ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

திருமா பாதிக்கப்படட மக்களின் பக்கம் நின்றாரா? இல்லையே?

திருமா பாதிக்கப்படட மக்களின் பக்கம்  நின்றாரா?     அவர் தனது மனசாட்சியை அடகு வைக்காமல் கூறவேண்டும்.
வெருகல் படுகொலைகள் நினைவு கூறப்படும் இன்றைய நாளில் அந்த படுமோசமான கொலைவெறியாட்டம் அரங்கேறி கொண்டிருந்தவேளையில் புலிகளை புகழ் பாடிக்கொண்டிருந்தவர் திருமா.
திருமா மட்டுமல்ல நெடுமாறன் வைகோ மணியரசன் மற்றும் ஏராளமான பெரியார்வாதிகள் என்று தம்மை தாமே கூறுக்கொள்வோர்கள் எல்லோரும் புலிகளின் இது போன்ற படுபாதகங்களை எல்லாம் வீரப்போர் என்று தமிழ்நாட்டிலும் உலகம் முழுவதும் பரப்புரை செய்தவர்கள்.
புலிகளுக்கு கொஞ்சம் கூட சிந்திக்கும் வாய்ப்பை வழங்காமல் தங்களின் அரசியல் மற்றும் சுயலாபங்களுக்காக ஏராளாமான தமிழர்களின் படுகொலைகளுக்கு தூபம் போட்ட போர்குற்றவாளிகளில் திருமாவும் ஒருவர்தான்.
இதற்கு இப்போது இவர்கள் என்னன்னவோ காரணங்கள் கூறலாம். ஆனாலும் கூட அவர்கள் இதுவரை எந்த காரணங்களும் கூற வாயை திறந்ததே இல்லை.
இதுதான் இவர்களின் மாபெரும் அயோக்கியத்தனம்.
வரலாற்று அவலங்களை அப்படியே கடந்து போய்விடலாம் என்று திருமா நெடுமா, வைகோ, போலி பெரியார்வாதிகள் எல்லாம் கருதினால் அது ஒரு அவமானம்!
ஒரே ஒரு தடவைத்தானும் தங்களின் வரலாற்று தவறுகளை இட்டு ஒரு பொதுமன்னிப்பாவது கேட்டார்களா?  
கலைஞர் ஒற்றை ஆளாக நின்று புலிகளின் சகோதர படுகொலைகளை கடும்யாக கண்டித்து சகோதர படுகொலையாளர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று பல தடவை கூறினார்

அம்மையார் ஜெயலலிதா கூட புலிகளின் மனித குலவிரோத செயல்களை பல தடவை கண்டித்தார்.
எனவே திருமா முதலில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கட்டும் . நியாயத்தின் பக்கம் நிற்கட்டும்!   

கருத்துகள் இல்லை: