வியாழன், 6 மே, 2021

மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சரின் வாகன தொடரணியை தாக்கி ஓட ஓட துரத்திய மக்கள்

 Rayar A  - /tamil.oneindia.com : கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் முரளிதரன் கார் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை விரட்டியடித்தனர். மேற்கு வங்கத்தில் அசத்தல் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக அரியணையில் அமர்ந்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ்.
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சாதித்து முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் கடந்த 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும்போதே வன்முறை சம்பவங்கள் துளிர்விட ஆரம்பித்தன.
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்று விட்டார் என்று அறிந்தவுடன் பாஜக தொண்டர்கள்-திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே வன்முறை வெடித்தன.
அதன்பின்பு இது மாநிலம் முழுமைக்கும் பரவியது
திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவினர் வீடுகள், கடைகளை சூறையாடிவிட்டதாக கூறப்படுகிறது.


மேலும் பாஜகவினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வருகின்றன.
மேற்கு வங்கம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் திரிணாமுல் கட்சியும், பாஜகவும் வன்முறைக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய மந்திரி வி.முரளிதரன் மேற்கு வங்கத்துக்கு தனது காரில் பயணம் மேற்கொண்டார். மிட்னாப்பூர் மாவட்டம் பஞ்ச்குடி பகுதியில் சென்றபோது அங்கு இருந்தவர்கள் கட்டைகள் மூலம் .முரளிதரன் காரை தாக்க ஆரம்பித்து விட்டனர். சில கட்டைகள் காரின் உள்ளே வந்து விழுந்தது. மேற்கொண்டு செல்ல முடியாததால் டிரைவர் காரை திருப்பினார். ஆனலும் அங்குள்ள மக்கள் கட்டைகளுடன் மத்திய அமைச்சரின் காரை துரத்தி வந்தனர்.

திரிணாமுல் குண்டர்கள் மத்திய அமைச்சரின் காரை தாக்கி விரட்டியடித்தது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள முரளிதரன், ' திரிணாமுல் குண்டர்கள் எனது காரை தாக்கினார்கள். பாதுகாப்பு வாகனத்தின் கண்ணாடியை நொறுக்கினார்கள். எனது தனிப்பட்ட அதிகாரியை தாக்கினார்கள். இதனால் பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பினேன் 'என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: