திங்கள், 12 ஏப்ரல், 2021

கர்ணன் - 95 இல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன் குளம் சம்பவத்தை 97 இல் திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டிய திரைப்படம்

கொடியன்குளம் கலவரத்திற்கு பின்பு தான் ஜெயலலிதா தன் வாழ்நாளில் கண்டிராத எதிர்ப்பை சந்தித்தார் !

  சமூகத்திற்கு ஒரு செய்தியை கொடுக்க எண்ணுவோர் முதலில் நேர்மையை கடைப்பிடிக்கவேண்டும். கலைஞரை இருவர் படத்தில் வில்லன் பிரகாஷாக காட்டி துர்பிரசாரம் செய்ததால் மணிரத்தினத்தின் அந்த பிரமாண்ட படமே வீணாய் போனது (ஜிவி தற்கொலை செய்துகொண்டது தெரிந்ததே).
மணிரத்தினம் சங்கர் கமலஹாசன் பாலச்சந்தர் போன்றவர்கள் வழக்கமாக செய்யும் நச்சு திரைகளுக்கு சற்றும் குறையாத அளவில் தற்போது மாரி செல்வராஜின் படமும் வந்துள்ளது
ஆண்டு மாற்றம் தற்செயலாக நடந்த தவறு அல்லது அது ஒரு சிறு தவறு என்றெல்லாம் கூறுவது இவர்களின் அறியாமைதான் .
மக்கள் இந்த மடைமாற்றத்தை எதிர்த்து  விமர்சிக்காமல் அப்படியே கடந்து போய்விடுவார்கள் என்று கருதினால் உங்கள் புரிதலில் கோளாறு இருக்கிறது என்றேதான் கூறுவேன்.
தற்போது சமூகவலை என்ற பொதுமக்கள் மேடை இருக்கிறது .
முன்பு பாலச்சந்தர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இனி பாலச்சந்தர்களுக்கே கிடைக்காது.  
மக்கள் விழித்து விட்டார்கள்.
அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அல்லது எம்ஜியார் ஆட்சிக்காலத்தில் நடந்த அக்கிரமங்களை கலைஞர் திமுக தலையில் போடலாம் என்று கனவுகண்டால்    
அது கனவாகவே இருக்கும்

கருத்துகள் இல்லை: