ஞாயிறு, 2 மே, 2021

தமிழ்நாடு கேரளம் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று திராவிட மாநிலங்களின் எழுச்சி!

May be an image of 2 people

தமிழ்நாடு கேரளம் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று திராவிட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் உலகுக்கு ஒரு உரத்த செய்தியை கூறியிருக்கின்றன!
உபகண்டத்தில் மதவாதிகளுக்கும் பாசிஸ்டுகளுக்கும் இனி இடமில்லை என்ற செய்தியை முரசறைந்து கூறியுள்ளார்கள் ..
கேட்க செவி இருப்போர் கேட்டுக்கொள்வார்கள்!
புரிந்து கொள்ளும் மனமுடையோர் தங்கள் கண்களை அகல திறந்து கண்டு கொள்வார்கள்!
சமூகநீதி பாதையில் பயணிக்க இந்த மண்ணின் மைந்தர்கள் தீர்மானித்து விட்டார்கள்!
இம்மாநிலங்களின் இன்றைய தீர்ப்பை உலகம் எழுந்து நின்று வரவேற்கும்!
இந்த மாநிலங்களின் சமூகநீதி பயணம் இனி எந்த தடைகளையும் உடைத்து ஏறிய தயங்காது.
இவர்களின் பயணத்தை தடுக்க கருதும் எந்த சக்தியும் அடையாளம் இழந்து காலாவதியாகும்.
இன்றைய நாள் இவர்கள் புதிய உலகுக்கு கூறிய செய்தி மானுட மேன்மைக்கானது!
நான் வட அமெரிக்க கண்டத்தில் தற்போது இருக்கிறேன்!
ஆனால் மனதளவில் எப்போதும் இந்த திராவிட மாநிலங்களின் மக்களுக்கு நெருக்கமாகவே இருக்கிறேன்  
இம் மூன்று மாநிலங்களும் இன்று முழங்கிய அறைகூவலை  நான் எழுந்து நின்று இரு கரம் நீட்டி முழு மனதோடு வரவேற்கிறேன்   
வாழ்க சுயமரியாதை!
வாழ்க சமூகநீதி!
வாழ்க திராவிடம்! செல்லபுரம் வள்ளியம்மை

கருத்துகள் இல்லை: