புதன், 14 ஏப்ரல், 2021

Admk மின்சார கொள்ளை .. அதிமுக அரசு கமிஷனுக்காக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிய அவலம்

சாய் லட்சுமிகாந்த்  :   கடுமையான மின்வெட்டுக்கு தமிழகத்தை உட்படுத்திச் சென்றுள்ளனர் அடிமை அதிமுக அரசு. அடிக்கடி மின்மிகை மாநிலம் என்பார்களே! அது நமது தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறோம் என்று பொருள் அல்லவாம். தேவைக்கும் அதிகமாக தனியாரிடம் வாங்கிக் கொள்கிறோம் என்றுதான் பொருள்.
இப்போது காபந்து அரசு என்பதாலும், அடுத்து திமுகவே ஆட்சிக்கு வரும் என்பதாலும் தனியார்கள் மின்சாரத்தை அளிக்க தயங்குகின்றனராம்! சந்தை விலையை விட அதிக விலை என்பதால் திமுக அரசிடம் பில் வாங்க முடியுமா எனும் அச்சம்தான் காரணமாம்! ஒரு மின் துறை உயர் அதிகாரி இதைவிட அதிர்ச்சியான தகவல்களை சொல்கிறார்.
தற்போது 30% மின் தட்டுப்பாடு இருப்பதால் scheduling முறைப்படி பகுதி வாரியாக 4 மணி நேர மின் வெட்டும், பராமரிப்பு எனும் பெயரில் வாரத்துக்கு ஒருநாள் மின்வெட்டும் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாம். தவிர, 110 KVA டிரான்ஸ்ஃபார்மர்களின் திடீர் பழுதுகள் வழக்கத்தை விட மிக அதிகமாக உள்ளனவாம்.
இவை திட்டமிட்ட சதி என்றும் தேர்தல் முடிவு வந்தபிறகு பதவி ஏற்புநாள் முதல் முழுமையான blackout வரும் என்றும் எச்சரிக்கிறார். திமுக ஆட்சி எனில் இதை கட்டாயம் சந்திக்க நேரிடும் என்றும், அதிமுக ஆட்சியே தொடர்ந்தால், வழக்கம் போல தனியார் மின்சாரம், கைமேலே கமிஷன் என்பதும்தான் திட்டமாம்!


இந்தச் சதித் திட்டத்தை ஒருங்கிணைக்கும் ஒரு பெண் உயரதிகாரி முதல் வேறு சிலரின் பெயர் பட்டியலும் கிடைத்துள்ளது. ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பார் கலைஞர். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் கூட, மின் உற்பத்தித் திட்டங்களை நிறைவேற்றாமல் தனியாரிடம் மின்சாரம் வாங்கி கொழுத்த சதிகாரர்கள் மக்கள் மன்றத்தில் மட்டும் அல்லாமல், நீதிமன்றத்திலும் பதில் சொல்லியே தீரணும்.
எந்தச் சவாலையும் எதிர்கொள்ளும் வலிமை தலைவர் தளபதிக்கு உண்டு. இதையும் எதிர்கொள்வார். நிலைமை சீரடையும்வரை தனியாரிடம் மின்சாரம் வாங்க திமுகவும் தயங்கக்கூடாது.
மக்கள் பணத்தை முறையாக செலவிட எண்ணி திமுக கொண்டு வந்த சிக்கன நடவடிக்கைகளும், 2 மணி நேர மின்வெட்டுகளும் நமக்கு கெட்ட பெயரையே தந்தது. நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை இப்படியே செல்வோம்.
நிர்வாகத்தின் உள்ளுடம்பு அரித்துச் சாவது குறித்து இங்கே யாருக்கும் கவலையில்லை. மேல்பூச்சு மேக்கப்தான் முக்கியம்.
@skpkaruna in Twitter

கருத்துகள் இல்லை: