வெள்ளி, 7 மே, 2021

திமுக மீதான போலி தர்மாவேசங்களும் அதிமுக மீதான காதல் அணுகு முறையும்

எழுத்து ஒரு தவம் - மனுஷ்ய புத்திரன் - வில்லங்க செய்தி

மனுஷ்ய புத்திரன்  : அம்மா உணவக பேனரைக் கழட்டுவது, ஃபேஸ் புக்கில் தேவையற்ற சவடால்களை விடுவதுபோன்ற சில்லரை வேலைகளில் ஈடுபடும் சில திமுக ஆதரவாளர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் இதுதான்: பெரும்போராட்டத்திற்குப்பின் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். தலைவரை நிம்மதியாக பதவியேற்க விடுங்கள். பணியாற்ற விடுங்கள். ஆர்வக்கோளாறினால் கழகத்திற்கு தேவையற்ற கெட்ட பெயரை ஏற்படுத்தாதீர்கள். திமுக வெறுப்பாளர்கள் நமது வெற்றிக்குப் பிறகு பலமடங்கு மூர்க்கத்துடன் அலைந்துகொண்டிருக்கிறார்கள். வெறும் வாய்களுக்கு அவல் தராதீர்கள்.
அதே சமயம் எங்காவது யாராவது உதிரித்தனமாக செய்யும் பொறுப்பற்ற செயல்களைவைத்து செய்யப்படும் விமர்சனங்கள் போலி தார்மீக ஆவேசம் கொண்டது. எந்த கட்சிப்பொறுப்பிலும் இல்லாதயாரோ இரண்டு பேர் உற்சாகத்தில் விளைந்த ஆர்வக்கோளாறில் அம்மா உணவக பெயர்ப்பலகையை அகற்றியதற்கான ஆவேசத்தில் கொதிப்பவர்களிடம் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.
கலைஞர் கட்டினார் என்பதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பாழடைய விட்டு அதன் பிரமாண்டமான கருத்தரங்ககூடத்தை கல்யாண மண்டபமாக மாற்றியது யார்?


கலைஞர் கட்டினார் என்பதற்காக புதிய சட்டசபைக் கட்டிடத்தை மருத்துவமனைக்கான எந்தகட்டமைப்பும் இல்லாத நிலையிலும் மருத்துவமனையாக்கிய வக்கிர எண்ணம் யாருடையது?
கலைஞர் கொண்டுவந்தார் என்பதற்காக மதுரவாயல் பறக்கும்சாலை திட்டத்தை முடக்கியது யார்?
கலைஞரால் உருவாக்கப்பட்டது என்பதற்காக கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு இன்றி துருப்பிடிக்க விடப்பட்டதும், செம்மொழிபூங்காவின் பெயர்ப்பலகையே இல்லாமல் போனதும் யாரால்?
இதுபோல ஜெயலலிதாவால், அதிமுக ஆட்சியால் காழ்ப்புணர்வோடு செய்யப்பட்ட நூறு அடையாள அழிப்பு அரச வன்முறைகளை
என்னால் சொல்ல முடியும். 

அப்போதெல்லாம் இல்லாத தார்மீக ஆவேசம் ஒரு அம்மா உணவக பேனருக்கு எங்கிருந்து பொங்குகிறது?
இத்தனைக்கும் அம்மா உணவகத்தில் அந்த செயலை மேற்கொண்டவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கு கட்சியையும் தலைமையையும் பொறுப்பாக்குவது, வண்டி வண்டியாக அறிவுரைகளை அள்ளி விடுவது என கும்பலாக வந்துவிடுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: