சுமதி விஜயகுமார் : · நான் தீவிர ஷாருகான் ரசிகையாய் இருந்த சமயமே, ஷாருக்குடன் நடித்த ஒரு நடிகர் என்னை ஈர்தார் என்றால் அது Saif Ali Khan. Kal Ho Na Ho திரைப்படத்தில் shahrukh தியாகியாக ஸ்கோர் செய்ய முயற்சிக்கையில், saif ஒரு துருதுரு அப்பாவியாய் மனதை கவர்ந்திழுப்பார். அதன்பிறகு நான் பார்த்த படம் Hum Tum. ஒருவிதமான, எதார்த்தமான காதல் கதை. அவரின் படங்களை தேடி தேடி பார்த்ததில்லை என்ற பொழுதிலும், அவரை பிடிக்கும். இப்போது Tandav என்ற Amazon Prime ல் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். 9 பாகங்களை கொண்ட முதல் சீசன் மட்டுமே வெளியாகி இருக்கிறது. முதல் 3 எப்டிசொட்களில் மிரள வைத்திருக்கிறார். சர்வாதிகாரியான வில்லன் கதாபாத்திரம். கனகட்சிதமாய், மிக பொருத்தமாய் பொருந்தி போயிருக்கிறார்.
சிறிய வயதில் Saagar என்ற படம் பார்த்ததில் இருந்து Dimple Kapadiya வை பிடித்ததேயில்லை. அழகாய் இருக்கும் நம்ம ஊர் கதாநாயகன் கமலை புறக்கணித்து, சப்பவாய் ரிஷி கபூரை காதலித்தத்தில் அவரின் மேல் கோபம் உண்டு. இந்த சீரியலை பார்த்த பின்னர் தான் தெரிந்தது Saagar ரில் அவரின் கதாபாத்திரத்தை அல்ல அவரையே எனக்கு பிடிக்கவில்லை என்று. Tandav ல் அவ்வளவு கனமான கதாபாத்திரத்துக்கு கொஞ்சம் கூட நியாயம் சேர்க்கவில்லை Dimple. Ramya கிருஷ்ணனாக இருந்திருந்தால் கலக்கி இருப்பார்.
மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் கட்சியின் முதல்வர் யார் என்ற போட்டியே கதை கரு. Jnu பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட தாக்குத்தாலை போன்ற காட்சிகள் Vnu பல்கலைக்கழகமாக காட்சிப்படுத்தப்படிருக்கிறது.
ஒருவரை ஒருவர் வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு இடையே,VNU மாணவராகிய Shiva Shekar ரை (Kannaiah Kumar?) தன் சுயநலத்துக்காக அரசியில் Saif இழுக்க, அவரும் ஒப்புக்கொள்கிறார், ஆனால் தனியாக கட்சி ஆரம்பித்து போட்டி போட. அத்துடன் முதல் சீசன் முடிகிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த சீரியலை ஏன் அனைவரும் பார்க்க வேண்டும் என்றால்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக