செவ்வாய், 4 மே, 2021

யாருக்கு "அந்த" முக்கிய பொறுப்பு?.. தமிழகமே எதிர்பார்க்கும் ஒரு பதில்.. சுகாதார அமைச்சு

MK Stalin files nomination for post of DMK president | DD News

Shyamsundar - /tamil.oneindia.com : சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் நிலையில்,
முக்கியமான ஒரு அமைச்சரவை பொறுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் யாருக்கு கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது திமுக.
முதல்வராக மு.க ஸ்டாலின் மே 7ம் தேதி பதவியேற்கிறார்.
159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இதில் திமுக மட்டும் தனியாக 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது.
எப்படி இந்த நிலையில் வரும் 7ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் யாராவது பொறுப்பேற்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஸ்டாலின் மற்றும் முதல்வர் பதவி ஏற்றுக்கொண்டு, அமைச்சரவை பின்பு முடிவு செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்பதும் கேள்வியாக உள்ளது.


முக்கியம் முக்கியம் இதில் இன்னொரு முக்கியமான விஷயம், இது கொரோனா காலம். மற்ற அமைச்சர்களை கூட பொறுமையாக தேர்வு செய்யலாம்.
ஆனால் சுகாதாரத்துறை அமைச்சரவை உடனே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஸ்டாலினுக்கு உள்ளது.

தினசரி கொரோனா ரிப்போர்ட் தொடங்கி வேக்சின் விநியோகம் வரை பல விஷயங்களை கவனிக்க வேண்டும்.
 தினமும் அதிகரிக்கும் கேஸ்கள், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மரணங்களை குறைப்பது, மருந்து தட்டுப்பாட்டை குறைப்பது, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது என்று பல முக்கியமான டாஸ்குகள் புதிய சுகாதாரதுறை அமைச்சருக்கு உள்ளது. கிட்டத்தட்ட புதிய சுகாதாரத்துறை அமைச்சர் நம்பித்தான் திமுகவின் ஆட்சியே உள்ளது.

 இவர் எப்படி செயலாற்றுகிறார் என்பதை பொறுத்தே மக்களின் எதிர்காலமும் உள்ளது,
திமுகவின் ஆட்சி எதிர்காலமும் உள்ளது.
முதல் 100 நாட்கள் சுகாதாரத்துறை அமைச்சரின் செயல்பாட்டை பொறுத்தே ஆட்சிக்கு மார்க் வழங்கப்படும்.
இக்கட்டான நிலையில்தான் திமுக தனது சுகாதாரத்துறை அமைச்சரை தேர்வு செய்ய உள்ளது. யார்? யார்? இந்த பெரிய டாஸ்க்கை நிறைவேற்ற போகும்
அந்த சுகாதாரத்துறை அமைச்சர் யார் என்பதே தற்போது பெரிய கேள்வியாகும்.
திமுக யாருக்கு இந்த முக்கிய பொறுப்பை கொடுக்க போகிறது என்பதே பெரிய கேள்வி.

டாக்டர் எழிலன் போன்ற மருத்துவத்துறையில் அனுபவம் வாய்ந்த எம்எல்ஏக்களுக்கு திமுக இந்த பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று இப்போதே கோரிக்கைகள் வைக்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் அரசியல் அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு கொடுக்கலாம்,

எழிலன் மருத்துவர் என்றாலும் அமைச்சரவை அனுபவம் இல்லை என்பதால் ரிஸ்க்,
இதனால் மூத்தவர்களுக்கு அந்த பொறுப்பை கொடுக்கலாம் என்று இன்னும் சிலர் கூறி வருகிறார்கள். ஸ்டாலினோ சுகாதாரத்துறைக்கு என்று ஏற்கனவே சிலரை மனதில் வைத்துள்ளார் என்கிறார்கள்.

 ஒரு லிஸ்டை ஸ்டாலின் வைத்துள்ளார். ஏற்கனவே இதை ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். திறமையான ஒருவரைத்தான் ஸ்டாலின் அமைச்சராக்க போகிறார் என்று கூறுகிறார்கள்.
ஆனால் இது யார் என்பதற்கான முழுமையான விவரம் வெளியாகவில்லை.. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: