வியாழன், 6 மே, 2021

தமிழ்நாடு அமைச்சரவை பட்டியல் வெளியீடு

அமைச்சரவை பட்டியல்: யாருக்கு என்ன துறை?
மின்னம்பலம்  : தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பதவி ஏற்க உள்ள நிலையில், அவரது தலைமையிலான அமைச்சரவை பட்டியல் இன்று (மே 6) வெளியானது. மு.க.ஸ்டாலினுடன் 33 பேர் நாளை அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். அதன்படி, மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர் (பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்)
துரைமுருகன் - நீர்வளத் துறை அமைச்சர்.
கே என் நேரு- நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
இ. பெரியசாமி-கூட்டுறவுத் துறை அமைச்சர்
க. பொன்முடி-உயர்கல்வித்துறை அமைச்சர்
எ. வ. வேலு- பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்- வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்.
கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்- வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்.
தங்கம் தென்னரசு- தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர்
எஸ் ரகுபதி- சட்டத்துறை அமைச்சர்
சு. முத்துசாமி- வீட்டுவசதி துறை அமைச்சர்
கே.ஆர்.பெரியகருப்பன்- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
தா.மோ. அன்பரசன்- ஊரக தொழில் துறை அமைச்சர்.
மு. பெ. சாமிநாதன்-செய்தித்துறை அமைச்சர்
பி. கீதா ஜீவன்- சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர்
அனிதா ராதாகிருஷ்ணன்- மீன்வளம்- மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்.
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்- போக்குவரத்து துறை அமைச்சர்
கா. ராமச்சந்திரன்- வனத்துறை அமைச்சர்
அர. சக்கரபாணி- உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
வி. செந்தில் பாலாஜி- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்.
ஆர். காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
மா. சுப்ரமணியன்- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.
பி. மூர்த்தி- வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
எஸ்.எஸ்.சிவசங்கர்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
பி.கே. சேகர் பாபு- இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன்- நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர்.
சா.மு.நாசர் - பால்வளத் துறை அமைச்சர்
செஞ்சி கே.எஸ்.மஸ்தான்- சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல தறை அமைச்சர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
சிவ.வீ.மெய்யநாதன்- சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்.
சி. வி.கணேசன்- தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்.
த. மனோ - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
மா. மதி வேந்தன்- சுற்றுலாத்துறை அமைச்சர்
என். கயல்விழி செல்வராஜ்- ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

-பிரியா


கருத்துகள் இல்லை: