளில் குறிக்கப்பட்டுள்ளன.
கோசாலர் தன்னுடைய 24 ஆம் ஆண்டு துறவு வாழ்க்கையில் சாவத்தி நகரை அடைகின்றார்சாவத்தி என்பது பெளத்தம்ஜைனம்ஆசீவகம் போன்ற துறவு மதங்களின் தலைநகர் ஆகும்அங்கு கோசாலர்ஆலகாலா என்ற பெண் குயவர் வீட்டில் அடைக்கலம் அடைந்து குயவர் சமுதாயத்தில் வாழ்கின்றார்அங்கு தங்கி 6 மாத காலம் கடும் தவம் புரிகின்றார்அங்கு 6 திசைபோக்கர்களை காண்கிறார்அவர்கள் திசைகாரர்கள் அல்லது திசை போக்கர்கள் என அழைக்கப்பட்டனர்.
1.சந்நா 2. கலந்தா 3.கணியார 4. அக்கிதன் 5. அக்கிவேசாயனா 6. அஜ்ஜுன கோமாயு புத்திரன்இதில் உள்ள பெயர்களில் கலந்தா என்ற பெயர் வைசேடிகம் என்ற சிறப்பியம் நூலை எழுதிய கணியாதனை குறிப்பதாக முனைவர்.பாசியம் கூறுகின்றார்அஜ்ஜுன கோமாய புத்திரனின் வேறு பெயர் அஜ்ஜுன பாண்டு புத்திரன் என்பதாகும்.  அதே போல் அக்கிவேசாயனரின் வேறு பெயர் சாக்கா நிகந்த புத்திரன் என்பதாகும்இந்த அறுவர் பற்றிய குறிப்பு ரத்தினசந்திரா அவர்களின் அர்த்த மகதி அகர முதலியில் கிடைப்பதாகவும் கூறுகின்றார்.
அவர் அவ்வறுவருடன் தன் கொள்கை கோட்பாடுகளைப் பற்றி விவாதித்தார்அவ்வறுவரும் அவர் கூறிய கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டனர்பின்னர் அக்கோட்பாடுகளைப் பின்பற்ற தொடங்கினர்இந்த அறுவர் மகாநிமித்தங்களையும், பூர்வம்மக்கம் (Magga) என்ற  நூல்களையும் உருவாக்கினர்பலரின் கருத்துரைகளுக்கு பின்னே இவை நூலாக வடிக்கப்பட்டன.
எட்டு மகாநிமித்தத்தில்இந்த உயிர்ப்புள்ள உலகம் நிலையான எதிர் எதிர் கொள்கைகளை உடையதுஇதை மனித வாழ்க்கையில் நீக்க இயலாத காரணிகள்  இன்பம் துன்பம் லாபம் நஷ்டம்பிறப்பு இறப்புஇது போல் ஒரு நிலையான கொள்கையை உலகில் வேறு எங்கும் காணமுடியாது.   இக்கொள்கையானது யின் மற்றும் யாங் என்று அழைக்கப்படும் சீன தாவோ கொள்கையின் முன்னோடி கொள்கை அல்லது அடிப்படை கொள்கை ஆகும்.
மகாவீரர் பலகாலம் கழித்து சாவத்தி நகரை அடைந்த பொழுது பெரும் வியப்புக்குள்ளனார்ஆசீவகர்களின் மேம்பட்ட நிலையை கண்டார்பெளத்தர்களுக்கு முன் சாவத்தி நகரில் ஆசீவகத்தை மேம்பாடு செய்து வைத்திருந்தனர்.  
தான் இறப்பதற்க்கு ஒரு வாரத்திற்கு முன் மிகுந்த காய்ச்சலுடன் காணப்பட்டார்நான்கு வகையான குடிநீர்களை மட்டுமே அருந்தினார்தான் இறப்பதற்க்கு முன் தன் இறுதி சடங்குகளை எவ்வாறு செய்யவேண்டும் என தன் ஆறு மாணாக்கர்களுக்கும் விளக்கினார்அது போலவே அம்மாணவர்கள் தன் ஆசானின் இறந்த உடலை புதைத்தனர்.
 பாணினியின் சமக்கிருத சூத்திரத்தின் படி மன்கா என்றால் கையில் படத்தை வைத்துக்கொண்டு இரந்துண்ணுபவரென என பொருள்படும்.  கோசாலரின் தந்தை சிவனின் படத்தை வைத்துக் கொண்டு இரந்துண்டவர் என்று முனைவர் கார்னலே கூறுகின்றார் ஆனால் அது உண்மையன்றுமஸ்கரின் என்றால் மூங்கில் தப்பைகளை சுமந்து செல்பவர் என பொருள்படும்மேற்கு வங்கம் அருகில் உள்ள லாதா என்ற புண்ணிய பூமி அருகில் உள்ளவர்கள் அதிகமாக காவலுக்காக நாய் வளர்த்து வந்ததால் ஆசீவகர்கள் தங்களை நாய்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள மூங்கில் தப்பைகளை பயன்படுத்தியுள்ளனர்மூங்கில் தப்பைகளை சுமந்து சென்றுள்ளனர்இதைத்தான் மஸ்கரின் என்றால் மூங்கில் தப்பைகளை சுமப்பவர் என்ற பொருளில் பாணினி கூறியுள்ளார்.
இதன் மூலம் நாம் அறிவது பாணினி காலத்திற்கும் முன் தோன்றியதே ஆசீவக சமயம் ஆகும்ஆனால் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லைபாணினி கருத்திலிருந்து பதஞ்சலி மாறுபடுகின்றார்மற்கலி என்பது எவ்வினையும் புரியாதே(Don’t perform Actions) என்பதன் சுருக்கம் என்றே கூறுகின்றார்ஆப்தன் என்றும் ஒரு பெயர் மற்கலிக்கு உள்ளதாக முனைவர் பாசியம் கூறுகின்றார்.  
தம்ம பதம் சூத்திரத்தின் படி கோசாலரிடம் சேர்ந்த மாணவர்கள் பலர் செட்டியார் (வங்கிஇனத்தை சேர்ந்தவர்கள் ஆவர்சாவத்தி நகரைச் சேர்ந்த அனைத்து செட்டியார்களும் ஆசீவகத்தையே பின்பற்றினர்சாவத்தி நகரில் உள்ள ஆண்களும் பெண்களும் ஆசீவகத்தை முதன்மையாக பின்பற்றினர்.
குறிப்பாக மற்கலியை பற்றி ஜைனபெளத்த இலக்கியங்கள் காணப்படும் சொற்கள் சொற்டொடர்கள் பாளி மொழியை சேர்ந்தவை அல்ல அது பிராகிருத மொழியை சார்ந்ததேஜைனபெளத்த மதங்களுக்கு முன்பே சீரிய கட்டமைப்புடன் இருந்த மதமே ஆசீவகம் ஆகும் என முனைவர் பருவா கூறுகின்றார்மஹாபாரதத்தில் மன்கி என்ற பாத்திரம் கோசாலரை ஒட்டி அமைவதாக பாசியம் கூறுகின்றார்.
மகாவீரரும் கோசாலரும் பிரிந்த இரண்டே ஆண்டுகளில் கோசாலர் நிர்வாண நிலையை எட்டுகின்றார்ஆனால் பலவருடங்கள் கடந்த பின்னரே மகாவீரர் நிர்வாண நிலையை அடைகின்றார்.மகாவீரருக்கு பின்னும்கோசாலருக்கு பின்னும் மதத்தை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் தோன்றவில்லை
மற்கலி கோசாலர் பிறந்த ஊராக சிராவன என்று குறிபிடப்பட்டுள்ளதுசிராவனம் என்பது திருச்சிராப்பள்ளியின் பழைய பெயர் ஆகும்சிரவனாஅல்லது சரவணா என்ற பெயர் முருகனை குறிப்பதாகும்சமணம் என்ற சொல் சிரமணம் என வட மொழியில் திரியும் அது போல் வனம் என்பது வனா என்றே வட மொழியில் திரியும்அதன் படி நோக்கினால் முனைவர் க.நெடுந்செழியனின் ஆய்வு சரியேமற்கலி தமிழரேதிருச்சியை சேர்ந்தவரேஆசீவகம் தொடர்புடைய பல நகரங்கள் தமிழ்நாடில் உள்ளது ஆனால் அதன் உண்மைப்பெயர்களை கட்டவிழ்ப்பது சற்று கடினமே
புத்த நூல்களில் ஆசீவகத்தின் இணையற்ற இறுதி தீர்த்தங்கரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் புத்தருக்கு முன்பே ஆசீவகம் தோன்றி இருந்ததை நம்மால் உறுதி செய்ய முடியும்.

8.ஆசீவகம் பற்றி அவதூறாக கூறப்பட்டவை
கோசாலர் தன் தலை நிறைய பேண் வைத்திருந்ததாகவும்அவர் மாந்திரீகம் அறிந்தவர் என்றும் பிச்சை எடுத்து உண்ணும் பெற்றோர்க்கு பிறந்தவர் என்றும் தவறான கொள்கைகளை போதிப்பதாகவும்அது என்றும் மனித குலத்திற்க்கு நன்மை ஏற்படுத்தாது என்றும் ஜைனர்கள் கூறினர்.
ஆசீவகர்கள் உடல் சுத்தம் பேணதாவர்கள் எனவும்தீ நடத்தை உள்ளவர்கள் எனவும் கூறினர்ஆர்த்ரகா என்னும் ஜைன துறவி ஆசீவகர்கள் ஒழுங்கீனமான பாலியல் நடத்தை கொண்டவர்கள் என்றும் தூற்றுகின்றார்மேலும் உபகன் என்னும் ஆசீவகன் காபா என்னும் வேடனின் மகளை மணந்ததாகவும் கூறுவர்.
ஆசீவகரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் புத்தரின் கொள்கைகளை எதிர்க்காமலிருக்கவும் சிங்காசுந்தரி என்ற கிராமபுறத்து இரு பெண்களையும் சாவத்தி நகருக்கு புத்தர் அனுப்பியதாக கூறப்படுகின்றது.. இதன் மூலம் ஆசீவகர்களுக்குள் சண்டை மூண்டதாகவும் அறிய முடிகின்றதுமேலும் பெளத்தர்கள் பல அவதூறுகளை பரப்பி ஆசீவகர்களுக்கு சமூகத்தில் இருந்த மதிப்புக்களைக் குலைத்தனர்மேலும் புஷ்ய மித்ர சுங்கன் ஆசீவகர்களை எங்கு காணினும் தலை கொய்ய உத்தரவிட்டான்
மற்கலி கோசாலரினை பற்றிய சில உண்மைகளை எழுதினாலும் பல உண்மைகளை புதைத்து ஆசீவக மதம் பற்றி தவறான செய்திகளை ஜைனர்கள் தங்கள் ஏடுகளில் காழ்ப்புணர்ச்சியால் எழுதிவைத்தனர்மேலும் ஜைன மதத்திலிருந்து ஆசீவக மதத்திற்க்கு மாறிய இரண்டு ஜைனர்களைதம் மதத்திலிருந்து பிரிந்து விட்ட காழ்ப்பால் அவ்விருவரையும் கோசாலார் தன்னுடைய மந்திர சக்தியால் கொன்றுவிட்டார் என்று கதை கட்டினர்.
கோசாலர் தவிர்த்து ஐந்து பேரின் கற்பித்தல்களும் மனித குலத்திற்கு தீங்கு விளைவிப்பனவாக இருந்தது என்று பெளத்த நூல்கள் கூறுகின்றதுஅதிலும் குறிப்பாக அங்குத்தாரா நிகாயத்தில் நூலில் புத்தரானவர்மற்கலி கோசாலரை ஒரு முட்டாள் என்றே திட்டுகிறார் ஏனெனில் கடவுளால் வழங்கப்படும் துன்பங்களை மனிதன் தீர்மானிப்பதில்லை என்கிறார்கோசாலரை ஒரு மீனவரைபோல் நடந்துகொள்கிறார் என்றும் மீனவன் எப்படி கழிமுகத்தில் நின்று வலை வீசி மீன்களின் உயிரை அழிப்பது போல் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டுகிறார்அதை விட ஒருபடி மேலே சென்று தலை மயிரால் செய்த ஆடையை அணிந்துள்ளான்ஆடைகளிலே இதுதான் மோசமான ஆடை என்று கூறுகின்றார்கோட்பாடு வெளித்தோற்றம்கொள்கை ஆடை என அனைத்திலும் இழிவானவர் மற்கலி என இகழ்ந்துரைகின்றார்இந்த இகழ்ந்துரைத்தல் அஜிதகேசாம்பாளரையே சுட்டினாலும் மற்கலியும் இதனுள் அடங்குவார்இதன் மூலம் பெளத்தத்தின் மிகப் பெரிய போட்டி அல்லது எதிர்ச்சமயமாக ஆசீவகம் விளங்கியது எனலாம்எந்த அளவிற்க்கு காழ்ப்புணர்ச்சி இருந்தால் அவர்மீது இத்தனை பழிச்சொற்களைக் கூற முடியும்ஆசீவக கருத்துக்களை பெளத்தம் எதிர்கொள்ள தயங்கியதே இந்த இழிவுரைக்கு காரணம்.          
பெளத்தம் தான் இப்படியென்றால் ஜைனம் இவர்களைவிட தூற்றியுள்ளதுகோசாலர் தன் இறுதி வாழ்நாளில் தான் மகாவீர்ருக்கு செய்த பாவங்களை எண்ணி வருந்தினார் என்றும்தான் ஒரு துறவியல்ல மகாவீரரே உண்மையான துறவி என்றும் தான் பல துறவிகளின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும் அதனால் தான் இறந்த பிறகு தன் காலில் கட்டு கட்டிமூன்று முறை முகத்தி உமிழ்ந்து  சாவத்தி நகரின் தெருக்களில் இழுத்துச் செல்லுமாறும் செல்லும் போது இவர் ஒரு உண்மையான ஜைனர் அல்ல மகாவீரரே உண்மையான ஜைனர்  என கூறிச்செல்லுங்கள்என்னுடைய உடலை மரியாதையுடன் அகற்ற வேண்டாம் என்றும் தன் சீடர்களுக்கு கூறிச்சென்றதாக பகவதி சூத்திரம் கூறுகின்றது.

9.கோசாலரின் கோட்பாடுகள்
ஆறு திசைபோக்கர்களை சந்தித்த நிகழ்வு என்பதனை சரியாக கூறவேண்டுமானால் அந்த ஆறு பேரும் கோசலரின் முதன்மை சீடர்கள் ஆவர்அவர்கள் கோசாலர் இறப்பதற்க்கு முன்பு முறையான கற்றலை கோசாலாரிடமிருந்து பெற்றுக்கொண்டு அதனை மக்கள் பின்பற்ற கோட்பாடுகளாக வகுத்தனர்ஆறுபேரும் ஒரு குழுவாக செயல்பட்டனர்இதேமுறை பெளத்ததிலும் ஜைனத்திலும் பின்பற்றபட்டதுஇந்நிகழ்வு பெளத்த மதத்தில் புத்தர் இறந்த பிறகுஜைன மதத்தில் மகாவீரர் இறந்த பிறகு 6 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டதுஇதிலிருந்து ஆசீவகமே இவ்விரு மதங்களுக்கும் முன்னோடி என புலப்படுகின்றது.
அந்த ஆறு பேரும் சேர்ந்தே அன்றைய பூர்வங்களைக் கொண்டு எட்டு மகா நிமித்தங்களையும்இரண்டு மகா பூர்வங்களையும் (மக்கா அல்லது உறுதிஉருவாக்கினர்எட்டு மகா நிமித்தங்களை உருவாக்கியவர்கள் ஆசீவகர்களேஎனவே எண்குணத்தார் என அழைக்கப்பட்டனர்பின்னர் இந்த எட்டு நிமித்தங்களை ஜைனமும் சைவ மதமும் கடன் வாங்கியதுஇன்றும் சிவஞானபோதத்தில் எண்குணம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
கோசாலர் பரிணாம வாதம் அல்லது பரிகார வாதம் என்னும் கோட்பாட்டை உருவாக்கினார்மேலும் பிறப்பு இறப்பு தொடர்புடைய சம்சார சுத்தி எனும் கோட்பாட்டை விளக்கியுள்ளார்இது மஜ்ஜிமா நிகயாத்தில் கூறப்பட்டுள்ளது
பரிணாம வாதம் பல்லுயிர் ஓம்புதல் பற்றி பேசுகின்றதுபரிணாம வாதம் மூன்று முக்கிய பிரிவுகளை உடையது.

1.நியதிக் கொள்கை 2. சங்கதி வாதம் 3. இயற்கை கோட்பாடு.

இவ்வுலகத்தின் எந்த ஒன்றும் மரணிப்பதில்லைவிதியும் ஒவ்வொரு நிகழ்வுகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுஅதில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லைஎனவே  இங்கு வாய்ப்புக்கள் என்று எதுவும் இல்லைஒன்று மற்றொன்றாக மாற்றம் அடையலாம்.
மனிதனின் வாழ்க்கை எட்டு படிநிலைகளை உடையதுஇது முன்னேற்ற படிநிலைகள் ஆகும்உடல் வளர்ச்சியோடு சேர்த்தே மன வளர்ச்சியும் ஏற்படும்உடலும் மனமும் இடைவினை புரியக்கூடியதுகாயம் சுத்தியாவதை விட மனமே சுத்திசெய்யப்படவேண்டும்மனம் வண்ணமற்றதுநம் எண்ணங்களும் செயல்களும் மனதிற்க்கு வண்ணத்தை தருகின்றதுமனதினை நிறமற்றதாகவே வைப்பது மனத்தூய்மையை நல்கும்.
அவ்வறுவர் உருவாக்கிய பூர்வங்களை அடிப்படையாய் கொண்டே  கோசாலர் இந்த உயிருள்ள உலகத்தை ஆறு பெரும் பண்புகளுடைய  பிரிவுகளாக பிரிக்கின்றார்.
எட்டு மகாநிமித்தங்கள் ஆசீவக கொள்கைளைப் பற்றி கூறுகின்றதுஇரண்டு மகா உறுதிகள்(மக்காமூன்று பிரிவைக்கொண்டதுஅந்த பிரிவுகள் இசை வடிவிலானவை.

1.கீதமார்க்கம் 2.நிருத்திய மார்க்கம் 3.லக்ஷணம்.

ஆசீவகர்களின் 8 மகா நிமித்தங்களையும் சிரமணபெலகோலாவில் உள்ள பத்திரபாகு கல்வெட்டுகளில் காணலாம்அது ஒரு வானவியல் மற்றும் சோதிடம் சார்ந்த நூலாக இருக்கலாம் என அறியமுடிகின்றதுஆசீவகர்களின் பூர்வங்கள்மகாநிமித்தங்களையும் இரண்டு மகா உறுதிகளையும் இன்றைய ஜைனம் பின்பற்றிக்கொண்டது.
ஜைனர்களின் அங்க நூல் உருவாக்கப்படுவதற்க்கு முன்பே உருவாக்கப்பட்டது தான் பூர்வங்கள்ஸ்வேதாம்பரர்கள் கூற்றுப்படி பூர்வங்கள் 14 எண்ணிக்கையை உடையதுஇவை அன்றைய அங்க நூலில் 12 ஆவது பகுதியில் திருஷ்டிவாதமாக சேர்க்கப்பட்டிருந்ததுகி.பி.பத்தாம் நூற்றாண்டுகளில் அவை காணாமல் போயினஅதன் பின் காந்தாரம் என்ற ஒரு பகுதியை அதற்கு பதிலாக அங்கநூலில் சேர்த்துக் கொண்டனர் எனவும் கூறுவர்.
பூர்வங்கள் என்றால் முன்னோடியானதுபழமையானது என பொருள்படும்இதன் மூலம்ஆசீவகர்கள் தனக்கென தனி இலக்கிய வளங்களையும் புனித நூல்களையும் கொண்டிருந்தனர் என்பதனை உறுதி செய்யலாம்.
உலகில் பாவம் அல்லது குற்றம் என்ற ஒன்று இல்லைபாவம் என்பதற்கு அடிப்படையே கிடையாதுஅது போல் தூய்மையான வாழ்க்கை என்று எதுவும் இல்லைஒரு செயல் ஒருவனால் வலிந்து நிகழ்த்தப்படுவதில்லைமனித செயல்பாடுகள் இயல்பானதுவீரம்திறம்வலிமைசெயல் என எந்த கூறுகளும் வாழும் உயிர்களிடம் இல்லைவிதி என்ற ஒன்றுதான் பலரின் வாழ்க்கையை பாதிப்படைய செய்கின்றதுஅனைத்து உயிர்களுக்கும் பிறப்பு என்பது பொதுவானதுஅனைத்து உயிர்களும் சுவாசிக்கின்றனஅனைத்து உயிர்களுக்கும் வாழ்க்கை என்ற ஒன்று உண்டு அவைகளுக்கு வலிமைநற்பண்புகள்சக்திகள் என எதுவும் இல்லை , இவையெல்லாம் விதிவாய்ப்புதீதுநன்றுஇயற்கை இவைகளில் இருந்து கிடைக்கும் அனுபவத்தால் ஏற்படுகின்றதுஅதனால் தான் நம் முன்னோர்கள் அனுபவமே சிறந்த ஆசிரியர் என்றனர்ஒருவருடைய வாழ்வில் தீதும் நன்றும் தொடர்ந்து அவருடனே பயணிக்கின்றனஇவை அதிகரிப்பதும் இல்லைகுறைவதும் இல்லைஅறிவுமிக்கோராயினும்பேதையாயினும்துன்பத்தின் முடிவில் ஒரு படிப்பினையை பெற்றே தீர வேண்டும் என்பது கோசாலரின் கோட்பாடு ஆகும்.        

10.அஜித கேசாம்பளி (நரிவெரூஉ தலையார்)
அஜிதம் என்றால் வெல்ல முடியாதவர் என்றும்நரி எனவும் பொருளுண்டுகேசாம்பளி என்றால் போர்வைபோன்ற தலைமயிர் என்பது பொருள்.இப்பொருள் விளக்கத்தை தந்தவர் முனைவர் க.நெடுஞ்செழியன் ஆவார்பொருள் முதல் வாதத்தை உருவாக்கிய இவர் சார்வக கோட்பாட்டின் முன்னோடி ஆவார்இக்கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டே உலகாயுத கோட்பாடு தோன்றியது.
ஒருவருக்கு பிச்சை இடுதல்அற்பணித்தல்தியாகம் செய்தல்அன்பளிப்பு நன்கொடை இதெல்லாம் ஒருவருக்கான தகுதிகள் இல்லைஇதன் மூலம் ஒருவருக்கு நன்மையோ தீமையோ விளையப்போவதில்லைசெய்கின்ற செயல்களில் நற்செயல்கள்தீச்செயல்கள் என்று ஏதும் இல்லைதாய் தந்தைக்கு சேவை செய்வதால் கூடுதலாக நற்பலன்கள் ஏதும் கிட்டப்போவதில்லைஅறிந்தவற்றிலிருந்தும்செயல்கள் மூலமும் இந்த உலகத்திலிருந்தும் படிப்பினையை பெற்றுக்கொள்ளவேண்டும்பொருளள்ளவற்றினை பொருளாக எண்ணுவது அறிவீனமே ,
மனிதன் நான்கு வித கூறுகளால் ஆக்கப்பட்டிருகின்றான்இறந்தவுடன் அடுத்த உலகத்திற்கு மனிதன் போவதில்லைஇறப்புக்கு பின் வாழ்க்கை யில்லைஅந்த நான்கு கூறுகளும் அவன் இறந்த பொழுது இந்த பூவெளியில் உள்ள நான்கு கூறுகளுடன் இணைந்து விடுகின்றனஉடலில் உள்ள நீர்மம்நீருடனும்வெப்பம் தீயுடனும்மூச்சு காற்றுடனும் மற்ற கூறுகள் மண்ணுடனும் இணைந்துவிடுகின்றனஇந்த இறந்த உடலை சுமக்கும் அந்த நான்கு கால்கள் என்பது ஐந்தாம் கூறு ஆகும்இறந்த உடல் எரிமேடை செல்லும் வரை மற்றவர்களால் புறங்கூறப்படும்புலன் உணர்வுகள் அண்ட வெளியுடன் இணைந்து விடுகின்றதுஎரியூட்டப்பட்ட உடலின் சாம்பலுக்கு பூசனைகள் செய்வது முட்டாள்களின் கோட்பாடு ஆகும்இறந்த உயிர் பிறப்பதில்லை என்பது இவர் கோட்பாடு ஆகும்.

கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்த போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிந்த்தகாயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை  இல்லை இல்லை இல்லையே! 
  

என்ற பாடல் இக்கொள்கையினை நினைவுபடுத்துகின்றது.

11.பகுத கச்சாயனர் (பக்குடுக்கை நன்கணியார்)
இவர் வானவியலிலும் சோதிடத்திலும் சிறந்துவிளங்கியவர் ஆவார்.  ஆசீவகம் வான் ஆராச்சியிலும்சோதிடத்திலும் சிறந்து விளங்க இவரும் ஒரு காரணம் ஆவார்இருப்பு கொள்கையை முதன் முதலில்  வெளியிட்டவர் ஆவார்இவர் கூற்றுப்படி இந்த உலகத்தில் ஏழு கூறுகள் அழிவில்லாதவை.

1.  நிலம், 2. நீர், 3.காற்று, 4.நெருப்பு 5.வளி, 6. இன்பம்துன்பம் 7.உயிர்

இக்கூறுகளை உருவாக்க முடியாதுகுறைக்கமுடியாதுஇவை இயற்கையாய் உருவானவைஇவை மாமுகட்டின் சிகரங்கள் போல் வீற்றிருப்பவைதூண் போல் உறுதியாய் நிற்பவைஇவைகளுக்கு பதிலீடுகள் கிடையாதுஇவற்றுடன் இடைவினை புரிதல் இயலாதுஇவைகள் ஒன்றுடன் ஒன்று இடைவினை புரியாதுஒருவரின் இன்பத்தையும் துன்பத்தையும் அவர்தான் அனுபவிக்க வேண்டும் பிறரால் ஏற்க இயலாதுஒன்று மற்றவைகளின் இடத்தை கொள்ளாதுஇவைகளை எவராலும் அழிக்க முடியாது.  
நிலம்நெருப்புநீர்காற்றுவெளி இவ்வைந்தும் நிலைத்தவை நிலைத்த தன்மை உடையனஇவை புணராதுஇந்த ஐந்து கூறுகளும் ஐம்பூத கோட்பாடு என தமிழகத்தில் அழைக்கப்படுகின்றனவட நாட்டில் ஜைன மதத்தில் காற்றுக்கும் ஆகாயத்திற்கும் வேறுபாடு அறியாததால் நான்கு கோட்பாடுகளாக வழங்கப்பட்டு வருகின்றனஇதில் உயிர்இன்பம்துன்பம் பின்னாளில் சேர்க்கப்பட்டவைஇவரால் உருவாக்கபட்ட அணுவியமே உலகின் முதல் அணுவிய கோட்பாடு ஆகும்சமண்ண பால சூத்திரமும் அதை உறுதி செய்கிறது.
நமது தென்னிந்திய ஆசீவகம்  ஐம்பூத கோட்பாடுகளைக் கொண்டதுஅவை அணு அல்லது பொருள் என்றே அழைக்கப்படுகின்றனஇங்கு உயிர் என அழைக்கப்படும் பொருளானது சிவம் எனவும் அழைக்கப்படும்மணிமேகலைசிவஞான சித்தியார் போன்ற நூல்கள்  பூதங்களினை ஏழாக குறித்தாலும் நீலகேசியில் ஆசீவகவாத சருக்கம் பூதங்களினை ஐந்து என்றே உறுதிகூறுகின்றது.
    தீதும் நன்றும்பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவைஇவ்விரண்டும் பாவம்புண்ணியம்சுகம்துக்கம் என்றும் வழங்கப்படும்பக்குடுக்கையாரை சமஸ்கிருத நூல்களும் பெளத்த நூல்களும்கக்குடர் என்றே அழைக்கின்றதுஇவர் புத்தருக்கு முன் வாழ்ந்தவர் ஆவார்பிரம்மஜால சூத்திரமானது கச்சாயனரால் உருவாக்கப்பட்ட அணுவாதம் எனப்படும் அணுக்கொள்கை பற்றி பேசுகின்றது.

11.நிகந்த நாத புத்திரன் (ஜைன மகாவீரர்)
ஜைன மதத்தை தோற்றுவித்தவர் மகாவீரர் எனப்பட்ட நிர்கந்த நாத புத்திரன் ஆவார்ஜைனத்தை பெருஞ்சமயமாக நிறுவியவர்இவரும் மற்கலி கோசாலரும் ஒன்றாக 6 ஆண்டுகள் துறவாற்றி பின் பிரிந்தவர்கள்பார்சுவநாதருக்கு பின் ஆசீவகத்திலிருந்து பல கோட்பாடுகளை எடுத்து ஜைனம் நிறுவனமயபடுத்தப்பட்டதுசமண்ணபால சூத்திரத்தின் பாளிதிபெத்திய வடிவங்களை அடிப்படையாக கொண்டு உற்று நோக்கினால் மகாவீரர் ஆசீவகத்திலிருந்தே பிரிந்தவர் என்பதை உறுதி செய்யலாம்ஆசீவக கோட்பாடை உருவாக்கியவரில் இவரும் ஒருவரேதீர்வு தந்தவர்களே தீர்த்த விடங்கர் ஆவார்இப்பெயர் ஜைனர்களுக்கு பொருந்தாது.  பாவங்கள் செய்வது தவிர்க்கப்படவேண்டும்நம்மை சுற்றியுள்ள தடைகளே நம்மை ஆளுகின்றனகொல்லாமைஅகிம்சை என்பதும் பகிர்ந்தளிப்பதும் இவர் கோட்பாடு ஆகும்இறுதியில் ஜைனத்தோடு ஐக்கியமானார்.          

12.சஞ்சய பேலட்ட புத்திரன்
இவரால் அஜாநன கோட்பாடு என்னும் உருவக்கப்பட்டதுரிக் வேதத்தில் யஜ்ன வல்கிய முனிவரால் இக்கோட்பாடு பற்றி பேசப்பட்டுள்ளதுசில உண்மைகள் தெரியாத போதும் அதை ஏற்க மறுக்கும் போதும் இல்லை என்ற சொல் பயன்படுத்தப்படும் அல்லது இறுதியான முடிவுக்கு வரமுடியாமல் இருக்கும் போது இது போன்ற கோட்பாடுகள் பயன்படுத்தப்படும்இதில் நான்கு வகையான பிரிவுகள் இருந்ததாக பிரம்மஜால சூத்திரம் கூறுகின்றதுஅவை கிரியாவாதம்அகிரியாவாதம்அஜ்நானிகவாதம்வைநாயிகவாதம் என்பனவாம்எடுத்துக்காட்டாக எது நன்மை எது தீமை என கேட்போர்க்கு எது நன்மை தீமை என புரியவில்லை என பதிலளிப்பதே அஜாநன வாதம் ஆகும்இப்பள்ளியை ஒரு உளவியல் பள்ளியாகவே கூறலாம் ஏனெனில் பல பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கிகொள்ள பயன்படுகின்றதுதற்காலிக நிம்மதியை தருகின்றதுஅறியாமையே சிறந்தது எனவும்அறியாமையே மன அமைதி தரும் என்று இக்கோட்பாடு வலியுறுத்துகின்றதுஇதனால் பல மனச்சுமைகளை சுமக்கவேண்டியிருக்காதுஇது மிக நீண்ட கோட்பாடு ஆகும்இவரும் இறுதியில் ஜைனத்தோடு இணைந்து விட்டதாகவே அறியமுடிகின்றது.
ஆசு போல் வினையால் ஏற்படும் துன்பத்தை நீக்கி அதற்கு ஈவையும்  அறிவார்ந்த கோட்பாடுகளை கூறிவிட்டு இது போன்ற நழுவுகின்ற  கோட்பாடை ஆசீவகம் தழுவி இருக்குமா என்பது ஐயமேஇது போன்ற கோட்பாடு ஆசீவகத்தின் ஒரு பிரிவாக இருக்காது என முனைவர்.பருவா கூறுகிறார்இதனை ஆசீவக கோட்பாடாக கொள்ளலாமா வேண்டாமா என்பது ஆய்வுக்குறியதே.

13.மகா போதி ஜாதகம்
மகா போதி ஜாதகம் என்ற நூலானது பின்வரும் குறிப்பினை ஆசீவகர்கள் பற்றி தருகின்றதுபனாரஸ் மன்னர் பிரம்மதத்தன் அரசவையில் ஐந்து அமைச்சர்கள் இருந்ததாகவும் அவர்கள் துறவியர்குழு எனவும் கூறப்படுகின்றதுஅந்த அமைச்சர்களால் பின்பற்றப்பட்ட கொள்கைகள் உத்தேச வாதம்பூத வாதம்சர்காரண வாதம்அகேதுக வாதம்கட்டிய வாதம். என ஐந்து வாதங்களாகும்அந்த ஐவர் கொள்கைகள் மற்கலிகச்சாயனர்பக்குடுக்கைநிகந்த நாதர்கேசாம்பளி கொள்கைகளுடன் அப்படியே ஒத்துப்போவதாகவும் உள்ளதுஇதை அஜாத சத்ரு கதையுடனும் ஒப்பிடலாம்இந்நூல் கதை வடிவில் உள்ளதுசமண்ண பால சூத்திரம் நூல் பிரம்மதத்தன் அமைச்சர்கள் அனைவரும் ஆசீவக ஐவரின் அவதாரங்களே என கூறுகின்றதுஇதன் அடிப்படையில் பார்த்தால் ஆசீவகம் என்பது ஐந்து கோட்பாடுகளையும் ஐவரையும் உள்ளடக்கியதே என்றும் கூறலாம்.  

13.ஆசீவகத்தின் புனித ஏடு
ஆசீவகத்தின் ஆன்ம ஏடு நவகதிர் அல்லது ஒன்பதுவாங்கதிர் ஆகும்ஆதித்யம் என்ற நூல் இவர்களால் படைக்கபெற்ற வானவியல் நூலாகும்இது இன்றைய சோதிட நூலை ஒத்ததுஇதனை பத்திரபாகு கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்இதில் நவகதிர் என்னும் நூல் கணாதரால் வைசேடிகம் என்ற பெயரில் சமக்கிருதத்தில் எழுதப்பட்ட நூலாய் ஆய்வாளர்கள் கூறுவர்ஆனால் சில ஆய்வாளர்கள் கணியாதன் என்பவரே கணாதன் என திரியும் என கூறுகிறார்மேலும் அஷ்ட மகாநிமித்தங்கள்பூர்வங்கள் என்ற நூலும் இருந்ததுஇந்நூல்கள் அனைத்தும் வழக்கில் இல்லை காலத்தில் கரைந்து போயின.

14.மொழி
இதில் முக்கியமான கூற்று என்னவெனில் ஆசீவகர்கள் தன் அறிவியல் பூர்வமான கருத்துக்களையும் அறிவு சார் கருத்துக்களையும் கூறுவதற்கான தனி மொழியினை கொண்டிருந்தனர் என்பதே அந்த மொழி சமஸ்கிருதத்திற்க்கும் பாளி மொழிக்கும் தொடர்பே இல்லாத ஒரு மொழியாக இருந்தது என்கிறார் முனைவர்.பரூவா.
மேலும் அந்த மொழி கி.முஆறாம் நூற்றாண்டில் இந்தியாவின் மத்திய பகுதியிலிருந்து கடைக்கோடி முழுமைக்கும் பேசபட்டிருக்க வேண்டும் அது அனைவராலும் புரிந்துகொள்ளப்பட்ட மொழியாக இருந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார்மேலும் சமூக தகுதி குறைந்தோர்களால் பேசப்பட்டிருக்க வேண்டும்மேலும் அது வணிக வைசியர்களால் பயன்படுத்தப்பட்ட மொழியாகவே இருக்க வேண்டும் என்கின்றார்ஆய்வாளர்கள் அர்த்த மகமதிபாளிசமஸ்கிருதம்போன்ற மொழிகளை ஆராய்ந்த அவர்கள் தமிழ் மொழியை ஆராயவில்லை.
 ஃப்ரான்க் கூற்றுப்படி ஆசீவக ஆசிரியர்களின் கூற்றுக்கள் அர்த மகதியில் மொழிபெயர்த்தே வெளியிடப்பட்டுள்ளன என கூறுகின்றார்.    அர்த்தமகதி என்னும் மொழி சமஸ்கிருத நாடகங்களில் கீழ் நிலை பாத்திர படைப்புகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தனஅர்த்த மகதியில் ஒரு சொல்லின் விகுதி இ அல்லது ஈ என்ற உச்சரிப்புடன் முடியும்எனவே ஆசீவக ஆசிரியர்கள் பயன்படுத்தியது அர்த்த மகதியாக கூட இருக்கலாம் என்று கூறுகின்றனர்      

15. யார் மூத்தவர்கோசாலராமகாவீரராபுத்தரா?
இம்மூவர்களில் மூத்தவர் மகாவீரரேஇவ்வருடங்கள் எல்லாம் தோராய வருடங்களே.  
    
    1.  மகாவீரர் பிறந்தது கி.மு 540. மறைந்தது கி.மு.468
     2.  கோசாலர் பிறந்தது கி.மு.523 மறைந்தது கி.மு.484
3.  புத்தர் பிறந்தது கி.மு. 483 மறைந்தது கி.மு.400.

இவ்வருடங்கள் தோராய வருடங்களாயினும் மகாவீரருக்கு முன் பார்சுவ நாதர் மட்டுமே உள்ளார்வரலாற்று ஆதாரங்கள் படி மற்ற தீர்த்தங்கர்களை கருத்தில் கொள்வது கடினமேமுனைவர் நெடுஞ்செழியன் கூற்றுப்படி மஹாவீரரை விட ஜைனத்துடன் அதிக நெருக்கத்தில் இருந்தவர் கோசாலர் மட்டுமேசில ஜைன நூல்கள் கோசாலரைப் பற்றியே அதிகம் பேசுகின்றன.   

16.வாகை மரமும் மாமரமும்
          ஆசீவகத்தில் முக்கிய குறியீடுகளானவை ஆசீவகர்களும் நிகந்தர்களும்யானைகுதிரைபசுநாய்காகம் போன்ற விலங்குகளை குறியீடுகளாகவும் பயன்படுத்தினர்அதில் முக்கிய குறியீடுகளானவை யானைஓன்புதாமரைஇருதலை முக்கோல்வாகை மரமும் மாமரமும் எனவாம்வாகையும் மாவும் முக்கிய இடம் பிடிக்கின்றனசேத்தி என்னும் பாளி நூலில் திசை போக்கர்கள் அறுவர் பங்கேற்ற கதைகள் அந்நூலில் காணப்படுகின்றனஒருநாள் ராஜகாகவில் அறுபது உயரத்தில் ஒரு திருவோடு பறந்துகொண்டிருந்ததுஇதை தன் தவ வலிமையால் கீழே கொண்டுவருபவர்களே சிறந்த துறவி என அறிவிக்கப்பட்டதுஆசீவக திசைபோகர்கள் அறுவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டதுஅறுவரும் ஆறு நாள் முயற்சி செய்தும் பலனில்லைஏழாம் நாளில் பிக்கு பிண்டோலா பரத்வாஜர் லெகிமம் சக்தியால் வானத்தில் பறந்து அந்த திருவோட்டை கீழே கொண்டுவந்தார்இந்நிகழ்வை கேட்டறிந்த புத்தர் மீண்டும் அந்த அற்புதத்தை மீண்டும் நிகழ்த்த வேண்டாம் என கூறிச்சென்றார்  என அந்நூல் கூறுகின்றதுஎனவே புத்தர் பிம்பிசார மன்னரிடம் கூறி இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் இந்நகரில் நடக்கக்கூடாது அதில் தனக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டி கூறிச்சென்றார்அதை உத்தரவாக மன்னர் பிறப்பித்தார்.
அடுத்த நான்கு மாதத்தில் ஒரு அற்புதத்தை நிகழ்த்த புத்தர் தயாரானார்இந்நிகழ்வை தடுக்க அறுவரும் விரும்பியதனால் சாவத்தி நகர் சென்றடைந்தனர்சாவத்தி மன்னன் புத்தருக்கு அங்கு ஒரு நந்தவனம் அமைக்க உத்தரவிட்டார்ஆனால் புத்தர் அதை மறுத்து அங்கு உள்ள ஒரு ஒற்றை மாமரத்தின் அடியில் அமர்ந்து தானே அந்த நந்தவனத்தை உருவாக்கிக்கொள்வதாக கூறினார்அந்த அரண்மனையை சுற்றியுள்ள அனைத்து மாமரங்களையும் புத்தர் தனது தவ வலிமையினால் வேருடன் பெயர்த்து எடுக்கப்போவதாக அறிந்து கொண்டனர் அந்த திசை போக்கர்கள்.
அந்த மாதத்தின் முழு நிலவு நாளில் புத்தர் ஒரு மாங்கனியை அந்த அரண்மனை தோட்டகாரருக்கு பரிசளித்தார்அப்பழத்தினை மண்ணை தோண்டி அதிலிட்டு மூடிவிடவும் என கூறினார்புத்தர் அப்பழத்தினை ஊன்றிய இடத்தில் நீரால் தன் கைகளைக்கழுவினார்உடனே அந்த பழம் துளிர் விட்டு ஐம்பது முழம் உள்ல மரமாக வளர்ந்து பூத்து குலுங்கியதாம்அம்மரத்தினை அந்த அறுவரும் தாக்கியதாகவும் அப்போது புத்தர் வளிக்கு கட்டளையிட்டு அம்மரத்தினை வேரோடு பெயர்த்து எடுக்க உத்தரவிட்டாராம்உடனே சுழன்று அடித்த காற்று அந்த அறுவரையும் மேலே தூக்கிச்சென்றதுகதிரவன் தன் கதிர்களால் அவ்வறுவரின் வெற்றுடம்பினை தீயாக சுட்டதாம்பின் பெரு மழையால் அவர்கள் அனைவரும் தூக்கி எறியப்பட்டனர்அதனைத் தொடர்ந்து அந்த ஊரில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
 இதனை அறிந்த பூரணரின் குடியான பக்தன் ஒருவன் அவ்வழியாக தன் காளையை கயிற்றில் கட்டி இழுத்துக்கொண்டுகஞ்சி கலையத்துடன்  சென்ற போதுஇச்செய்தியை பூரணரிடம் விவரித்தான்இதைக் கேட்ட பூரணர் கலையத்தை மாடு கட்டிய கயிற்றால் தன் கழுத்தில் கட்டிக்கொண்டு அங்குள்ள ஆற்றில் குதித்து உயிர்விட்டார் என அந்நூல் கூறுகின்றதுதிவ்யவதனா நூலில் இக்கதை வேறுவடிவத்தில் வழங்கப்படுகின்றதுபிம்பிசாரரின் உத்தரவின் பேரில் துறவிகளுக்கு இடையில் போட்டி அறிவிக்கப்படுகின்றதுஅதிலும் புத்தர் பங்கேற்கிறார்பின் பல அற்புதங்களை நிகழ்த்துகின்றார்அங்கும் புயல் மழை வர அந்த அறுவரும் சிதறி ஒடினர்ஆனால் அந்த மழை புத்தரை தீண்டவில்லைஇதைக்கண்ட பூரணர் தன் அருகில் உள்ள  தாமரை குளத்தில் மண் நிரப்பிய பானையை தன் கழுத்தில் கட்டிக்கொண்டு அக்குளத்தில் குதித்து நீரில் மூழ்கி உயிர்துறந்தார்பூரணரை தேடி வந்த நிர்கந்தர் ஒருவர் தாசி ஒருவரிடம் பூரணரை பற்றி விசாரிக்கின்றார்பின் அருகில் உள்ள ஒரு குளத்தின் அருகே அவரை பிணமாக கண்டறிகின்றார்.
இதே கதையை தான் திபெத்திய கதை வடிவமும் கூறுகின்றதுஇந்த கதைகள் பூரணரின் தனித்துவத்தை கொச்சைப்படுத்த பெளத்த பிக்குகளால் எழுதப்பட்டவையேஇக்கதைகள் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்தவைஇக்கதைகளின் உண்மைத் தன்மை என்னவெனில் குளத்தின் அருகில் பூரணர் வடக்கிருந்து உயிர்துறந்த போது அவர் மண் தாழியில் இட்டு புதைக்கப்பட்டுள்ளார் என்பதுவேஇது தமிழர்களின் பண்டைய புதைக்கும் வழக்கம் ஆகும்மேலும் தமிழக நூல்களின் செய்திகளுக்கு புறம்பாக மாமர நிகழ்வு உள்ளதுவாகை மரத்தில் மாம்பழத்தினை வரச்செய்தார் ஐயனார் என அடிமதிக்குடி ஐயனார் பிள்ளைத்தமிழில் உள்ளதாக முனைவர் நெடுந்செழியன் கூறியுள்ளார்.    
பகவதி சூத்திர குறிப்பின்படி மற்கலியும்பூரணரும் சாவத்தி நகரிலே உயிர்துறந்தனர்பூரணர்மற்கலி இவ்விருவரின் இறப்பில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன என அந்நூல் கூறுகின்றது.

17.ஆசீவகம் பெயர்காரணம்
          வட நாட்டில் ஆசீவகம் ஆஜீவிகா என்று அழைக்கப்படுகின்றதுஜீவன் என்பது உயிரைகுறிக்கும்ஜீவிதம் என்பது உலகினைக்குறிக்கும்இங்கு அ என்பது வட மொழிபதத்தில் இல்லை என்னும் எதிர்மறைப்பொருளோடு தொடங்கும்எடுத்துக்காட்டாக நியாயம் என்பதன் எதிர்ப்பதம் அநியாயம் என்பதுபோல் கொள்க.
கார்ன்லே கூற்றுப்படி கர்மா என்ற கூற்றை ஏற்காதவர்களே ஆசீவகர்கள்இவர்கள் கர்மா என்ற கூற்றோடு தன்னை பினைத்துக்கொள்ளாதவர்கள் என்று கூறுகின்றார்ஆடையை ஏற்க மறுப்போர்இதற்கான விளக்கத்தை வட நாட்டவர்களால் தர இயலவில்லை.
தமிழகத்தில் ஆசீவகம் ஆசு + ஈவு +அகம் கேட்போரின் ஐயம் தெளிவுற மடை திறந்த வெள்ளம் போல் அகத்தினுள் கொண்ட கருத்துக்களை விடையாய் அளிப்போரே ஆசீவகர்கள்ஆசு என்பது மேகத்தையும் குறிக்கும்.ஆசு என்பது நுட்பம்பற்றுஆதாரம் என்ற பொருளில் ஆளப்படும்ஆசி+அகம் அகத்திலிருந்து ஆசி வழங்குவோர் எனவும் கூறலாம்மக்களின் துன்பத்தினை போக்கி அவர்களுக்கு பற்றுக்கோடாக விளங்கியவர்களே ஆசீவகர்கள்.

18.ஆசீவகர்களின் வெளிதோற்றம்
ஆசீவகர்கள் தமிழ்நாட்டில் ஒருவித தோற்றத்துடனும்வ்டநாட்டில் ஒருவித தோற்றத்துடனும் காணப்படுகின்றனர்வடநாட்டில் ஆடைகள் ஏதுமின்றி வெற்றுடம்பாய் காணப்படுகின்றனர்வடநாட்டில் முற்காலத்தில் நீண்ட தலைமுடியுடனும்பிற்காலத்தில் தலை மயிரினை மழித்தும் காணப்படுகின்றனர்.
தமிழகத்தில் நீண்ட தலைமயிரை வாரி சீவி  இடுப்பில் கோவணம் மட்டும் கட்டி காணப்படுகின்றனர்இவர்கள் முழுவதுமாக ஆடைகளை புறக்கணிக்கவில்லைபோரபுத்தூர் இலக்கியங்களும்கானறீய இலக்கியங்களும் ஆசீவகர்களை உடை அணிந்தவர்களாகவே காட்டுகின்றது.
தம்மபத நூலில் ஆசீவகர்களுக்கும் ஆசீலகர்களுக்கும் உள்ள வேறுபாடு காட்டப்பட்டுள்ளதுபகவதி சூத்திரத்தில் மற்கலி ஆடை அணிந்தவர் என்றே கூறப்பட்டுள்ளதுஇதற்கு ஆதாரமாக விளங்குவது உபகன் புத்தரை சந்திக்கும் நிகழ்வு ஆகும்உபகன் புத்தரை சந்திக்கும் சிற்பத்தில் கவனமாக வாரி சீவி கொண்டையிட்ட முடியுடன்உடை அணிந்தவராக உபகன் காட்டப்பட்டுள்ளார்.
ஜாவா நாடு சோழமண்டலத்துடன் தொடர்புடையது.ஜாவா நாட்டில் காணப்படும் ஆசீவக சிற்பமானது தமிழ்நாட்டு ஆசீவக வடிவத்தில் காணப்படுகின்றது.
கிரன் வெடெல் கூற்றுப்படி புத்தர் சில ஆசீவக துறவிகளுடன் வாதிடுகின்றார்அவ்வாறு வாதிடும் துறவிகள் அரையாடை அணிந்திருந்ததாகவும்கொண்டைமுடி அணிந்திருந்த்தாகவும் கூறுகின்றார்கோசாலர் ஆடை அணிந்திருந்ததாக பகவதி சூத்திரம் கூறுகின்றது.    
கார்னாலே கூற்றுப்படி ஆசீவகம் பயில்வோரை ஆறுவிதமாக பிரித்து அதில் இறுதி நிலைக்கு முன்னிலை பரம சுக்க நிலை ஆகும்பரம சுக்க நிலை அடைந்தோர் வெள்ளை ஆடை அணிவர்பரம சுக்க நிலைக்கு இரண்டு படிகள் கீழே உள்ளோர் சிவப்பு ஆடையை அணிவர்.
நிர்கந்தர்கள் ஒரே ஒரு ஆடையை மட்டும் அணியக்கூடியவர்கள்திவ்யவதனா நூல் மூலம் நாம் அறிய வருவது ஆசீவக ஆசிரியர்கள் கோவணம்  அணிந்திருந்தனர் என்பதாகும்எனவே தமிழகத்தில் ஆசீவகர்கள் ஆடையை பயன்படுத்தியுள்ளனர்அதே போல் மகாவீரருக்கு பின்பே ஆடை ஜைனத்தில் ஏற்கப்பட்டதுஎனவே ஆசீவகர்கள் இடையாடை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

19. ஆசீவக துறவு வாழ்க்கை
    ஆசீவக துறவு வாழ்க்கை கடினமான பயிற்சிகளைக்கொண்டதுஇந்த வகை பயிற்சிகள் பற்றி பாளி இலக்கியஙகளில் காணலாம்லோகாம்ச ஜாதக நூலில் போதிசத்துவர் ஒருவர் தன் ஆசீவகராக இருந்த போது நடந்தவற்றினை இந்நூல் வாயிலாக கூரியுள்ளார்.
ஆடையின்றி இருக்க வேண்டும்அச்சமயம் துறவிகள் அல்லாத மனிதர்கள் கண்ணில் பட நேர்ந்தால் மான் போல் ஓடி மறைய வேண்டும்காடுகளின் நடுவில் தங்கவேண்டும்பருவகாலங்களில் குளிரினையும்வெப்பத்தினையும் அனுபவிக்க வேண்டும்குளிர்காலத்தில் குளிரால் உரைய நேரிடும்இந்த துறவு வாழ்க்கை  அனைத்து துறவு மதங்களின் துறவு வாழ்க்கையைவிட சற்றே கடினமானது.
மேலும் நங்குத்த ஜாதக நூல் மேலும் அசீவகத்தின் பயிற்சிகளை விவரிக்கின்றதுஅதில் செய்த தவறுக்காக் வருந்துவதற்க்கு அல்லது தவ பயிற்சிக்காக வஜ்ராசனத்தில் அமர்தல் அல்லது உக்குத பாதனாவில் அமர்தல்  வெளவ்வால் போல் மரத்தில் தொங்கி பயிற்சி செய்தல்முற்படுக்கையில் படுத்தல்ஐந்து வகை தீயின் நடுவில் தவம் இயற்றுதல்தாழியில் அமர்ந்து தவம் இயற்றுதல் போன்றவையாகும்.  உயர்ந்த நிலையில் இருக்கும் ஆசீவகர் பேசாதிருத்தலையும்நகராதிருத்தலையும் கடைபிடிப்பார்.      
கோசாலரின் சீடர்கள் தங்கள் உறவுக்காற பெண்களின் வீடுகளில் இரந்துண்ணுவதில்லை என கவலை கொண்டதாக ஜைனபாக சூரி கூறுகிறதுஇரந்துண்ணுவதிலும் ஒரு நேர்மையை கடைபிடித்தனர் ஆசீவகர்கள்முதலாமவர் ஒரு தெருவில் உள்ள மூன்றாவது வீட்டில் தான் இரந்துண்ண வேண்டும்இரண்டாமவர் நான்காவது வீட்டிலும்மூன்றாமவரெட்டாவது வீட்டிலும் இரந்துண்ண வேண்டும்தாமரை இலையில் மட்டுமே பிச்சை ஏற்கவேண்டும்மின்னல் தென்பட்டால் பிச்சை ஏற்க செல்லமாட்டார்கள்ஆசீவக துறவிகள் உயிர் துறந்த பின் தாழியிலிட்டு புதைப்பர்தாழியில் இட்டு புதைக்கும் வழக்கம் வடநாட்டில் இல்லை ஆயினும் அது  தமிழ்நாடு மரபு ஆகும்இன்று தமிழ் நாட்டில் பல மண்தாழிகள் அகழாய்வின் போது கிடைப்பது இப்பழக்கத்தினை அடிப்படையாய் கொண்டதே.எனவே ஆசீவகம் தமிழகத்தில் தழைத்தோங்கியிருந்ததால் தான் இன்றுவரை தமிழர்களால் அந்த பழக்கம் கடைபிடிக்கப்படுகின்றது.இதை நச்சினார்க்கினியர் பாடல் உறுதிசெய்கின்றது.
இவர்களின் கடுந்தவமும் பயிற்சியும் உலகத்தின் கிழக்கு நாடுகளைச் சென்றடைந்ததுசீனாஜப்பான் நாடுகளில் ஆசீவகம்ஆஷீபிகாஸ் என்று அழைக்கப்படுகின்றதுசெய்த பாவத்திலிருந்து தப்பிப்பது கடினம்அதற்கான ஒறுப்பு அப்பொழுதோ அன்றோ அதன் பிறகோ வழங்கப்பெறும்செய்த பாவத்திற்கான தண்டனையிலிருந்து தப்புவது கடினம் என்பதை எண்ணி துறவிகள் இதுபோன்ற கடின வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்பிறர்கின்னா முற்பகல் செய்யின் என்னும் திருக்குறள் இந்த கோட்பாடை நினைவுபடுத்துகின்றதுதித்திர ஜாதகம் என்ற நூலில் ஆசீவகர்கள் ஆரம்ப காலத்தில் தாந்திரிக தவ பயிற்சியினை மேற்கொண்டதாக கூறுகின்றது.
ஆசீவகர்கள் தங்கள் தவ வலிமையினால் பல அற்புதங்களையும் பல ரகசிய வித்தைகளையும் நிகழ்த்திக்காட்டியதாக வாயு புராண நூல் கூறுகின்றதுஇதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது சம்புகனின் வாழ்க்கையே.

20.ஆசீவக உபகன்
பாளி இலக்கியங்களில் வரும் நிகழ்வுகளில் இடம் பெறும் ஒரு முக்கிய ஆசீவகர் உபகன் ஆவர்புத்தர் ஞானமடைந்த பிறகு கயா நகரத்திற்க்குச் செல்லும் வழியில் உபகனை சந்திக்கின்றார்உபகன் மகத நாட்டவர்உபகனைப்பற்றி நம்பிக்கையற்ற உண்மைக்கு புறம்பான பல விடயங்கள் சில நூல்களில் கூறப்பட்டுள்ளனதேரிகாதம் என்ற நூலில் உபகன் என்பவர் காலா (கருப்புஎன்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளார்அவர் காபா என்ற வேடர் இனப்பெண்ணை விரும்பி மணந்து சுபதா என்ற ஆண் குழந்தையையும் பெற்றனர்உபகன் தன் தொடக்க காலத்தில் ஆசீவக கொள்கையினைப் பின்பற்றியதால் தன் மனைவியுடனான உறவில் சிறிது பிணக்கு ஏற்பட்டதுஇதனால் பல பழிச்சொல்லுக்கு ஆளானார்தக்க தருணத்தில் தன் மனைவியை பிரிந்து புத்தரை சந்தித்து பெளத்த மதத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.              

21. நீரு ஜாதகம்
நீரு ஜாதகம் என்ற நூல் புத்த பிக்கு ஒருவர் ஆசீவக கொள்கைகளை கற்பித்தது பற்றி கூறுகின்றதுமக்களின் அன்பை பெருவதற்காக உத்தேச கொள்கையினையும்சில ஆசீவக கொள்கையினையும் கற்பித்துள்ளார்சந்தக சூத்திரம் ஆசீவகர்களை நிர்கந்தர்களிடமிருந்து வேறுபடுத்தி கூறிகின்றது ஆயினும்மகாவீரரை ஆசீவகராகவே குறிக்கின்றது இந்நூல்தம்மபத நூலில் புத்த கோசர் தன் உரையில் கூறியதாவது, ”மனதை ஒருநிலையில் அடக்காத துறவிகளாலேயே ஆசீலகம் தொடங்கப்பெற்றதுஆசீலகம் ஆசீவகம் என்றானதுபின் நிகந்தர் என மாறியது இறுதியில் அவர்கள் தபசிகள் என அழைக்கப்பட்டனர் என்று கூறுகின்றார்”. ஆனால் இவ்வடிவம் தவறான ஒன்று ஆசீலகம் என்பது ஜைனத்தின் ஒரு பிரிவேதிவ்யவதனா நூலில் நிர்கந்தர் என்ற பெயரும் ஆசிவகர் என்ற பெயரும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

22.காற்றே உணவு
தம்மபதத்தில் காணப்படும் கதையானது கோசாலருக்கு 55 வருடங்களுக்கு பின்பும் வாடைக்காற்றை உண்டு (இங்கு வாடை என்பது வட திசையையும் குறிக்கும்உயிர் வாழ்ந்த சம்புகன் என்பரைப்பற்றி பேசுகிறதுஆசீவகத்தை கடைபிடித்த பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட சம்புகன் ஆசீவகத்தையே பின்பற்றினான் ஏதோ ஒரு காரணத்திற்காக அவன் அச்சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டான்அவன் காற்றைக்குடித்து உயிர்வாழ்ந்ததாகவும் பின் சில வருடங்கள் கழித்து புத்தரால் தன் மதத்திற்கு மாற்றப்பட்டார் என்றும் புத்தகோசர் கூறுகின்றார்அவர் புத்தரால் ஆசீவக சம்புகன் என்றே அழைக்கப்பட்டார்எனவே கோசாலருக்கு பின்பும் ஆசீவகம் உயிர்போடுஇருந்தது.    

23. பாட்டும்நடனமும்
          ஆசீவகத்தில் பாட்டும்நடனமும் இருந்தற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றனஉலகின் முதன் முதலில் ஒரு துறவு மதத்தில் பாடல்களும் நடனமும் இருந்ததற்கான ஆதாரம் பகவதி சூத்திர நூல் மூலமாக நமக்கு கிடைக்கின்றதுஇவை முக்கிய நிகழ்வுகளின் போதோ அல்லது ஆசீவக சபைகள் கூடும்போதோ மட்டும் நிகழ்த்தப்பெறும்இதற்கு எடுத்துக்காட்டாக ஐயம்புலா கோசாலரை நோக்கி ஹல்லாவின்(Halla) அளவு யாது என வினவும் போது நீ வீணையை மீட்டுவாயாக என பதிலுரைகின்றார் கோசாலார்கி.முஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் வீணையை இருந்ததற்கும் பயன்படுத்தியதற்குமான சான்று இதுவேயாகும்இதிலிருந்து புலப்படுவது யாதெனில் ஆசீவகர்கள் தங்கள் சமய பாடல்களை பாடுவதற்கு வீணையை பயன்படுத்தியுள்ளனர் அதுமட்டுமில்லாது இன்றைய மதங்கள் நடனங்களையும்பாடல்களையும் தங்கள் மதத்திற்காக பாடுகின்றனசமய நடனங்கள்சமய பாடல்களுக்கு முன்னோடிகளாக திகழ்ந்தவர்கள் ஆசீவகர்களே. கோசாலார் தன்னுடைய இறுதி நிகழ்வின் போது தனக்காக பாடல் பாடக்கூறியதும்நடனமாடக்கூறியதையும் நாம் ஏற்கனவே அறிந்த்துவே.

24.ஆசீவகர்களின் உணவுமுறை
        ஆசீவகர்கள் பின்பற்றிய உணவுமுறை பற்றி மஜ்ஜிமா நிகாயத்தில் குறிப்பிடப்படுள்ளனஒருமுறை புத்தர் அக்கிவேசாயனரை பார்த்து ஆசீவகர்கள் எவ்வாறு தங்களை பராமரித்துக்கொள்கின்றனர் என்று கேட்டதற்கு அக்கிவேசாயனர் அவர்கள் சாப்பிட்ட உடன் தங்கள் விரல்களை சூப்பிக்கொள்வர் அல்லது நக்கி சுத்தம் செய்துகொள்வர் என்று பதில் கூறினாராம்மேலும் அவர்களுக்காகவே உணவு சமைத்து கொண்டுவந்தால் அதனை ஏற்க மறுப்பர்அதே போல் எவர் விருந்திலும்எவர் விருந்துக்கு அழைத்தாலும் பங்கேற்க மாட்டர்கள் மறுத்துவிடுவர்.
அதே போல் இருவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதும்ஒரு கர்பிணிப் பெண்ணிடமிருந்தும்பாலூட்டும் தாயிடமிருந்தும்தாய் குழந்தைக்கு உணவளிக்கும் போதும்ஒரு நாய்குட்டி தன் அருகில் நிற்கும் போதும்ஈக்கள் சூழ்ந்த உணவுகளையும்மீன்மாமிசம்கறிமது வகைகளையும் உணவாக உட்கொள்ள மாட்டார்கள்அவர்கள் உணவை தினமும் ஒருவேளையோஅல்லது இரண்டு நாட்களுக்கு ஒருவேளையோ அல்லது ஏழுநாட்களுக்கு ஒருவேளையோ எடுத்துக்கொள்வர்சில நேரங்களில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உணவினை உண்பர் என பதிலளித்தார்.
ஒருமுறை பிம்பிசாரர் அனைத்து துறவிகளுக்கும் உணவளிக்க அழைத்தபோது அந்த அழைப்பை ஏற்க ஆசீவகர்கள் மறுத்ததாக மஜ்ஜிமா நிகாயம் கூறுகின்றது.ஏற்கனவே ஜீனபாக சூரி நூலில் கோசாலர் தன் உறவுக்காற பெண்களிடமிருந்தும்தன் சொந்த பந்தங்களிடமிருந்தும் உணவை ஏற்க மாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 பெளத்தர்களும் ஜைனர்களும் தங்கள் உணவு கட்டுப்பாட்டை தளர்த்திக்கொண்டவர்களேகொல்லாமையை வலியுறுத்திய 12 ஆசீவகர்களைப்பற்றி ஜைனமதம் கூறுகின்றது அவர்கள் கொல்லாமையை வலிந்து விடாது கொண்டகொள்கையில் உறுதியாக கடைபிடித்து வந்தனர் என கூறுகின்றதுஆசீவகர்கள் தவிர்த்து புத்தரும்மகாவீரரும் இறைச்சியை உண்டனர் அதனால் அக்காலத்தில் கடுமையான கொல்லாமையை அவர்கள் கடைபிடிக்கவில்லைபிற்காலத்தில் தான் கடுமையான கொல்லாமையை அவர்கள் கடைபிடித்தனர்ஆனால் தொடக்கத்திலிருந்து கொல்லாமையை வலியுறுத்தியது ஆசீவகம் மட்டுமே.      
நீலகேசி நூலில் நீலகேசியின் கேள்விக்கு பூரணர் பதில் அளிக்கும் போது தங்கள் இறையானவர் பேசினால் உயிர்களுக்கு தீங்கு நேரும் என்றெண்ணி பேசுவதில்லை என்று கூறுவதிலிருந்து ஆசீவகம் கொல்லாமையை வலியுறுத்தியது என்பது புலனாகின்றது.
         ஆசீவகர்கள் பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல் பல நூல்களில் அவர்கள் சுவையான உணவினை உண்டதாகவே மஹாசாக்க சூத்திரம் கூறுகின்றதுசுவையான உணவுகளை உண்டு உடம்பில் கொழுப்பினை கூட்டிகொண்டதாக அந்நூல் கூறுகின்றதுசூத்திர கிருதங்க நூல்  அந்த துறவிகள் கற்புடன் வாழவில்லை என்றும் பழிபோடுகின்றதுராஜ தரங்கினி நூல் ஆசீவகர்கள் சிலர்  தாசியின் வீட்டில் வாழ்ந்ததாக கூறுகின்றது.
ஆனால் எந்த தமிழ்நூல்களும் ஆசீவகரின் கற்பு நெறிகளை குற்றம் கூறவில்லைஅனைத்து நூல்களும் இக்கருத்தினைக்கூறினால் மட்டுமே இக்கருத்தினை ஆராய இயலும்ஆனால் வேறு எந்த நூல்களிலும் இது பற்றிய தகவல் இல்லைஜைன நூல்களில் ஜைனர்களே கற்பு நெறியை பின்பற்றியதில்லை என்ற ஒரு கருத்து காணப்படுகின்றதுநிர்கந்தர்கள்(நிர்கிரந்தர்கிரந்தம் பயிலாதோர் வாய்மொழியில் கருத்தினை கடத்துபவர்கள்ஆனால் ஆசீவகர்கள் கற்றரிந்தோர் தமிழியை முறையாக பின்பற்றியோர் அதில் பல ஆசீவகர்கள் நன்கு படிக்கவும் எழுதவும் தெரிந்தவர்களாய் இருந்தனர்தனக்கென மெய்யியலையும்தருக்கவியலையும் உருவாக்கிக்கொண்டவர்கள்கொல்லாமையை பல இடங்களில் ஜைனத்திற்கு முன்பே வலியுறுத்தியுள்ளனர்தனக்கென சரியான கட்டமைப்புடன் விளங்கிய இயங்கிய மதத்தை குற்றம் கூறுவது இயல்பேஆசீவகர்களில் பலர் சோதிட கணியாசானாக இருந்துள்ளனர்.

25.வடக்கிருத்தல்
ஆசீவகர்கள் பலர் தன்னுடைய வாழ்க்கையை பல அதிகபட்ச தவமுறைகளில் சென்று முடித்துக்கொள்வர்அவ்வாறு இறப்பதற்கு முன் நான்கு இறுதி பானகங்களையும்நான்கு உப பானகங்களையும் உட்கொள்வர் பின் எட்டு இறுதி நிகழ்வுகளையும் நிகழ்த்திடுவர்அபயதேவன் தன்னுடைய நூலில் இந்த இறுதி பானகங்களை பட்டியலிடுகின்றார்.
ஆசீவகர்கள் வடக்கிருந்து தருப்பைபுல் பரப்பி அதன் மீதமர்ந்து தம் உயிரை போக்கிக்கொள்வர் இது வடக்கிருத்தல் எனப்பட்டது.  ஜைனர்களாலும்புத்தர்களாலும் புரிந்துகொள்ள இயலாத இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றனமுதல் எட்டு இறுதி நிகழ்வுகள் உயிர் துறந்த பின்னும்நான்கு இறுதி பானங்கள் வடக்கிருந்து உயிர் துறத்தலுக்கும் உரியவை

1.எட்டு இறுதி நிகழ்வுகள்அல்லது அஷ்ட கர்மையம்
2.நான்கு இறுதி பானங்கள்.  

1.எட்டு இறுதி நிகழ்வுகள்
          1. இறுதி பானம் 2.இறுதிபாடல் 3.இறுதி ஆட்டம் 4.இறுதி இரங்கல்   5.இறுதி நெடிப்புகை 6. இறுதி தெளிப்பு 7. இறுதி கல் 8.தாழியிடல்
இந்நிலைகளைத் தமிழர்களால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் இவை அனைத்தும் இன்று வரை தமிழர்தம் இறுதிச் சடங்கில் செய்யக்கூடியவை.

2. நான்கு இறுதி பானகங்கள்
          இந்த நன்கு இறுதி பானங்கள் தருப்பை புல்பரப்பி வடக்கிருந்து உயிர் துறக்கும் போது தர வேண்டியனவாக சொல்லப்பட்டுள்ளதுஇதில் மூன்று நிலைகள் காணப்படுகின்றனஒவ்வொரு நிலையையும் இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்மூன்றாம் நிலை மட்டும் ஆறு மாதம் தொடரும்.
துறவிகளுக்கு ஏற்ற பானகமாக அபயதேவன் பட்டியலிடுவது

முதல் நிலை-முதன்மை பானகங்கள்: பால்பானை வனையும் போது மண் பட்டு கைகழுவிய நீர்(ஏற்புடையதாக இல்லை), சூரியனால் வெப்பப்படுத்தப்பட்ட நீர்சுனை நீர்முதல் இரண்டு மாதங்கள் இவற்றை மட்டுமே பருக வேண்டும்.

இரண்டாம் நிலை-உப பானகங்கள்: உலோக பானை அல்லது மண்பானையில் வைக்கப்பட்ட நீர்முழுவதும் பழுக்காத மாம்பழத்தினை வாயில் கவ்வி அதன் சாற்றினை துளிகூட விழுங்காமல் வாயில் வைத்திருத்தல்முழுவதும் பழுக்காத சிம்பாளி அவரை விதையை வாயில் வைத்திருத்தல்மற்றும் தெளிந்த நன்னீரை விழுங்குதல்.   அடுத்த இரண்டு மாதம் இதை மட்டும் பயிற்சி செய்யவேண்டும்.

மூன்றாம் நிலை-வடக்கிருத்தல்
இரண்டு நிலைகளிலும் தேர்ச்சி அடைந்துவிட்டால் வடக்கிருத்தலை தொடரலாம்வடக்கிருத்தலின் போது உண்ணா நோன்பு நோற்றல் வேண்டும்பலகை மேல் தருப்பை புல் மட்டுமே பரப்பி அமர வேண்டும்உடலில் சுரக்கும் தூய அமிர்தத்தை மட்டுமே பருக வேண்டும்ஆறு மாதம் தொடர்ந்து கடுந்தவத்தில் இருக்க வேண்டும்.   
வடக்கிருத்தலை தொடங்கிய உடன் முதல் ஆறு மாதங்கள் தூய உணவைத்தான் உட்கொள்ள வேண்டும்முதலிரண்டு மாதங்கள் தரையிலும்அடுத்த இரண்டு மாதங்கள் மரக்கட்டைகளின் மேலும்கடைசி இரண்டு மாதங்கள் தருப்பை புல்பரப்பி அதன்மீது இருக்க வேண்டும்உலோக பானை அல்லது மண்பானையில் உள்ல நீரை அதிகமாக பருகி இருந்தால் மட்டுமே அளவுக்கு அதிகமாக காய்ச்சல் வந்து உடல் கொதிக்கும்இல்லையெனில் ஆசீவகர் தன் தவ வலிமையால் உடல் வெப்பத்தை ஏற்றவேண்டும் (மூச்சு பயிற்சியால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்). வெப்பம் உயர உடல் அமிர்தம் எனப்படும் தூய நீரை உமிழும்இவ்வமிர்தமே சாவா மூவா கற்ப மருந்து ஆகும்அதையே தொடர்ந்து உண்டுவர முக்தி நிகழும்ஆனால் ஜைனர்கள் வடக்கிருத்தலின் போது நீரும் அருந்தக்கூடாது உணவும் உண்ணக்கூடாது..
இந்த முறையை தான் மகாவீர்ர் மேம்படுத்தி மும்மடிப்பு வழி என ஜைனத்தில் அறிமுகம் செய்தார்பின்னர் அது ஆறு படிநிலைகளாக மாற்றப்பட்டனஆசீவக மதம் வாழ்வினை விட உயர்ந்த நான்கு நிலைகளைக் கொண்டிருந்தனஅது சதுரங்க பிரம்மசரியம் என அழைக்கப்பட்டது.
1.தவமிருத்தல் 2. எளிமையாயிருத்தல் 3. விருப்பு வெறுப்பின்றி இருத்தல். 4. தனித்திருத்தல். என்பன அதன் பண்புகளாம் கோசாலரின் மரணத்திற்க்கு பின்னரும் ஆசீவகர்கள் வடக்கிருதலை தொடர்ந்து மேற்கொண்டனர்.

26. பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்
சாதியபாகுபாடுகளை ஜைனம் ,பெளத்தம் போலவே ஆசீவகமும் அறவே வெறுத்ததுரிக் வேத காலத்தில் சக்கரம் செய்யும் தொழில் உயர்ந்த தொழிலாக போற்றப்பட்டாலும்கி.முஐந்தாம் நூற்றாண்டுவாக்கில் அத்தொழில்சமூக தகுதியில் தாழ்ந்த தொழிலாகவே கருதப்பட்டது.  மகாபாரத கதைகளிலும் ஆசீவகர்கள் பற்றிய குறிப்புகள் உண்டு மன்கா என்ற பாத்திரம் கோசாலரின் வாழ்க்கையை கூறுவதுபோல் உள்ளதுஆசீவகத்தை பின்பற்றும் சிலர் அரசர் பிம்பிசாரர் போர்ப்படையில் பங்கேற்றதாக குறிப்புகள் உண்டுஆசீவகர்களுக்கு வணிகர்களே தொடர்ந்து பேராதரவு அளித்து வந்தனர்.
    தமிழகத்திலும் வணிக சமூகங்களே ஆசீவகத்திற்கு பேராதரவு அளித்து வந்தனஇதனை அழகர்மலையில் உள்ள 13 கல்வெட்டுக்கள் மூலம் நிறுவலாம்மேலும் சிலப்பதிகாரத்தில் கண்ணகி விண்ணுலகம் சென்றதை அறிந்து கண்ணகியின் தந்தை மாநாய்கன் தன் சொத்துக்களையெல்லாம் தானம் அளித்துவிட்டு தான் ஆசீவகத்தில் சேர்ந்த குறிப்பானது இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
 ஆசீவகம் இந்தியா முழுதும் பரவி இருந்ததை உறுதி செய்யமுடியும்பத்திரபாகு காலத்தில் தான் ஜைனர்கள் தமிழகம் வந்து ஆசீவகர்களின் கற்படுகைகளை ஆக்கிரமித்துக்கொண்டனர்அவ்வாறு ஆக்கிரமித்தோர் போதி சத்துவர் என அழைக்கப்பட்டனர்எனவே தமிழக குகைப்பகுதிகளில் முதன் முதலில் தங்கி இருந்து மக்களுக்கு மருத்துவம்சோதிடம்என மக்களுக்கு அறிவுரையும் பேருதவியும் புரிந்தவர்கள் ஆசீவகர்களேஅதன் தொடர்ச்சியாகத்தான் சித்தர்கள் தோன்றி வானாராய்ச்சியிலும்சித்த மருத்துவத்திலும் சிறந்து விளங்கினர்.  
ஆசீவகர்கள்சபை அல்லது சங்கம் வைத்து ஆசீவகத்தை வளர்த்துள்ளனர்ஆசீவக சபை போலாசபுரத்தில் இருந்ததற்கான அடையாளம் பல நூல்களில் காணப்படுகின்றனவாயு புராண குறிப்பின் படி குப்தர்காலத்தில் ஆசீவகம் சூத்திரர்களின் பேராதரவைப்பெற்றதுஇதன் மூலம் அனைத்து மனிதர்களையும் சாதிபாகுபாடு இன்றி அனைவரையும் ஆசீவகர்கள் அரவனைத்துச்சென்றனர் என்பது புலனாகின்றதுஜைனமும் பெளத்தமும் இவர்களின் நன் மதிப்பை குலைப்பதிலேயே ஆர்வம் காட்டினஆயினும் சில முக்கிய தருணங்களில் ஆசீவகர்கள் பெளத்தர்களுக்கும்பெளத்தர்கள் ஆசீவகர்களுக்கும் உணவளித்துள்ளனர்ஆசீவகர்கள் மித மிஞ்சிய உணவுகளை பெளத்தர்களுக்கு பகிர்ந்தளித்தும் உள்ளனர்இது தான் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்பதுஆனால் இதை அறிந்த புத்தர் பகிர்ந்துண்ண தடை விதித்தாராம்அதன் பின் பல முறை பெளத்த பிக்குகளால் ஆசீவகர்கள் அவமானப்படுத்தப்பட்டனர்.
ஜைனர்கள் ஆசீவகர்களுடன் நல்லுறவையே பேணினர்காரணம் என்னவெனில் மகாவீரரும் கோசாலரும் ஆறுவருடங்கள் ஒன்றாக துறவாற்றினர் என்பதால் தான்மேலும் ஆசீவக ஜைனகளின் கோட்பாடுகளில் பல சிறிய வேறுபாடுகள் மட்டுமே காணப்பட்டனஅதனால் தான் நிர்கந்தர்கள் புத்தர் படத்தை அவமதித்தாக கூறி அசோக மன்னன் நிர்கந்தர்களுடன் ஆசீவகர்களையும் விரட்டியடித்தான்.
 துறவு நிலைகளை கடுமையாக கடைபிடிப்பவர்களின் அளவீடுகளில் ஆசீவகர்கள் முதலிலும்தனக்கு அடுத்தபடியில் நிர்கந்தர்களையும்மூன்றாம் படியில் புத்த பிக்குகளையும் வைத்திருந்தனர்மகாவீரரின் சீடர்களை கோசாலரும் கோசாலரின் சீடர்களை மகாவீரரும் தக்க மரியாதையுடன் நடத்துவர்எடுத்துக்காட்டாக பகவதி சூத்திரத்தில் 12 ஆசீவகர்கள் கொல்லாமையை கடுமையாக பின்பற்றினர் என்பதிலிருந்து அவர்களின் உறவுகளைப் புரிந்துகொள்ளலாம்ஆயினும் பல குறைகளும் கூறப்பட்டதுண்டு.
அசோகர் நாகர்ஜுனி குகையையும்பராபர் குகையையும் ஆசீவகர்களுக்காக அற்பணித்தார்அச்செய்தி ஏழாம் தூண் கல்வெட்டுகளில் காணப்படுகின்றது.
அதே ஏழாம் தூண் கல்வெட்டுகளில் ஒரு செய்தி காணப்படுகின்றது அதில் பொது ஒழுக்கத்தை பேணும் துறவிகளை நான்கு வகைகளாக அசோகர் பிரித்து வைத்துள்ளார்
1.புத்தசங்கா 2.பிராமணர் மற்றும் ஆசீவகர்கள் 3.நிர்கந்தர்கள் அல்லது ஜைனர்கள் 4.பிறதுறவிகள்இங்கு கூர் நோக்க வேண்டியது பிராமணர் மற்றும் ஆசீவகர்களையேபிராமணர்கள் ஆசீவகர்களிடம் ஒரு நல்லுறவைப் பேணியிருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறதுபிராமணர்களும் ஆசீவகத்தை பின்பற்றினர் என்பதை ஜராசனா கதையின் மூலம் உறுதி செய்யலாம்.

27.வண்ணக்கோட்பாடு
பூரணரின் வண்ணக் கோட்பாடு தெளிவாக கூறப்பட்டிருப்பது மணிமேகலையில் மட்டுமே
கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்…(மணி 27:150-153)

இக்கோட்பாட்டிற்கு அபிசாதி கோட்பாடு என்ற பெயரும் உண்டு. உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப நிறத்தின் அடிப்படையில் அவற்றின் பிறப்பை வகைப்படுத்தும் கொள்கைக்கு அபிசாதிக் கோட்பாடு என்று பெயர். ஆசீவக நிலைகள் ஆறு வண்ணங்களால் குறிக்கப்பெறும்.

1.  கழிவெண்நிலை,
2.  வெள்ளைநிலை 
3.  பொன் நிலை
4.  சிவப்பு நிலை
5.  பச்சைநிலை,
6.  கரு நீல நிலை
7.  கருப்பு நிலை

ஆசீவகத்தின் உயர்ந்த நிலை கழி வெண்பிறப்பு அல்லது கழி வெண்நிலை ஏழாவது படியான வெண்ணிலையை அல்லது வெள்ளைநிற நிலையை கடந்தவர்களே அல்லது கழிந்தவர்களே பரிநிர்வாண நிலையை அடைவர் அவ்வாறு அடைந்தவர்களில்  முக்கிய மூவர் .கோசாலர்பூரணர்நந்தாசிரியன் ஆவார்.
இந்நிலைக்கு கீழ் தான் வெள்ளை நிலை வரும் அதில் ஆசீவகர்களும்,  ஆசீவகனிகளும் வருவர்,  பெண் துறவிகளான ஆசீவகனிகளுக்கு மாதங்கி என்றொறு பெயருமுண்டு. இதற்கு கீழ் பொன் நிலை வரும். இதற்கு கீழ் நிலை சிவப்பு வண்ண நிலை ஆகும் சிவப்பு வண்ண நிலையில் நிர்கந்தர்கள் அடங்குவர்நிர்கந்தர்கள் ஒற்றை வண்ண ஆடையை மட்டுமே அணிவர் அந்த ஒற்றை வண்ணம் சிவப்பு ஆகும். இதற்கு கீழ் நிலை பச்சை நிலை இதில் வீட்டில் உள்ளோரும்ஆசீலகர்களும் அடங்குவர்இதற்கும் கீழ் நிலை நீல வண்ணம் ஆகும்கர்மா என்ற ஒன்று உண்டு என்பதனை நம்புவோர்கள் இந்நிலையில் அடங்குவர்இறுதியாக கருப்பு வண்ண நிலை ஆகும்தொடக்க நிலையில் ஆசீவகத்தை ஏற்போர்  ஆசீவத்தை ஏற்று கடுந்தொழில் புரிவோரான வேடர்கள்கள்வர்கள்காவல் காப்போர் என மனதளவில் செம்மை அடையாதோரும்பக்குவப்படாதோரும் இந்நிலையில் அடங்குவர்.   

28. வானியல்       
மெளரியர் காலத்தில்தான் ஆசீவகம் இலங்கையில் உள்ள கொழும்புவில் நுழைந்ததாக மகாவம்சநூல் கூறுகின்றதுதேவநாம்பிய திஸ்ஸன் என்பவரால் தான் ஆசீவகத்திற்கு இருக்கை அனுராதபுரத்தில் அமைத்துதரப்பட்டதுஇதே நேரத்தில் தான் ஆசீவகம் குஜராத் வரை பரவியதுபிந்துசார மன்னர் ஆசீவகர்களை பிங்கலவாத ஆசீவகர்கள் என அழைத்தார்மேலும் ஆசீவகர்கள் எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவர்கள் என்பதால் பிந்துசாரர் ஆசீவகர் ஒருவருக்கு தன் அவையில் இடமளித்து வைத்திருந்தார்பிந்துசாரரின் அவையில் இருந்த ஜராசனா என்பவர் எதிர்காலத்தை கணித்து கூறும் ஆசீவகராக இருந்தார்அவர் பிராமண குடும்பத்திலிருந்து வந்தவரேஎனவே எதிர்காலத்தை கணித்து கூறும் கலையை ஆசீவகர்களிடமிருந்து  கற்றுக்கொண்டார்மேலும் ஆசீவகத்தை ஆதரித்த பிராமணர்கள் இன்று வைஷ்ணவர்களாக இருக்கலாம் என கூறப்படுகின்றதுஆசீவகர்கள் எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவர்கள் என்பதனை சிரவணபெலகோலாவில் உள்ள பத்திரபாகு கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.

29.ஆசீவகர்களுக்கான இருக்கைகள்           
அசோகர் நாகர்ஜுனி குகையையும்பராபர் குகையையும் ஆசீவகர்களுக்காக அற்பணித்தார்மேலும் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குண்டுப்பள்ளியில் உள்ள ஒரு ஊரின் பெயர் ஆகுவுளா பாரு (ஆசீவக பாறைஎன்பதாகும்அதில்  தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறுவர்மேலும் லோமா ரிஷி குகை ஆசீவகர்களின் சபை இருந்த இடம் என்றும் பின்னாளில் பெளத்தர்கள் அதை ஆக்கிரமித்துக்கொண்டதாக முனைவர் பாசியம் கூறுகிறார்உதயகிரி குகைகளில் காரவேலரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றனஉதயகிரி குகைகளில் யானைசின்னம் பொறிக்கப்பட்டிருந்தது அது நீக்கப்பட்டு பின் அதில் சிங்கம் பொறிக்கப்பட்டதுஅக்குகைகள் கூட ஆசீவகர்களுக்கு உரியதாய் இருக்கலாம்குப்தர்காலத்தில் பிராமணர்களுக்கும்சமஸ்கிருதத்திற்க்கும் முக்கியம் தரப்பட்டது அக்காலத்தில் பல ஆசீவக இருக்கைகள் வலிந்து வெற்றிடமாக்கப்பட்டன.

30.சமஸ்கிருத நூல்களில் ஆசீவகம் பற்றி
பஞ்ச தந்திர கதைகளில் மணிபத்தர் என்ற கிளைக் கதையில் விஷ்ணுகுப்தர்  ஆசீவகர்களைப் பற்றி குறிப்பிடுகின்றனர்கி.பி.6 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட விசாகதத்தர்முத்திர ராட்சன் நாடகத்தில் ஜைனர்களையும் ஆசீவகர்களையும் இணைத்து ஒரே பெயராக காட்டியுள்ளனர்
   சில அரசர்கள் ஒற்றர்களை ஒற்றாட செய்ய பிறர் போன்ற உருவத்திற்கு மாற்றி ஒற்றாட செய்வர்அவ்வாறு ஒற்றாடுவோர்கள் எளிய வேடங்களை ஏற்பர் அந்த வடிவங்களில் ஜைன மற்றும் ஆசீவக துறவி வடிவங்கள் அதிகமாக இருக்கும்பகவதி சூத்திரத்தின்படி சந்திரகுப்த மெளரியருக்கும்  விசாகதத்தனுக்கும் இடையே உள்ள பகையை பயன்படுத்தி  சாணக்கியர் தன் ஒற்றர்களை ஆசீவக வடிவத்தை ஏற்க செய்து மகாபதுமநந்த மன்னனை பற்றி ஒற்று அறிந்து வர அனுப்புகின்றார்.
சாணக்கியர் ஆசீவக வேடம் அணிந்தவர்களை  மகாபதுமநந்த மன்னனுக்கு எதிராக ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார்.ஒருநாள் அசோகர் முன் நிர்கந்த உபாசகர் ஒருவர் புத்தரின் படத்தை அவமரியாதை செய்ததால்நிர்கந்தர்களை கொல்ல உத்தரவிட்டான் அசோகன்நிர்கந்தர்களின் தலையோடு வருவோற்க்கு தினாரா என்னும் பணத்தை பரிசளிப்பதாக முரசறைந்தான்.   அசோகரின் உடன் பிறந்த தம்பியான வீதசோகனை நிர்கந்தர் என நினைத்து நிர்கந்தர்களுடன் சேர்த்து கொன்றனர்பாடலிபுத்திரத்தில் உள்ள அனைத்து நிர்கந்தர்களையும் ஆசீவகர்களையும் கூண்டோடு கொழுத்தினான்அசோகன்அதில் 18,000 ற்கும் மேற்பட்டோர்கள் இறந்தனர்ஆசீவகர்களுக்கும் நிர்கந்தர்களுக்கும் வேறுபாடு அறியாததால் இக்கொடுமையில் ஆசிவகர்களும் பலியாயினர்.  ஆனால் இதற்க்கு முக்கிய காரணம் திவ்யவதனா என கூறப்படுகின்றதுஇதனை அசோகவதனம் என்ற நூல் பதிவு செய்துவத்துள்ளதுஇதன் பின் ஆசீவகம் தன் செல்வாக்கை வடநாட்டில் இழந்தது 
வரலாற்றுப்படி ஆசீவகர்களின் ஆளுமை மெளரியர் காலம் வரை தொடர்ந்ததுஏறத்தாழ பதஞ்சலியின் காலம் (கி.மு.150) வரை வட இந்தியாவில் உயிர்ப்புடன் இருந்தது.வராஹிமிகிரர் தன்னுடைய காலத்தில் (525 பொ.இருந்த மதங்களை பட்டியலிடுகின்றார்.
ஆசீவகம் ஏகதண்டி எனவும் அழைக்கப்பட்டதாய் கூறுகின்றனர்ஹர்ச சரிதமும் ஆசீவகர்களைப்பற்றி கூறுகின்றது ஹர்ச சரிதம் ஆசீவகர்களை பரிநிர்வாணர்கள் என்று அழைகின்றதுசிரமணத்தை பலர் பின்பற்றி இருந்தாலும் ஆசீவகர்கள் ஆய்வாளார்கள் எளிமையாய் அடையாளம் காணப்பட்டனர்கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை சாளுக்கியயாதவ மன்னர்களுக்கும்மக்களுக்கும் அறிந்தவர்களாகவே ஆசீவகர்கள் இருந்தனர்காஞ்சியில் வாழ்ந்த புத்த பிக்குகளும்ஜைனர்களும் இவர்களை நன்றாக அறிந்திருந்தனர்.
மேலும்கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்மோரியப் பேரரசின் கடைசி அரசனான பிரிகத்ரதா மோரியரின் படைத்தளபதியாக இருந்த புஷ்யமித்ர சுங்கன் எனும் ஆரிய பார்ப்பனர் இனத்தைச் சேர்ந்தவர்பிரிகத்ரதாவைக் கொன்று சுங்கர் அரசை உருவாக்கினார்அவர்அசோகர் ஆசீவகத்தையும் ஜைனத்தையும் அழிக்கப் பயன்படுத்திய அதே முறையைக் கொண்டு பௌத்த நெறியை வடஇந்தியாவில் அழித்தார் என அசோகவதனம் குறிப்பிடுகிறது. மேலும் ஆசீவகத்தை ஆராயும்போது அது கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் தொடங்கபட்டிருக்கலாம் என முனைவர் பரூவா குறிப்பிடுகின்றார்.
கி.பிஐந்தாம் நூற்றாண்டிற்கு பிறகுதான் சமஸ்கிருத நூற்களில் ஆசீவகர்கள் பற்றிய குறிப்புகள் காணக்கிடைகின்றனஅர்த்தசாஸ்திர நூலில் ஆசீவகர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளனயாரேனும் ஒருவர் விழாக்களின் போதோ அல்லது நிகழ்வுகளின் போதோ ஆசீவகர்களுக்கோ அல்லது சாக்கியர்களுக்கோ உணவளித்தால் நூறு பணம் தண்டம் விதிக்கப்படும் என அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுஅர்த்த சாஸ்திரத்தில் ஆசீவகமும் பெளத்தமும் அக்காலத்தில் புகழ்பெற்ற துறவு சமயங்களாக குறிப்பிடப்படுள்ளன.
மகாபாரத நூலானது குப்தர்கள் அல்லது மெளரியர்கள் காலத்தில் தான்  இறுதிவடிவம் பெற்றதுகுப்தர் கால வடஇந்திய நிகழ்வுகள் மகாபாரத்தில் குரிப்பிடப்படுள்ளனமன்கி என்ற மகாபாரத கதை கோசாலரை குறிப்பதாகவே உள்ளதுமேலும் வாயு புராணமும் ஆசீவகர்களைப்பற்றி கூறுகின்றதுநிர்கந்தர்கள் சிரார்த்தம் செய்வதில்லை என்றும் , புத்த பிக்குகளும்ஆசீவகர்களும் இரந்துண்ணுபவர்கள் என்றும் இவர்கள் தர்மத்தின் படி வாழ்வதில்லை என்றும் குறிப்பிடப்படுள்ளது.
ஜானகி கரண நூலில் ஆசீவகத்தின் தாய் நிலம் அல்லது தோற்றம் என்பது தென்னிந்தியாவில் நிகழ்ந்தது என்றும்வட இந்தியாவில் மக்கள் ஆசீவகத்தை மறந்த பின்னரும் தென் இந்தியாவில் செழிப்போடு அம்மதம் இருந்ததென அந்நூல் கூறுகின்றது.

31.வராகிமிகிரரின் துறவிகள் பட்டியல்:
வானவியலாளரான வராகிமிகிரர் தனக்கும் நூறுவருடங்களுக்கு முன் வாழ்ந்த அல்லது கி.பி பத்தாம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த துறவு மதங்களை உத்பாலருடன் சேர்ந்து பட்டியலிடுகின்றார்.
வராகிமிகிரர் தன்னுடைய பிரகஜாதக நூலில் பட்டியலிட்டுள்ளார்நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் பன்னிரெண்டு வீடுகளில் ஏதேனும் ஒருவீட்டை மட்டும் பார்க்க ஒரு துறவியின் ஜன்னம் நிகழும் என வராகிமிகிரர் கூறுகின்றார்வராகியார் ஏழு வகையான துறவிகளை பட்டியலிடுகின்றார்மேலும் உத்பாலரும் ஒரு ஏழுவகையான பட்டியல்களைத்தருகின்றார்.
வராகியார் பட்டியல்
1.    சாக்கியர்கள், 2.ஆசீவகர்கள், 3.பிக்குகள், 4.விருதர்கள்(கபாலிகம்) 5.சாரகர்கள் 6. நிர்கந்தர்கள் 7.வன்யாசனர்கள்(வனத்தில் வாழ்வோர்)
  
உத்பாலர் பட்டியல்
                    1.    இராக்கதபாதர்கள் (சாக்கியர்கள்)         - சிவப்பு அங்கி அணிந்தவர்கள்
2.    ஏகதண்டிகள் (ஆசிவகர்கள்)                - (தரப்படவில்லை)
3.    சன்னியாசிகள்                                    - (தரப்படவில்லை)
4.    விருதசார்வகர்கள்(கபாலிகம்)              - (தரப்படவில்லை)
5.    சக்கரதாரர்கள்                                     - (தரப்படவில்லை)
6.    நிர்கிரந்தர்கள்                                     - ஆடையற்றவர்கள்
7.    வனயாசனர்கள்                                  - (தரப்படவில்லை)
வராகிமிகிரரால் குறிப்பிடப்பட்டுள்ள சில துறவு மதங்களுக்கு உத்பாலர் சில விளக்கங்களைத் தருகின்றார்அவற்றுல் முக்கியமானதுஆசீவகர்களுக்கும் விருதர்களுக்கும் அவர்தரும் விளக்கம் ஆகும்.
மகேசுவரனுக்கு சேவை செய்யும் அனைவரும் விருதர்கள் அல்லது கபாலிகர்கள் என அழைக்கப்படுவர்  அவர்கள் கையில் கபாலத்தை ஏந்தி பிச்சை ஏற்பர்ஆசீவகர்கள் என்போர் நாராயணைத் தொழுது சேவை செய்வோர் என குறிப்பிட்டுள்ளார்வேத மதம் பரவிய பின்பு இங்கு பார்சுவநாதரே நாராயணனாக காலப்போகில் வடிவமாற்றம் அடைகின்றார்கெர்ன் அவர்கள் கூற்றுப்படி இன்று நராயணனைத் தொழுவோரெல்லாம் அன்றைய ஆசீவகவழி வந்தவர்களே என்று கூறுகின்றார்இதை பூஃலரும் வழிமொழிகின்றார்மேலும் உத்பாலர் தன் நூலில் ஆசீவகர்கள் ஏகதண்டிகள் என அழைக்கப்பட்டவர்கள் என்றும் விஷ்ணு என்று அழைக்கப்படும் நாராயணனை தொழுது வணங்கியவர்களே என்றும் கூறுகின்றார்.
கலகாச்சாரியர் என்னும் ஜைனர் ஆசீவகர்கள் மூங்கில் தப்பையை சுமந்து திரிவோர் என்றும் மற்ற துறவு இனங்கள் ஆசீவகர்கள் போல் இல்லை என்றும் குறிப்பிடுகின்றார்புதன் கிரத்தை அடிப்படையாய்கொண்டு பிறப்போர் விஷ்ணுவைத்தான் வழிபடுவர் என்றும் கூறுகின்றார்.
வராகிமிகிரரும் தானும் ஒரு சிறந்த ஆசீவகரே என்பதை உறுதிபடகூறுகின்றார்ஏனெனில் வானவியலில் தானும் ஒரு சிறந்தவர் என்பதால்எனவே ஆசீவகர்கள் வானவியலில் சிறந்து விளங்கினர் என்பதும் புலனாகின்றது.
வைஷ்ணவர்களின் கோட்பாடான பஞ்சரத்னாவில் கோசாலரின் நியதி கோட்பாடே பேசப்பட்டுள்ளதுஉத்பாலரின் சூத்ரகிருதங்கா நூல் ஆசீவகர்கள் நியாயவாதிகள் என்பதனை முழுமையாக எடுத்துரைக்கின்றதுஜைன ஆசிரியரான குணரத்தினர் பூரணரை முக்காலம் உணர்ந்த ஞானி என்றே கூறுகின்றார்மண்டல மோட்சம் என்ற கருத்தியல் ஆசீவகத்தில் தோன்றியது என்பதனை இந்நூல் உறுதிசெய்கின்றதுமேலும் ஆசீவகர்கள் அறிவிற் சிறந்தோர் என்றும் கூறுகின்றார்நியாய வாத்ததில் சிறந்து விளங்கினர் என்றும் கூறியுள்ளார்.     
கோசாலரின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்தவர்களில் ஒரு குழுவினர் தேராசியர்கள் என அழைக்கப்படுவர்தேராசியர்களும் துறவிகளேகோசாலர் உருவாக்கித்தந்த பூர்வங்களில் உள்ள 21 சூத்திரங்களை பின்பற்றியே வாழ்ந்தனர்இதை சமவயங்க சூத்திரமும் உறுதிசெய்கின்றதுஇவர்களுக்கு வைசேடிகர்கள் என்ற பெயரும் உண்டுஇந்நூல் மூலம் வைசேடிகம் ஆசீவகத்தின் ஒரு பிரிவு என்பதும் கணாதரால் இயற்றப்பட்ட வைசேடிக நூல் ஆசீவகர்களுக்கு உரியது என்பதும் புலனாகின்றதுமேலும் அந்த 21 சூத்திரங்களைக்கொண்டு எழுந்த நூல்தான்  வைசேடிகம் ஆகும்அந்த 21 சூத்திரங்களும் அசீவக பூர்வத்தின் ஒரு பகுதியாய் இருந்ததும் தெரியவருகின்றது.  .  

32.நேமி சந்திரர்
        கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திகம்பர ஜைன மெய்யியலாளர் நேமி சந்திரர் தான் எழுதிய பிரவச்சன சார ஒதரா என்ற நூலில் தானறிந்த துறவு மதங்களைப் பட்டியலிடுகின்றார்அவர் குறிப்பிடுவது ஐந்து துறவு மதங்களாகும்.
1.நிர்கந்தர்கள் (ஜைனர்கள்)  2.சாக்கியர்கள் (பெளத்தர்கள்) 3.தபசிகள்(பிராமண ஜடிலர்கள்) 4.கைருகர்கள்(முக்கோல்சுமப்போர்) 5.ஆசீவகர்கள்(கோசாலரை பின்பற்றியோர்)
     ஜைனத்தை முதன்மையாகவும்ஆசீவகத்தை இறுதியாகவும் குறிப்பிட்டதிலிருந்து திகம்பரர்கள் ஜைனர்கள் ஆசீவகர்கள் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சி வெளியாகின்றது.

32.சியாத்வாத மஞ்சரி
          ஆசீவகத்தை பற்றி இறுதியாக ஒரு குறிப்பு வடநாட்டில் ஜைன மல்லிசேனரால் இயற்றப்பட்ட சியாத்வாத மஞ்சரியில் கிடைகின்றதுஇந்நூல் கி.பி.1292 ல் இயற்றப்பட்டதாகும்வடநாட்டில் ஆசீவகம் மறைந்த பிறகும் இவர் தன்நூலில் ஆசீவகத்தின் கொள்கைளையும் கோட்பாடுகளையும்  குறித்துள்ளார்இவரால் ஆசீவகம் பற்றி 1600 வருடங்களுக்கு பின் எப்படி எழுதியிருக்க முடியும் என சிந்தித்தால்அங்கு கிடைக்கும் விடை அவர் தமிழகத்தோடு தொடர்பு கொண்டிருக்கலாம் என்பதேஏனெனில் ஆசீவகம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இடையறாது செயல்பட்டது தமிழ்நாட்டில் மட்டும் தான்.
சமஸ்கிருத இலக்கியங்களில் ஜாதக பாரிஜாதம் என்ற வைத்தியநாத தீக்சிதரின்(கி.பி.1425)  நூலில் தான் சமஸ்கிருதத்தில் இறுதியாக ஆசீவகம் பற்றி குறிப்பிடப்படுள்ளதுஅந்நூலில் சீவகர்கள் உணவிலும் பேச்சிலும் விருப்பமுடையவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.   
சர்வ தரிசன சங்கார என்ற நூலில் முழுமையடைதலைபற்றி  இரசேசுவார தரிசனம் அல்லது ரசவாத தரிசனா என்ற பகுதியில் கொடுக்கப்படுள்ளதுஅதில் தீமைகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளவும்முக்தி அடையவும் பாதரசம் இன்றியமையாதது என குறிப்பிடப்பட்டுள்ளது.        

33.தமிழ்நாட்டில் ஆசீவகம்
தமிழில் ஆசீவகத்தை பற்றி பல நூல்கள் பேசுகின்றனஅவற்றுள் பண்டைய நூல்களில் சில நீலகேசிசிலப்பதிகாரம்மணிமேகலைபுறநானூறுசிவஞான சித்தியார்அடிமதிக்குடி ஐயனார் பிள்ளைத் தமிழ்பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் சிலதிருக்குறள்பெரியபுராணம்தொல்காப்பியம்என அடுக்கலாம்ஆயினும்நீலகேசி ஜைனம் வழி நின்றும்மணிமேகலை பெளத்தம் வழி நின்றும்சிவஞானசித்தியார் சைவம் வழி நின்றும்ஆசீவகம் பற்றிய கருத்துக்களைத் தந்துள்ளன.
          ஆசீவகர்களின் துறவு வாழ்க்கை 8 நிலைகளை உடையது என்று புத்த கோசர் குறிப்பிடுகின்றார்ஏழாவது நிலையான நல்வெள்ளை நிலையை கடந்தால் துறவிகள் அடைவது நிர்வாண நிலையாகும்நிர்வாண நிலை அடைந்தால் புலன் இயக்கங்கள் ஒருமுகப்பட்டால் பேசுவது அரிதுஇதைத்தான் நீலகேசியில் தமிழகத்தில் சமதண்ட அல்லது குக்குட நகரில் வாழ்ந்த பூரணரை சந்தித்துபேசினால் உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் என்றெண்ணி பேசாத உம் தலைவரால் எப்படி கொள்கைகளை கூறியிருக்க முடியும் என புரிதலின்றி கேட்கிறாள்இதிலிருந்து அறியவருவது அன்றைய ஜைனர்கள் நிர்வாண நிலை பற்றி அறியவில்லை என்றே எண்ணுகின்றேன்உவாசக நூலில் மற்கலி தன் இறப்புக்கு முன்பாக பேசினார் என்றோர் குறிப்பு உண்டுஆசீவகம் வளர்ந்த பின் பல ஊர்களில் ஆசீவக சபை ஏற்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது.
பல வடநாட்டு நூல்கள் ஆசீவகத்தை திகம்பர ஜைனத்தோடு சேர்த்து குறிப்பிட்டாலும்தமிழில் உள்ள நீலகேசி நூலில் பூரணர்ஆசீவகத்தை பின்பற்றுவோர் திகம்பர ஜைனர் இல்லை என்றே உறுதியாக கூறியுள்ளார்பாலாற்றங்கரையில் காஞ்சிவரத்தை சுற்றி ஆசீவகம் செழுமையுடன் வளர்ந்திருந்தது என்றும் அங்கு சில ஆசீவகர்கள் தந்திரங்கள் பயின்றிருந்ததாகவும்அதில் ஏதோ சில காரணங்களுக்காக சிலர் வைஷ்ணவதிற்கும் சிலர் ஜைனத்திற்கும் சென்றுவிட்டதாக கார்னலே கூறுகின்றார்.
ஆசீவகர்கள் வாழ்ந்த அதே பகுதியில் அதே இடத்தில் திகம்பர ஜைனர்களும் வாழத்தொடங்கினர்அதனால் ஆசீவர்களுக்கும் திகம்பர ஜைனர்களுக்கும் வேறுபாடு அறியாமல் போனதுஇதனால் தமிழ்நாடில் ஒரு பெரிய வரலாற்றுப்பிழையே நிகழ்ந்ததுதமிழ்நாட்டில் மதுரைதிருநெல்வேலி திண்டுக்கல்எண்ணாயிரம்ஐயானார்குளம்காஞ்சிபுரம் போன்ற இடங்களில் ஆசீவகர்கள் வாழ்ந்த பகுதிகளை திகம்பர ஜைனர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் ஜைனர்களுக்கும் ஆசீவகர்களுக்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கு புரியவில்லைவடமேற்கு இந்தியாவில் இதே நிலை நீடித்ததால் தான் ஹர்சர் காலத்தில்  இருந்த பல ஆசீவக இருக்கைகள் திகம்பர ஜைனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டனவடமேற்கு இந்தியாவில் இன்றும் அப்பகுதிகளில் ஜைனர்கள் வாழ்வது கண்கூடு.
தமிழகத்தில் மட்டுமின்றி ஆசீவகம் கேரளம்கருநாடகம்ஆந்திர மாநிலங்களிலும் பரவியிருந்தனர் என முனைவர் பாசியம் கூறுகின்றார்ஆசு வரி தமிழகத்தில் ஆசீவகர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது என முனைவர் பாசியம் கூறுகின்றார்ஆனால் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முனைவர்.விஜயலட்சுமி அவர்களின் நூலில் அதை அவர் மறுத்துள்ளார்ஆசு வரி என்பது அசுவ வரியினையே குறிக்கும் அசுவம் என்பது குதிரை என பொருள்ப்படும்அசுவத்தை மேய்த்ததால் அக்கால மன்னர்கள் அசுவம் மேய்ப்போரிடமிருந்து அசுவ வரி பெற்றதாகவும் அதுவே காலப்போக்கில் ஆசுவரி என் மருவியதாகவும் அவர் கூறுவார்.
வடநாட்டில் வழக்கற்றுப் போயிருந்தாலும் தன் தாய்மண்ணான தமிழகத்தில் கி.பி. 14ஆம் நூற்றாண்டைத்தாண்டியும்  தன் கொள்கைகளை பிற மதங்களுக்கு அளித்துவிட்டு இன்றும் பலரின் குல தெய்வமாக  இயங்கிக்கொண்டிருக்கின்றது ஆசீவகம்.

குறிப்புதவி நூல்கள்:
1.   
  1. B.M.Barua (1920) The ajivikas Part  1, Calcutta: University of Calcutta.
  2.  A.L.Basham (1951) History and Doctrines of Ajivikas,London: Luzac & Company Ltd.
  3.  ர.விஜயலட்சுமி(1988) தமிழகத்தில் ஆசீவகர்கள்,சென்னை: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.
  4.  க.நெடுந்செழியன்(2009) ஆசீவகமும் ஐயனார் வ்ரலாறும், சென்னை: பாலம் பதிப்பகம்.
  5. க.நெடுந்செழியன் பேட்டி(2014) சிறப்புவிருந்தினர் நிகழ்ச்சி : கலைஞர் தொலைகாட்சி

கருத்துகள் இல்லை: