புதன், 5 மே, 2021

திரு மு க ஸ்டாலினின் உத்தேச அமைச்சரவை? ..... சமூகவலையில் உலா வரும் பட்டியல்

 Hemavandhana - tamil.oneindia.com சென்னை: திமுகவின் உத்தேச அமைச்சரவை லிஸ்ட் ஒன்று மறுபடியும் சோஷியல் மீடியாவில் சுற்றி கொண்டிருக்கிறது.. இந்த லிஸ்ட் உண்மைதானா என்று தெரியவில்லை.. அதேசமயம், இதை பற்றின சில கருத்துக்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.. இனி ஆட்சி அமைக்க உரிமை கோரிவிட்டால் போதும்.. அடுத்து பதவியேற்புதான்.
நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையிலேயே சிம்பிளாக விழாவை நடத்த முடிவெடுத்துள்ளனர்.. இது ஜஸ்ட் பதவியேற்புதான்..
மற்றபடி, கொரோனா உள்ளிட்ட மிக முக்கிய விஷயங்களை ஸ்டாலின் ஏற்கனவே கையில் எடுத்துவிட்டார்.
ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் என்ற ஆர்வத்தைவிட, அமைச்சர்கள் யார் யார் அமைச்சர்களாக வர போகிறார்கள் என்ற ஆர்வம் எகிறி வருகிறது..
ஏற்கனவே இப்படி ஒரு உத்தேச லிஸ்ட் வைரலானது.. ஆனால், ஒன்றிரண்டு நாளிலேயே அது காணாமல் போய்விட்டது. இப்போது, மறுபடியும் அமைச்சர்கள் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.. அந்த லிஸ்ட் இதுதான்:
பள்ளிக்கல்வி நிதியமைச்சர் - துரைமுருகன், பொதுப்பணிதுறை - கே.என்.நேரு, பள்ளிக்கல்வி துறை - பொன்முடி, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை - ஐ.பெரியசாமி, நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை - எ.வ.வேலு, தொழில் துறையமைச்சர் - பிடிவி.தியாகராஜன், திட்டங்கள் செயலாக்கத்துறை - மா.சுப்ரமணியன், பொதுபோக்குவரத்துத்துறை - அன்பில் மகேஷ், உள்ளாட்சித்துறை - செந்தில் பாலாஜி, கூட்டுறவுத்துறை - கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்,இந்து சமயம் உயர்கல்வித்துறையமைச்சர் - தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை - எம்ஆர்கே பன்னீர்செல்வம், வேளான்துறை - ஈரோடு முத்துச்சாமி, பால்வளம் மற்றும் கால்நடைத்துறை - ராஜகண்ணப்பன், மக்கள் நல்வாழ்வுத்துறை - டி.ஆர்.பி.ராஜா, மீன்வளத்துறை - பி.கே.சேகர்பாபு, வீட்டுவசதி வாரியத்துறை - சக்கரபாணி, வனத்துறை - வெள்ளகோவில் சாமிநாதன், இந்துசமய அறநிலைத்துறை - அனிதா ராதாகிருஷ்ணன்

ஆட்சி மொழி கைத்தறி மற்றும் துணிநூல் துறை - கே.ஆர்.பெரியகருப்பன், சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை - ரகுபதி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை துறை - அன்பரசன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மைதுறை - கீதாஜீவன்,ஆதிதிராவிடர் நலத்துறை - என்.கயல்விழி, கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை - நாசர், சட்டம் , நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை - ஐ.பரந்தாமன், செய்தி மற்றும் விளம்பரத்துறை - காந்தி சுற்றுலாத்துறை - என்.ராமகிருஷ்ணன், தமிழ் ஆட்சிமொழித்துறை - பெ.மூர்த்தி உணவுத்துறை - அன்பழகன்

உதயநிதி இந்த லிஸ்ட்டை பார்க்கும்போது, உதயநிதி பெயரையே காணோம்.. இவர்தான் சேப்பாக்கத்தில் முதன்முதலாக வெற்றியை பதிவு செய்தவர்.. நியாயப்படி பார்த்தால் இவர்தான் முதல் ஆளாக சட்டமன்றத்தில் நுழைய வேண்டும்.. மேலும் இந்த முறை உதயநிதிக்கு அமைச்சர் பதவியும் நிச்சயம் என்பதால், எந்த எந்த தொகுதி வழங்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல் இதுவரை இல்லை. அதேசமயம், துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு தரப்படலாம் என்கிறார்கள்.. அப்படியே தந்தாலும் அவர் திறன்பட நடத்துவார் என்ற ஆதரவு குரல்களும் இப்போதே எழ ஆரம்பித்துவிட்டன.

டாக்டர் வேட்பாளர் அதேபோல, மக்கள் நல்வாழ்வுத்துறை டாக்டர் எழிலனுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகின்றன.. ஏனெனில் போட்டியிட்டவர்களில் டாக்டர் வேட்பாளர் இவர்தான், டாப்பிலும் இருக்கிறார்.. தொகுதியில் குஷ்புவை தோற்கடித்து தன் அப்பாவின் பெயரையும் நிலைநிறுத்தி உள்ளார்.. அதனால், இவர்தான் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடும் என்றே தெரிகிறது.. ஆனால், தமிழகம் இன்னைக்கு மிக மோசமாக இருக்கிறது.. யார் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றாலும், இந்த சமயத்தில் முதல்வருக்கு அடுத்தபடியாக இந்த அமைச்சருக்கு முக்கியத்துவம் நிறைந்திருக்கும்.. தமிழக நலனை இதுபோன்ற பேரிடர் காலத்தில் கையாளுவது உண்மையிலேயே சவாலான விஷயம்தான்..!

மா.சுப்பிரமணியம் அதேபோல சபாநாயகராக மா.சுப்பிரமணியம் பெயர் அடிபடுகிறது.. மா.சு. எங்கே கால் வைத்தாலும் அது மாஸ்தான்.. திமுகவில் தவிர்க்க முடியாத மூத்த தலைவர் இவர்.. ஸ்டாலினுக்கு ரொம்ப நெருக்கம்.. 2 நாளைக்கு முன்புகூட, தமிழக தொற்று பாதிப்பு குறித்த ஒரு லிஸ்ட் வேண்டும் என்று மா.சு.விடம்தான் ஸ்டாலின் கேட்டிருந்தார்.. இன்று சென்னையில் இத்தனை பாலங்கள் இருக்கிறது என்றால் அதற்கு காரணமே மா.சுப்பிரமணியம்தான். எனவே, இவருக்கு சபாநாயகர் பதவி தந்தால் அது வரவேற்கத்தக்கதே

துரைமுருகன் அதேசமயம், இந்த சபாநாயகர் பதவிக்கு கனகச்சிதமாக பொருத்தமானவர் துரைமுருகன்தான்.. கட்சியின் சீனியர்.. சபாநாயகராக அவையை நடத்தக்கூடிய அளவுக்கு திறமையும், ஆற்றலும், நகைச்சுவையும், ஆளுமையும் நிறைந்தவர் துரைமுருகன்.. அனைத்து கட்சிக்காரர்களுக்குமே துரைமுருகன் என்றால் ரொம்ப பிடிக்கும்.. பாசமாக பழகுவார்கள்.. சட்டசபையில் துரைமுருகன் பேச்சுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கும்.. துரைமுருகன் பேசினால், ஜெயலலிதாவே பலமுறை, தன்னை மறந்து விழுந்து விழுந்து சிரித்துவிடுவார்.. ஆனால், இப்போது இவர் அமைச்சர் பதவியை கேட்டு கொண்டிருப்பதால், பழைய மாதிரியே பொதுப்பணித்துறை அவர் வசமாகும் என்கிறார்கள்.

கேஎன் நேரு இதில் குறிப்பிடத்தகுந்தவர் கே.என்.நேரு.. இவரை பொருத்தவரை இவர் வகிக்காத பதவிகளே இல்லை.. மொத்த பதவிகளிலும் ஒரு ரவுண்டு அடித்து வந்துவிட்டார்.. மிச்சம் இருப்பது நிதித்துறை மட்டும்தான்.. இதுவரை நிதித்துறையில் அமைச்சர் பதவியை நேரு வகித்தது இல்லை.. அதனால், அநேகமாக நிதித்துறை நேருவுக்கு ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்

தலித் அதேபோல, துணை சபாநாயகர் பதவியை இந்த முறை தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வருகிறது.. ஏற்கனவே இதை பற்றி திமுக எம்எல்ஏக்களில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே யாருக்கு அந்த பதவி ஒதுக்கப்படலாம் என்ற விவாதமும் நடந்து வருகிறது.. இதைதவிர, சீனியர்கள், இந்த லிஸ்ட்டில் இல்லாதவர்கள், அமைச்சர் பதவிக்காக மேலிட லாபியை அணுகி வருவதும் நடந்து வருகிறது.. பார்ப்போம்.. யார் யார் நம்மை ஆள போகும் அமைச்சர்கள் என்பதை?

கருத்துகள் இல்லை: