புதன், 14 ஏப்ரல், 2021

அண்ணல் அம்பேத்கார் பெயரை வெறும் பிராண்டாக சுயநல அரசியலுக்கு பயன்படுத்துகிறார்களா?

May be an image of 3 people and text that says 'APRIL14TH 4TH EQUALITY W DAY SUN NEWS கற்றவை.. பற்றவை.. தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தியாவின் மொழி மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த இந்திய நிலப்பரப்பின் மொழியாகவும் ருந்திருக்கிறது. அது காஷ்மீர் முதல் வரை பேசப்பட்ட மொழி இன்னும் சொல்லப்போனால், அது நாகர்களின் மொழி. வட இந்திய நாகர்கள் தமிழை கைவிட்டு அதனிடத்தில் சமஸ்கிருதத்தை கைகொண்டுவிட்டனர். தென்னிந்தியர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை கைவிடவில்லை. இந்த மனதிற் கொ ண்டால், தென்னிந்தியர்களுக்கு மட்டும் ஏன் திராவிடம் என்னும் பெயர் சுட்டப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆக, நாகர்கள் என்பது இனத்தை சுட்டும் பெயர், திராவிடம் என்பது மொழியியல் பெயர். தாசர்கள் என்பவர்கள்தான் நாகர்கள், நாகர்கள்தான் திராவிடர்கள். இந்தியா வை பொறுத்தவரை இரண்டே இனங்கள்தான் ஒன்று ஆரியர்கள் மற்றொன்று திராவிடர்கள். டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் Ph.D L.L.D D.Sc, D.Litt, Barrister-at-Law SUNNEWSTAMIL SUNNEWS • sunnewslive.in'
அண்ணல் அம்பேத்காரை படிப்பதற்கோ பின்பற்றுவதற்கோ முயல்பவர்களை விட அவரது பெயரை ஒரு பயன்படுத்தி அவரின் நோக்கத்தை மடைமாற்றம் வேலையை செய்பவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கிறது. .
எப்படி பார்ப்பனர்கள் எல்லாவற்றையும் விழுங்கி (புத்தரை விநாயகர் - விஷ்ணுபெருமாள்) என்று) ஏப்பமிட்டார்களோ,
அதே பணியில்  அண்மைக்கால பெரியார்களையும் விழுங்க முயல்கிறார்கள்.
திருவள்ளுவரையே  விழுங்கும் முயற்சியில் காலத்திற்கு காலம் ஈடுபடுகிறார்கள்  
வள்ளுவரும் கூட ஒரு சனாதன இந்து தர்மத்தின் வழிதான் போதித்தவர் என்று கூற முயல்கிறார்கள்.
அய்யன் திரு வள்ளுவருக்கே இந்த கதி என்றால் அம்பேத்கார் போன்றவர்களின் நிலைமை எப்படி இருக்கும்?
இங்கே முக்கியாமாக நான் குறிப்பிடும் விடயம் ஏதோ வடஇந்திய பார்ப்பனர்களையோ ஆர் எஸ் எஸ் பற்றியதோ அல்ல!
தற்போது தமிழ்நாட்டில் பலரும்  அம்பேத்காரை படித்து அவரது கொள்கைகளை உள்வாங்குவதை விட அவரை ஒரு பிராண்ட் ஆக பயன்படுத்தி தங்கள் அரசியல் சுயலாபத்திற்கு பயன்படுத்துவே முயல்கிறார்கள்.

இந்த வியாபாரிகளிடம் இருந்து அம்பேத்காரை காக்கவேண்டும்  அதாவது அம்பேத்காரின் சிந்தனைகளை காக்கவேண்டும்
அம்பேத்கார் பெயரை உச்சரிப்பதோ அல்லது ஜெ பீம் என்று கூறுவதோ மட்டும் அவரது சித்தாந்தங்களில் கரைக்கண்டு விட்டதாக யாரும் கருதிவிட கூடாது.

அதிலும் அம்பேத்கார் பெயரை கூறும் பலர் அசல் சீமான் கையாண்ட அதே பாணி நுனிப்புல் பொய் பிரசார உத்தியில்தான் நம்பிக்கை வைத்து செயல்படுகிறார்கள்.

இவர்கள் பின்னால்  செல்லும் இளைஞர்களும் கூட ஒருவகையில் சீமான் பாணி அடாவடி இளைஞர்களாகவே வளர்க்க படுகிறார்களோ என்ற கவலை உண்டாகிறது

இவர்கள் நிச்சயம் அம்பேத்காருக்கு துரோகம் செய்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: