வெள்ளி, 7 மே, 2021

முதல்வர் ஸ்டாலினின் தனிச்செயலர்கள்

May be an image of 4 people and text that says 'vo Ecor அரசியல் ஆத்மா செய்திகள்'

உமாநாத் IAS    :  ரேபிட் கிட் விலையை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் போது அமைச்சர் விஜயபாஸ்கரை நீங்களே விலையை சொல்லுங்கள் என்று கோர்த்துவிட்டவர்.
அனு ஜார்ஜ் IAS
ஆளுங்கட்சியின் அதிகார மிரட்டலுக்கு அடிபணியமல் அங்கன்வாடி ஊழியர் நியமனங்களில் தகுதி அடிப்படையில் ஊழியர் நியமனம் செய்தவர். அதனாலயே பழிவாங்கப்பட்டவர்
சண்முகம் IAS
எடப்பாடியும் உதயகுமாரும் கொள்ளையடிக்க முயன்ற பாரத் நெட் டெண்டரில் முறைகேடு என கையெழுத்து மறுத்து கோப்பை திருப்பி அனுப்பியவர்
உதயசந்திரன் IAS
 • தமிழகத்திற்கே அவமானச்சின்னமாக இருந்த பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தல்களை முன்னின்று நடத்தியவர்
 • பலநூறு கோடிகள் கல்விக் கடனாக வழங்க ஏற்பாடுசெய்தவர்
• இடஒதுக்கீடு குறித்து சரியான புரிதலை தரும் வகையில் பாடத்திட்டத்தை உருவாக்கியர்.  மிகச் சரியான தேர்வு


என்னய்யா எல்லா பாலும் சிக்சர் அடிக்கிறாரு முதல்வர்
தன்னோட டீம் சரியா இருந்த பாதி வேலை முடிஞ்ச மாதிரின்னு சொல்லுவாங்க. முதல்வர் அதைதான் செய்துகிட்டு இருக்கிறார்  -  பாபு சாம்

Sivaji Narayanan : உதயசந்திரன் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தின் அச்சடிப்புகளில் செங்கோட்டையன் பல மடங்கு விலை உயர்த்தி டெண்டர்களை குறிப்பிட்ட சிலருக்கு வழங்க கட்டாயப்படுத்தியதை எதிர்த்து த.செ க்கு முழு விவரங்களுடன் கடிதம் எழுதியதைத் தொடரந்து தொல் பொருள் ஆய்வுத் துறைக்கு மாற்றப்பட்டார்.. கீழடி ஆய்வை வலு இழக்க வைக்க மத்திய அரசின் சிலர் முயற்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையான பணியாற்றியவர்..நாமக்கல் அருகே எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்..22 வயதில் IAS.

கருத்துகள் இல்லை: