திங்கள், 3 மே, 2021

திமுக மேல் அவதூறு பரப்புவோர் மீது ஏன் வழக்கு போடுகிறார்கள்

 சக்தி ராஜேஸ்வரி  :  KSR பொறியியல் கல்லூரியை கனிமொழி அவர்கள் எழுதிவாங்கியதாக 2013 வாக்கில் ஒரு புரளி கிளம்பியது... அப்போது நான் அங்கே படித்ததால் சில பேர் என்னிடமே கனிமொழி காலேஜா எனக் கேட்டார்கள்..
நான் அப்படி எல்லாம் இல்லை எனச் சொன்னாலும் யாரும் நம்பத் தயாரில்லை.. இதோ நான் அங்கே படித்து முடித்து ஏழு வருடங்கள் ஆகிறது. அதன் நிறுவனர் ரங்கசாமிதான் இப்போதும் தலைவர்.
இதேப் போலத்தான் அன்றைய காலங்களில் திமுக அந்த மெடிகல் காலேஜ் பிடிங்கிடுச்சு, இந்த இன்ஜினியரிங் காலேஜ் பிடிங்கிடுச்சு, சரவண பவனை வாங்கியாச்சு எனப் பேசினார்கள்.. யாரும் அது பொய் என நினைக்கவில்லை..தங்கள் விருப்பப்படி அதைப் பேசி பரவலாக்கினார்கள். அதனால் திமுக மீது ஒரு பயமும் எதிர்ப்பும் வந்தது.
இன்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அதனால் திமுக இழந்தது அதிகம்.. எதைப் பொது வெளியில் பேச வேண்டும், எதை சமூக வலைத்தளங்களில் பேச வேண்டும், கேட்ட செய்தியை எப்படி எழுத வேண்டும், உண்மை செய்தியை எப்படி எழுத வேண்டும் என வரையறை உள்ளது..


நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன், என் காதுக்கு வந்தது எல்லாம் உண்மை என நம்பி எழுதுவேன் என்பது அவதூறே. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு.
திமுக, அதிமுகவோ, பாஜகவோ, காங்கிரஸோ விமர்சனங்கள் வையுங்கள் ஆனால் அது உண்மையா எனப் பாருங்கள். போற போக்கில் கதை அளந்துவிட்டு பிறகு அதனால் எதாவது பாதகம் வந்தால் அதற்காக ஒட்டுமொத்த கட்சியையும் எதிரியாய் பார்க்காதீர்கள்...
சர்க்காரியா கமிஷன்
விஞ்னா ஊழல்
திருட்டு ரயில்
1.76 இலட்சம் கோடி
பாத்திமா பாபு
இப்படி எதோ ஒருவர் பரப்பிய பொய்யால் திமுக இழந்ததது அதிகம்.. அதனால் அவர்கள் மீது அவதூறை கிழப்பும் போது அவர்களுக்கு வலிக்கதான் செய்யும்.. அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டால் அவை பாசிசம் அல்ல..

கருத்துகள் இல்லை: