ஞாயிறு, 2 மே, 2021

வன்னி அரசு மற்றும் கௌதம் சன்னா ஆகியோரின் தோல்வி... ஒரு விரிவான அலசல்

Meena Somu : அரக்கோணத்தில் கௌதம் சன்னா மற்றும் வானூரில் வன்னி அரசு ஆகியோரின் தோல்வி. அமைப்பாய் திரளாத பட்டியலின மக்களின் ( அரக்கோணம் 60% மக்கள் தொகை பட்டியலினம்) தோல்வி. ஒவ்வொரு தேர்தலிலும் சும்மா குறுக்கு மறுக்காக ஓடிட்டு இருக்கிற BSP ஒரு தொகுதியிலாவது குறைந்தபட்சம் வாக்காவது பெறுகிறார்களா ? பின் எதற்காக ஒவ்வொரு தேர்தலிலும் நின்று தனித்தொகுதிகளின் தகுதிவாய்ந்த வேட்பாளர்களுக்கு விழவேண்டிய அந்த குறைந்த அளவு ஓட்டையும் பறிக்கிறார்கள் ? அவர்கள் மட்டுமல்ல, பட்டியலின மக்களின் ஒருங்கிணைப்பை தடுக்க அந்தந்த பகுதியில் பிஜேபியின் லெட்டர் பேட் கட்சிகள் இன்று பல கிளைகள்விட்டு இருக்கின்றன. அவை பிஜேபியை நோக்கி பட்டியலின மக்களை இழுக்க பல ஆண்டுகளாக களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன. இத்தனை back up இருந்தும் அருந்ததியர் என்ற tag வைத்துக் கொண்டிருந்தும் எல்.முருகனை வீழ்த்தியது... ஒருவிதத்தில் பிஜேபியின் வியூகத்திற்கான சறுக்கல் என சொல்ல வேண்டும்.
அடுத்து, நாம் தமிழர் கட்சியில் தஞ்சம் புகுந்து, சீமான் அரசியல் பேசும் பட்டியலின இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
முக்கியமாக இரட்டை இலை, உதய சூரியன் என காலம் காலமாக ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்களுக்கு, இன்றிருக்கும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
பட்டியலின மக்களின் உரிமைக்கு ஒற்றை கட்சி என பரிந்துரைக்கவில்லை. அதே சமயம் பட்டியலின மக்களின் விடுதலைக்காக பாடுபடும் கட்சிகள் ஒரே அணியில் இருந்து அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற உத்வேகமின்றி பார்ப்பனியத்தோடு கூட்டணி( புதிய தமிழகம், ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி) வைப்பது தான் நமக்கு மிகப்பெரிய சறுக்கலாக உள்ளது.
இத்தனை மோசமான போராட்ட களத்தில்,
சனாதன எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்து எழுச்சித் தமிழர் திருமா என்ற பெரிய அரசியல் சக்தியின் 20 ஆண்டு கால உழைப்பு, அடுத்தடுத்த ஆண்டுகளில் சமூக நீதிக்கான மண்ணாக தமிழகத்தை மீட்டெடுக்கும் என்பதற்கான சாட்சி...
பொதுத் தொகுதிகள் இரண்டில் வென்றிருக்கும்
திருப்போரூர் SS பாலாஜி நாகப்பட்டினம் தொகுதி ஆளூர் ஷானவாஸ்
தனித் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் காட்டுமன்னார்கோயில்- சிந்தனை செல்வன்
செய்யூர்- பனையூர் பாபு ஆகியோருக்கு
வாழ்த்துகள்
.
அம்பேத்கரியத்தை கொண்டு சேர்ப்போம்.
அமைப்பாய் திரள்வோம். சமத்துவ சமூகம் படைப்போம்.

கருத்துகள் இல்லை: