வியாழன், 6 மே, 2021

திராவிடம் காலத்தின் தேவை! தமிழ் தேசியத்தின் கடைசி புகலிடம் ஜாதி குறுந்தேசியவாதம்

Kandasamy Mariyappan :   திராவிட முன்னேற்றக் கழகம் மீதான சில எதிர்மறை (Negative) பிம்பத்தை உடைக்க வேண்டும்.
அதாவது சிறுபான்மையினர்கள் அனைவரும், திமுகவிற்கு மட்டுமே வாக்களிக்கின்றனர்.!
அதனால் தான் கலைஞர்...
பிள்ளையார் சுண்டல் சாப்பிடாமல் நோம்பு கஞ்சி மட்டுமே குடிக்கிறார்.!
தீபாவளி வாழ்த்து கூறாமல் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறுகிறார்.!
உண்மையில்
சிறுபான்மையினர் 45-50% மட்டுமே திமுகவிற்கு வாக்களிக்கின்றனர் (2021 தேர்தல் தவிர்த்து).
உயர் சாதியினர், படித்தவர்கள், பணக்காரர்கள் திமுகவிற்கு வாக்களிப்பதில்லை.!
உயர் சாதியினர், படித்தவர்கள், பணக்காரர்கள் அதிகமானோர் திமுகவிற்கு வாக்களிக்கின்றனர்.!
அதேபோன்று பெண்கள் திமுகவிற்கு வாக்களிப்பதில்லை என்ற உருட்டும் ஓடிக்கொண்டே இருக்கும்.
உண்மையில் பெண்கள் அதிகளவில் திமுகவிற்கு வாக்களிக்கின்றனர்.
கிராமப்புற மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பதில்லை, நகர்புற மக்கள் மட்டுமே திமுகவிற்கு வாக்களிக்கின்றனர் என்ற பரப்புரையும் இருக்கும்.
கிராமப்புறத்தில் திமுக/அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே சமமான வாக்கு சதவீதம் உள்ளது.
ஆனால், இந்த எதிர்மறை (Negative) பிரச்சாரங்களால், நாமே ஒரு முடிவுக்கு வந்து விடுகிறோம்.
DMK need to change the perception.!

Seetha Ravi Suresh 
: மிகச்சிறந்த பெரியாரியவாதிகள் கொங்குமண்டலத்திலுண்டு.
ஆனால், தேர்தலரசியல் வெறுப்பும்,
தமிழ்தேசிய ஆதரவும், திராவிடத்தைவிட திராவிட கொள்கையைவிட மிஞ்சிப்போனதால்!
கொங்குமண்டலத்தை பறிகொடுத்துள்ளோம். தமிழ்தேசியத்தின் எல்லாவித முன்னெடுப்புகளும் இறுதியாக சாதியில் சென்றுதான் சேருமென்பதை இன்னமும் இவர்கள் நம்பமாட்டேனென்கிறார்கள்.
தமிழ்தேசியமே வென்றாலும்கூட, அதற்குப்பிறகான ஒடுக்குமுறைகள் இனத்தூய்மையை நோக்கியே நகருமென்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
இல்லையென்றால் திராவிடம் கலைந்து கலைந்து வட்டாரங்களுக்கு ஒன்றாக துண்டாகிப்போகுமென எச்சரிக்கிறேன்.

கருத்துகள் இல்லை: