வெள்ளி, 29 ஜனவரி, 2021

புதுச்சேரி நமச்சிவாயம் (Ex minister) தீப்பாய்ந்தான் ( ex MLA ) டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

நாராயணசாமி vs நமச்சிவாயம்: பாஜகவில் சேர்ந்த புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் தலைவர்

BBC : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் இருவரும் டெல்லியில் இன்று‌ (வியாழக்கிழமை) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர். கடந்த திங்கட்கிழமை அன்று அவர்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.இதனிடையே நமச்சிவாயம் அவரது ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு இணங்க அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.முன்னதாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தன்னை ஓரம் கட்டுவதாகவும், மத்திய அரசு மற்றும் கிரண் பேடியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த காரணத்தினால் தன்னை சார்ந்தவர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் எதுவுமே செய்ய முடியவில்லை என்றும் கூறி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்வதாக நமச்சிவாயம் கூறியிருந்தார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து மூன்று முறை அமைச்சராகவும், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் நமச்சிவாயம் பதவி வகித்துள்ளார்.

இதனிடையே கடந்த 2015ஆம் ஆண்டு புதுவை காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நமச்சிவாயம்‌ தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

அதன் பிறகு புதுச்சேரி முதல்வராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைமை நாராயணசாமியை முதல்வராக தேர்வு செய்தது.

அதிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக தனது அதிருப்தியை நமச்சிவாயம் வெளிப்படுத்தி வந்தார். <

கருத்துகள் இல்லை: