புதன், 5 மே, 2021

உன்னை நம்பித்தானே வந்தேன் அண்ணா அடிக்காதண்ணா கழட்டி விடுகிறேண்ணா

Kandasamy Mariyappan: எல்லாத்தையும் மேலே உள்ளவன் பாத்துக்குவான்னா, அப்போ கீழே உள்ளவன்லாம், என்று கவுண்டமணி காமெடி ஒன்று...! அதேபோல், திமுகவின் மேற்கு மண்டல தோல்விக்கு காரணம் கவுண்டர் சாதி மற்றும் வன்னியர் சாதி என்று சுருக்கி, திமுகவிற்காக உழைக்கும் அந்த சமூக மக்களின் மனதை புண்படுத்துகின்றனர் சிலர். கோயம்புத்தூர் பகுதிகளில் தோராயமாக, 20-22% வேளாளர்கள்(கவுண்டர்) மட்டுமே உள்ளனர். இவர்களில் 8-10% திமுகவை ஆதரிப்பவர்கள்.!
இசுலாமியர்கள் (10-12%), தலித்கள் 20-22%, நாயுடுகள் (6-8%), மலையாளிகள் (5-7%), வடக்கத்தியர்கள் (2-3%) செட்டியார்கள் (1-2%) மற்றும் சிலர்.
8-10% வேளாளர்களுடன் (கவுண்டர்)
10% இசுலாமியர்கள், 20% தலித்துகள் முழுவதுமாக வாக்களித்திருந்தாலே திமுக வெற்றி பெற்றிருக்குமே.!
அதே போன்று சேலம் பகுதிகளில் 30-35% மட்டுமே வேளாளர்கள்(கவுண்டர்) மற்றும் வன்னியர்கள் உள்ளனர்.
இவர்களில் 12-15% திமுகவை ஆதரிப்பவர்கள்.!
மற்றவர்கள்..!?.?
அந்த பகுதிகளில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பல காரணிகள் உள்ளது.
மேற்கு பகுதிகளில் RSSன் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. வேளாளர்கள், செட்டியார்கள் தாண்டி...
RSS சித்தாந்தத்தை உள் வாங்கும் நாயுடுகள் அதிகம்.
வடக்கத்தியர்கள் முழுவதும் தங்களுடைய தொழில் வளர்ச்சிக்காகவே RSS சித்தாந்தத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றனர்.!
எனவே...
1. உணர்வு பூர்வமான ஒன்றிய, மாவட்ட செயலாளர்கள் வேண்டும்.
2. திராவிட சித்தாந்தம் மற்றும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், நீதிக்கட்சகளின் செயல்பாடுகளை மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்.
3. இளைஞரணியை பலப்படுத்தி, இளைஞர்களை கவர வேண்டும். இளைஞரணி செயலாளர் சகோதரர் உதயநிதி மூன்று மாதத்திற்கு ஒருமுறை அந்த பகுதிகளில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.
4. மகளிரணி செயலாளர் 6 மாதத்திற்கு ஒருமுறை அந்த பகுதிகளில் உள்ள மகளிர்களோடு கருத்தரங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
5. முதலமைச்சர் 6 மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட அல்லது தொடங்கி வைக்க என்று அங்கே பயணிக்க வேண்டும்.
6. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் முதல் தலைமுறையினருக்கு வாக்குரிமை வழங்க கூடாது. இரண்டாவது தலைமுறையிலிருந்து மட்டுமே வாக்குரிமை வழங்க வேண்டும்.
7. பொள்ளாச்சி பாலியல் வழக்கை துரிதப்படுத்தி, சம்பந்தப்பட்ட சிலரை குண்டர் சட்டத்தில் தண்டிக்க வேண்டும்.
உன்னை நம்பித்தானே வந்தேன், என்னை இப்படி செய்து விட்டாயே என்றும்
அண்ணா அடிக்காதண்ணா கழட்டி விடுகிறேண்ணா என்று கூற வைத்தவர்களை குண்டர் சட்டத்திற்கும் மேலே ஏதாவது செய்ய வேண்டும்.
இவைகள் மட்டுமே திமுகவை மிகப்பெரிய வெற்றிக்கு எடுத்து செல்வது மட்டுமில்லாமல்...
அந்த பகுதிகளில் RSSன் தீவிரத்தை குறைக்க முடியும்.!
மேற்கு மண்டல மக்கள், தமிழர்கள்தான்.
 Karthikeya Sivasenapathy

கருத்துகள் இல்லை: