செவ்வாய், 13 ஏப்ரல், 2021

பெரியார் நெடுஞ்சாலை Grand Western Trunk Road என மாற்ற ‘காபந்து’ அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?: மு.க. ஸ்டாலின் கண்டனம்

ஈவெரா பெரியார் சாலை பெயர் மாற்றம்மாலைமலர் : சென்னை பாரிஸ் முனையில் இருந்து பூந்தமல்லி செல்லும் நெடுஞ்சாலையில் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை எனப் பெயரிடப்பட்டிருந்தது. தற்போது அந்த சாலைக்கு Grand Western Trunk Road எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரு ஸ்டாலின், அவரது டுவிட்டர் பக்கத்தில் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்
மேலும் அவர் . எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா? தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா?  உடனடியாக மாற்றிடுக!
தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும்!’’ எனப் பதிவிட்டுள்ளார்

பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்ற ‘காபந்து’ அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது?: மு.க. ஸ்டாலின் கண்டனம்

கருத்துகள் இல்லை: