வெள்ளி, 29 ஜனவரி, 2021

திமுகவில் இணையும் பாமகவினர் .. ராமதாஸ் அதிர்ச்சி! தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளில் இருந்தும் ஏராளமானோர் திமுகவில் இணைகிறார்கள்

Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: டாக்டர் ராமதாஸ் சொந்த ஆதாயத்திற்காக - சுய நலத்திற்காக, தி.மு.க., வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். ராமதாஸ் தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் உள்ள பாட்டாளிகள் தி.மு.க.வை நோக்கி இன்னும் அதிகமாக வரப் போகிறார்கள். 

அதில் சந்தேகம் இல்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி தொ.மு.ச. அலுவலக வளாகத்தில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியத்திலிருந்து மணிவர்மா தலைமையில் பா.ம.க.விலிருந்து 500 பேர், தே.மு.தி.க.விலிருந்து ஒன்றியப் பொறுப்பாளரும் அரசடிக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீரபாண்டியன் தலைமையில் 60 பேர் ,இணைந்தனர்.
இதேபோல் தே.மு. தி.க.விலிருந்து முன்னாள் ஒன்றியச் செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான அனந்தராமன் தலைமையில் 200 பேர், பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம் பா.ம.க.விலிருந்து ஒன்றிய துணைச் செயலாளர் எ.சின்னத்தம்பி தலைமையில் 90 பேர், நாம் தமிழர் கட்சியிலிருந்து வடக்குத்து ஊராட்சி செயலாளர் பிரபாகரன் தலைமையில் 120 பேர், நெய்வேலி நகர எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் சொரத்தூர் சேகர் தலைமையில் 60 பேர், பண்ருட்டி ஒன்றியம் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து ஒன்றிய அமைப்பாளர் கே.வெங்கடேசன் தலைமையில் 80 பேர் உள்பட பலர் தி.மு.க.வில் இணைந்தனர்.


வன்னியர் சமூகம் இந்த விழாவில் காணொலி காட்சி வழியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தி.மு.க.வில் இணைந்தவர்களை வாழ்த்தினார். அப்போது ஸ்டாலின் பேசுகையில். வன்னியர் சமுதாயம் தி.மு.க. ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 20 சதவீத இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு கேட்டுப் போராடி - உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், உதவித் தொகையைும் அளித்தது தி.மு.க. ஆட்சி.


சென்னை பல்கலை துணைவேந்தர் தமிழ்நாட்டில் முதன்முதலில் டி.ஜி.பி.யாக ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த கட்சி தி.மு.க. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க. சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தது தி.மு.க. ஆட்சியில் தான்.

பாமகவினர் பாமகவினர் ஆனால், டாக்டர் ராமதாஸ் சொந்த ஆதாயத்திற்காக, சுய நலத்திற்காக, தி.மு.க., வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம் செய்து வருகிறார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துதான் இன்றைக்கு பா.ம.க.வில் இருந்து விலகி - இந்த மாபெரும் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறீர்கள். ஆகவே, டாக்டர் ராமதாஸ் தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் உள்ள பாட்டாளிகள் தி.மு.க.வை நோக்கி இன்னும் அதிகமாக வரப் போகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை

பினாமிகள் ஊழல் பினாமிகள் ஊழல் ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை, பினாமிகள் மூலம் வழக்குப் போட்டுத் தடுத்தவர் மு.க.ஸ்டாலின் என்று ஒரு பொய்யைக் கூறிக்கொண்டிருக்கிறார் பினாமிகளை வைத்து ஊழல் செய்வது, முதல்வர் பழனிசாமிக்குக் கைவந்த கலை. பினாமிகள் பெயரில் டெண்டர் விடுவது பழனிசாமிக்குப் பழக்க தோஷம். ஆனால் தி.மு.க. என்றைக்குமே நேரில் எதிர்க்கும் இயக்கம். தவறு என்றால் அதை நெஞ்சுரத்துடன் தட்டிக் கேட்கும் இயக்கம் இது. நாளை (இன்று) முதல் திருவண்ணாமலையில் இருந்து, "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற பிரசாரத்தை தொடங்குகிறேன்" என்றார்.


கருத்துகள் இல்லை: